Friday 9 January 2015

ஒரு கண்டு பிடிப்பின் கதை...

ஒரு மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் படத்துடன் வெளியான கட்டுரையியில்,அந்த மலையானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.அதைப் படித்ததும்,அப்படிஎன்றால் ,கண்டங்களின் மேல் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததே காரணம் என்று எனக்குத் தோன்றியது.எனவே கண்டங்கள் எல்லாம் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருபதகக் கூறப் படுவது குறித்து சந்தேகம் எழுந்தது.அதனால் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கங்கள் மற்றும் அதற்கு குறிப்பிடப் படும் ஆதாரங்கள் பற்றி படித்தேன்.

குறிப்பாக டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுகளிலும் தீவுக் கண்டங்களிலும் கணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.இந்த நிலையில் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசரின் புதை படிவங்களும் மரங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதே நேரத்தில் மடகாஸ்கர் தீவு உள்பட மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு சரியான விளக்கம் கூறப் படவில்லை என்பதும் தெரிய வந்தது.அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும் விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை என்பதும் தெரிய வந்தது.எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்ததாலும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததாலேயே ,டைனோசர்களால் தீவுஅழுக்கும் தீவுக் கண்டங்களுக்கும் இடப் பெயர்ந்து இருக்கின்றன என்பது உறுதியாகத் தெரிய வந்தது.

இந்த நிலையில் கண்டத் தட்டுகள் நகர்சிக் கருத்திற்கு எதிராக,நில அதிர்ச்சி ஆதாரம் இருப்பது தெரிய வந்தது.அதே போன்று கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதும்,கண்டதத் தட்டு நகர்ச்சி கருத்துக்கு முரணாக இருப்பது தெரிய வந்தது.இந்த நிலையில்,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஹைத்தி மற்றும் இந்தோனேசியாப் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிகளுக்கும் புவியியலாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலாமல் இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்தது.

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ,மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற உருவம் கொண்ட,மெசோசாராஸ் என்ற விலங்கின் புதை படிவங்கள்,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்திலும்,அட்லாண்டிக் கடலுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டது.

இதன் அடிப்படையில்,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது.எனவே மெசோசாரஸ் விலங்கின் புதை படிவங்கள் ,தென் அமெரிக்கக் கண்டத்திலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் காணப் படுவதற்கு,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்த இரண்டு கண்டங்களும்,ஒன்றாக இணைந்து ,இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே

காரணம் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற  கால நிலை இயலாளர்,ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அத்துடன்,ஒரே வகையான கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்கும் வண்ணம்,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.

பின்னர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அந்த நிலப் பரப்புக்கு,பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பாஞ்சியாக் கண்டம் இரண்டாகப் பிரிந்ததாகவும்,அதனால் லாரேசியா ,மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு கண்டங்கள் உருவானதாகவும்,அதில் லாரேசியாக் கண்டமானது,வட பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும் ,அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியாக் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களை உள்ளடக்கிய ,யூரேசியக் கண்டம் உருவாகி,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் ,வெக்னர் கூறினார்.

லாரேசியா போன்றே பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து உருவான கோண்டுவானாக் கண்டமானது ,தென் பகுதியை நோக்கி நகர்ந்து சென்ற பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தனித் தனியாகப் பிரிந்ததால்,தென் அமேரிக்கா,ஆப்பிரிக்கா,இந்திய மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.

அதே போன்று,ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவின், அறுபது சதவீத நிலப் பகுதியானது,  பனியாறுகளால் மூடப் பட்டுள்ளது.ஆனால் அந்தத் தீவில் முப்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில்,சைகேட் என்று அழைக்கப் படும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடிய தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் ,அந்தத் தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,வட பகுதியை நோக்கி நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததே காரணம் என்றும், டாக்டர் ஆல்பிரட் வெக்னர் விளக்கம் கூறினார்.

அனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்கள் கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர வில்லை என்றும்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு தொடர்ச்சியாக வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி ,எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.இந்தக் கருத்து பிளேட் டெக்டானிக் தியரி என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் மூன்று முக்கிய ஆதாரங்கள் மூலம் பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பதும்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
1-புதை படிவ ஆதாரங்கள்.

இந்த விளக்கத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள சைபீரியாவின் வட பகுதியும் கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டது.இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் எழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.

