Sunday 12 December 2010

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

பெருங் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கும் பல்வேறு கண்டங்களில் விலங்கினங்கள் காணப் பபடுவது நீண்ட காலமாகவே ஒரு புதிராக இருந்தது.


இந்தப் புதிருக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெக்னர் என்ற ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர் முன்னொரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டம் கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ; அதன் பிறகு அந்தப் பெரிய கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள எழு கண்டங்களும் உருவாகின என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.


ஆனால் இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப் பட்ட மரபணு ஆய்வுகளில் விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் குறிப்பாக எந்த எந்த காலக் கட்டத்தில் தோன்றின என்பதை அறிய முடிந்தது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கண்டங்கள் பிரிந்தாகக் கருதப் பட்ட கால கட்டத்திற்குப் பிறகும் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய புதிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவர வகைகள் பல்வேறு கண்டங்களில் காணப் படுகிறது.


எனவே தற்பொழுது புதிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கடல் நீரோட்டங்கள் மூலம் தற்செயலாக மற்ற கண்டங்களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள்.

ஆனாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் காணப் படும் வாதாம் பருப்பு வகையைச் சேர்ந்த மாக்கடமியா என்ற தாவரமும் தென் ஆப்பிரிக்காவில் காணப் படும் பிராபிஜம் என்ற தாவரமும் தென் அமெரிக்காவில் காணப் படும் பனாப்சிஸ் என்ற தாவரமும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பொது மூதாதையில் இருந்து தோன்றியிருப்பது மரபணு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஆனால் இந்தக் கண்டங்கள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தனித் தனியாகப் பிரிந்து விட்டது என்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் காணப் படும் மாக்கடமியா மரத்தின் கொட்டையானது கல்லைப் போன்று கனமாக இருப்பதால் காற்றின் மூலமாகவோ அல்லது கடல் வழியாகவோ பரவ இயலாது என்பதால் மாக்கடமியா தாவரம் எப்படி ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு பரவியது என்பதை கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்களால் விளக்க இயலவில்லை.


கடலுக்கு அடியில் டைனோசர்.

குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் கடலடித் தரையில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.


அதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து தோண்டி எடுக்கப் பட்ட, இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.


எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.

இவ்வாறு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே விலங்கினங்களும் தாவர வகைகளும் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவியிருகின்றன.


அதே போன்று இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.


கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நீர் கடலில் கலப்பதால்தான் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.


பூமி தோன்றி நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகியிருப்பது புவிப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதின் மூலம் தெரியவந்திருகிறது.

மேலும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலப் பகுதிகள் கடல் மட்டத்தில் இரண்டாயிரம் அடி உயரத்திலேயே அமைந்திருகிறது.


இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருப்பதுடன் மனிதர்கள் வாழ்ந்த நிலப் பகுதிகளும் இன்று இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.

எனவே பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

No comments:

Post a Comment