Tuesday 24 November 2009

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த கடல் மட்டம், தொடர்ந்து உயர்ந்து, தற்பொழுது மனிதர்கள் வசித்த நிலப் பகுதிகளையும் மூழ்கடித்து இருப்பது, பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.


கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது தீவுகளுக்கு இடையே இருந்த நிலத் தொடர்பு வழியாகவே மண்புழுக்கள் பல தீவுகளுக்குப் பரவியிருகின்றன.

மண்புழுக்களின் தோலில் உள்ள ஈரப் பசை , மண்ணுக்கு அடியில் இருக்கும் இடைவெளிகளில் உள்ள காற்றை கவரும் பொழுது, பிராண வாயு மண்புழுவின் இரத்தத்தில் கலந்து சுவாசம் நடை பெறுகிறது.

எனவே மண் புழுக்களால் கடல் பகுதியைக் கடக்க இயலாது.

குறிப்பாக மண் புழுவின் உடலில் சுரக்கும் திரவத்திற்கும் ஒட்டும் தன்மையும் குறைவு.எனவே மண் புழுக்களால் சுவற்றில் கூட ஏற இயலாது.எனவே காற்றில் பறக்கக் கூடிய இலை போன்ற எதன் மீதும் ஒட்டிக் கொண்டு பறந்து சென்றும் தீவுகளை அடைய இயலாது.


இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் , அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்து இருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவிற்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மண்புழுக்கள் சென்று இருப்பதுடன்,இன்று கெர்கூலியன் தீவில் மட்டுமே காணக் கூடிய தனி இனமாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது.


குறிப்பாக கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் அல்லது தாவரங்கள் மூலமாகவும் மண் புழுக்களால் கடல் பகுதியைக் கடக்க இயலாது.

ஏனென்றால் மண் புழுவானது மடக்கிப் போன மண்ணை அப்படியே விழுங்கி அதில் உள்ள சத்துப் பொருட்களை உறிஞ்சி வாழ்கின்றன.மண் புழுக்கள் மண்ணை விழுங்குவதால் அதன் எடையும் அதிகரிக்கிறது.

மேலும் எந்தப் பொருளின் மேலும் பற்றிக் கொள்வதற்கான உறுப்பு எதுவும் மண் புழுவிற்கு இல்லை.எனவே கடலில் மிதந்து செல்லும் மரக் கிளை போன்றவைகளின் மூலமாகவும் மண் புழுக்களால் கடலைக் கடந்து தீவுகளுக்குப் பரவியிருக்க இயலாது.


காற்றின் மூலமாகவோ அல்லது கடல் வழியாகவோ பரவ இயலாத மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்து இருக்கும் ஒரு எரிமலைத் தீவிற்குச் செல்ல முடிந்தது?

அதே நேரத்தில் மண் புழுவின் தோல் மெல்லியதாக இருப்பதால், காற்றினாலும் சூரிய ஒளியினாலும் மண் புழுக்களின் தோலில் உள்ள ஈரப் பசை உலரும் பொழுது, மண் புழுவால் காற்றை தோலினால் கவரவோ சுவாசிக்கவோ இயலாமல் மண் புழு விரைவில் இறந்து விடும்.


எனவே அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் இருக்கும் கெர்கூலியன் எரிமலைத் தீவில்,உலகில் வேறு எங்குமே காண இயலாத தனி வகை மண் புழுக்கள் காணப் படுவது , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதையும்,அதனால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்து,தரை வழியாகவே மண் புழுக்கள் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்து இருக்கும் கெர்கூலியன் தீவிற்குப் பரவியிருப்பதையே , கெர்கூலியன் தீவில் காணப் படும் தனி வகை மண் புழுக்கள் எடுத்துக் காட்டுகிறது.


இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருக்கிறது.

மேலும் கெர்கூலியன் தீவானது, கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கிறது.