குறிப்பாக,ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த ,டைனோசர்கள்,முட்டைகளை இடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன.ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொறிவதற்கு முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் கடுங் குளிர் நிலவும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின் , வட பகுதியில் உள்ள,அலாஸ்காவின் கொல் வில்லி ஆற்றுப் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலை மைனஸ் இருபது டிகிரி.எனவே நிச்சயம் உறை பனி வெப்ப நிலையில் டைனோசர்களின் முட்டைகள் பொறிந்து இருக்க சாத்தியம் இல்லை.எனவே டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.அதே போன்று யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டதிற்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு,பூமத்திய ரேகைப் பகுதியில் காணப் படுவதைப் போன்ற அடர்ந்த காடுகளும்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருந்திருப்பதும்,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அத்துடன்,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் ,தொடர்ந்து பகலும்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி,தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே டைனோசர்கள் காலத்திற்கு பிறகே,பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருப்பதும் துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்குப் பூமிக்கு அருகில் சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணமாக இருந்திருக்கலாம்.

தற்பொழுது துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.காரிபு என்று அழைக்கப் படும் பனி மான்களைப் போன்று டைனோசர்களும்,குளிர் கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்குமோ என்று கருதப் பட்டாலும் கூட ,மிகவும் இள வயது டைனோசர்களின் புதை படிவங்கள் துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,அந்தக் கருத்து நிராகரிக்கப் பட்டுள்ளது.

அதே போன்று பனிக் கரடிகளைப் போன்று  டைனோசர்களும் ஒரு வேளை குளிர் கால உறக்கத்தில் ஆழ்ந்திருக்குமா என்ற கருத்தும் விலங்கியல் வல்லுனர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது.
2-நில அதிர்ச்சி இயல் ஆதாரம்.

கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து ,நாசாவைச் சேர்ந்த பு்வியியலாளர்கள் ,ஒரு வரை படத்தையும் தயாரித்து வெளியிட்டு இருக்கின்றனர்.அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இந்த நிலையில் நாசா வெளியிட்ட இன்னொரு வரை படத்திலும்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

3-புவியியல் அமைப்பு ஆதாரம்.

இதே போன்று,கடல் தளத்தின் மேல், எரிமலைத் தொடர்கள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு,கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

உதாரணமாகப் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும்,லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்து,ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரும்,கேமரோன் எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடல் தளமும்,ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த அனாகிம்,எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தரையும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ 

Thursday 8 January 2015

ஒரு கண்டு பிடிப்பின் கதை.

ஒரு மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் படத்துடன் வெளியான கட்டுரையியில்,அந்த மலையானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.அதைப் படித்ததும்,அப்படிஎன்றால் ,கண்டங்களின் மேல் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததே காரணம் என்று எனக்குத் தோன்றியது.எனவே கண்டங்கள் எல்லாம் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருபதகக் கூறப் படுவது குறித்து சந்தேகம் எழுந்தது.அதனால் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கங்கள் மற்றும் அதற்கு குறிப்பிடப் படும் ஆதாரங்கள் பற்றி படித்தேன்.

குறிப்பாக டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுகளிலும் தீவுக் கண்டங்களிலும் கணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.இந்த நிலையில் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசரின் புதை படிவங்களும் மரங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.அதே நேரத்தில் மடகாஸ்கர் தீவு உள்பட மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு சரியான விளக்கம் கூறப் படவில்லை என்பதும் தெரிய வந்தது.அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும் விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை என்பதும் தெரிய வந்தது.எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்ததாலும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததாலேயே ,டைனோசர்களால் தீவுஅழுக்கும் தீவுக் கண்டங்களுக்கும் இடப் பெயர்ந்து இருக்கின்றன என்பது உறுதியாகத் தெரிய வந்தது.

இந்த நிலையில் கண்டத் தட்டுகள் நகர்சிக் கருத்திற்கு எதிராக,நில அதிர்ச்சி ஆதாரம் இருப்பது தெரிய வந்தது.அதே போன்று கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதும்,கண்டதத் தட்டு நகர்ச்சி கருத்துக்கு முரணாக இருப்பது தெரிய வந்தது.இந்த நிலையில்,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஹைத்தி மற்றும் இந்தோனேசியாப் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிகளுக்கும் புவியியலாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலாமல் இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்தது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ,மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற உருவம் கொண்ட,மெசோசாராஸ் என்ற விலங்கின் புதை படிவங்கள்,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்திலும்,அட்லாண்டிக் கடலுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டது.

இதன் அடிப்படையில்,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது.எனவே மெசோசாரஸ் விலங்கின் புதை படிவங்கள் ,தென் அமெரிக்கக் கண்டத்திலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் காணப் படுவதற்கு,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்த இரண்டு கண்டங்களும்,ஒன்றாக இணைந்து ,இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற  கால நிலை இயலாளர்,ஒரு விளக்கத்தைக் கூறினார்.

அத்துடன்,ஒரே வகையான கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்கும் வண்ணம்,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.

பின்னர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அந்த நிலப் பரப்புக்கு,பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பாஞ்சியாக் கண்டம் இரண்டாகப் பிரிந்ததாகவும்,அதனால் லாரேசியா ,மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு கண்டங்கள் உருவானதாகவும்,அதில் லாரேசியாக் கண்டமானது,வட பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும் ,அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியாக் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களை உள்ளடக்கிய ,யூரேசியக் கண்டம் உருவாகி,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் ,வெக்னர் கூறினார்.

லாரேசியா போன்றே பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து உருவான கோண்டுவானாக் கண்டமானது ,தென் பகுதியை நோக்கி நகர்ந்து சென்ற பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தனித் தனியாகப் பிரிந்ததால்,தென் அமேரிக்கா,ஆப்பிரிக்கா,இந்திய மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.

அதே போன்று,ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவின், அறுபது சதவீத நிலப் பகுதியானது,  பனியாறுகளால் மூடப் பட்டுள்ளது.ஆனால் அந்தத் தீவில் முப்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில்,சைகேட் என்று அழைக்கப் படும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடிய தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் ,அந்தத் தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,வட பகுதியை நோக்கி நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததே காரணம் என்றும், டாக்டர் ஆல்பிரட் வெக்னர் விளக்கம் கூறினார்.

அனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்கள் கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர வில்லை என்றும்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு தொடர்ச்சியாக வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி ,எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.இந்தக் கருத்து பிளேட் டெக்டானிக் தியரி என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் மூன்று முக்கிய ஆதாரங்கள் மூலம் பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பதும்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
1-புதை படிவ ஆதாரங்கள்.
இந்த விளக்கத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள சைபீரியாவின் வட பகுதியும் கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டது.இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் எழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.

குறிப்பாக,ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த ,டைனோசர்கள்,முட்டைகளை இடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன.ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொறிவதற்கு முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் கடுங் குளிர் நிலவும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின் , வட பகுதியில் உள்ள,அலாஸ்காவின் கொல் வில்லி ஆற்றுப் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலை மைனஸ் இருபது டிகிரி.எனவே நிச்சயம் உறை பனி வெப்ப நிலையில் டைனோசர்களின் முட்டைகள் பொறிந்து இருக்க சாத்தியம் இல்லை.எனவே டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.அதே போன்று யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டதிற்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு,பூமத்திய ரேகைப் பகுதியில் காணப் படுவதைப் போன்ற அடர்ந்த காடுகளும்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருந்திருப்பதும்,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அத்துடன்,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் ,தொடர்ந்து பகலும்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி,தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே டைனோசர்கள் காலத்திற்கு பிறகே,பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருப்பதும் துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்குப் பூமிக்கு அருகில் சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணமாக இருந்திருக்கலாம்.

தற்பொழுது துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.காரிபு என்று அழைக்கப் படும் பனி மான்களைப் போன்று டைனோசர்களும்,குளிர் கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்குமோ என்று கருதப் பட்டாலும் கூட ,மிகவும் இள வயது டைனோசர்களின் புதை படிவங்கள் துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,அந்தக் கருத்து நிராகரிக்கப் பட்டுள்ளது.

அதே போன்று பனிக் கரடிகளைப் போன்று  டைனோசர்களும் ஒரு வேளை குளிர் கால உறக்கத்தில் ஆழ்ந்திருக்குமா என்ற கருத்தும் விலங்கியல் வல்லுனர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது.
2-நில அதிர்ச்சிஇயல் ஆதாரம்.