கடலுக்கு அடியில் இருக்கும் கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலைப் பாறைப் படிவுகளில் இருந்து , மரங்களின் கருகிய பாகங்கள் , விதை மற்றும் மகரந்தத் துகள்களை, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எடுத்து இருகின்றனர்.


கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் உள்ள பாறைப் படிவுகளில், நிலத்தின் மேல் வளரும் மரங்களில் புதை படிவங்கள் இருப்பது ; இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதையும், அதனால் தற்பொழுது கடலுக்கு அடியில் மூகிக் கிடக்கும் கெர்கூலியன் கடலடிப் பீட பூமியும் கூட, கடல் மட்டத்திற்கு மேலே ஒரு தீவாக இருந்து இருப்பதையுமே,கெர்கூலியன் கடலடிப் பீட பூமியில் உள்ள, இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் இருக்கும் மரங்களில் புதை படிவங்கள் எடுத்துக் காட்டுகிறது.

எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதும் ,கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக மண் புழுக்கள் கெர்கூலியன் தீவிற்குப் பரவியிருப்பதும், அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் நிரூபணமாகிறது.

மேலும் கெர்கூலியன் எரிமலையும் கடலடிப் பீட பூமியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து தற்பொழுது தீவாக உருவாகியிருப்பதும் நிரூபணமாகிறது.

கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் ஏன் உயர்ந்தது?

பூமியின் மேல் பல இடங்களில் சுடு நீர் ஊற்று இருப்பதைப் போலவே கடலுக்கு அடியிலும் பல்லாயிரக் கணக்கில் சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகிறார்கள். குறிப்பாக கடலுக்கு அடியில் எரிமலைகளுக்கு அருகில் அதிக அளவில் சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

குறிப்பாக நிலத்தின் மேல் உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளிவரும் நீரானது ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து வெளிவரும் நீர் என்பதை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர், பகுப்பாய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறார்.

எனவே கடல் தரைக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகளாக உருவாகும் பொழுது, பாறைக் குழம்பில் இருந்து வெளிவிடப் படும் நீர் ,கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளிவந்து, கடலில் கலந்ததாலேயே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.


பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டுக் கடற்பகுதியில் கடலுக்கு அடியில் நூற்றி முப்பது அடி ஆழத்தில் அமைந்து இருக்கும் ஒரு கடலடிக் குகையின் சுவரில், கற்கால மனிதர்கள் வரைந்த குதிரை காட்டெருமை ஆகியவற்றின் ஓவியங்கள் இருப்பதை அந்நாட்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகிறார்கள் .

மேலும் எகிப்து ராணி கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரம், தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதையும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகிறார்கள்.


சென்னைக்கு அருகில் உள்ள மாமல்ல புரத்தில் கூட, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களால் கட்டப் பட்ட கோவில்கள், இன்று கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகிறார்கள்.


மேலும் ஐரோப்பாவின் வெனிஸ் நகரம் நிர்மாணிக்கப் பட்ட பொழுது, தாழ்வாக இருந்த கடல் மட்டம் உயர்ந்து, தற்பொழுது நகருக்குள் புகுந்து இருப்பதால், அந்நகரில் வசிக்கும் மக்கள் இன்று கடைகளுக்கும் பள்ளிகளுக்கும் அலுவலகத்திற்கும் படகில் சென்று வருகிறார்கள்.

இன்றும் கூட கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


எனவே பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது கண்ணுக்குத் தெரியும் படியாகவே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

Wednesday 18 November 2009

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

மண்ணுக்கு அடியில் வாழும் மண் புழுக்களால் எதன் மீது ஒட்டிக் கொண்டு பறக்க இயலாது.காரணம் மண் புழுவின் உடலில் இருக்கும் ஈரப் பசைக்கு அவ்வளவு ஓட்டும் தன்மை கிடையாது.

அதே போன்று தரைக்கு அடியில் உள்ள இடைவெளிகளில் இருக்கும் காற்றை சுவாசித்து வாழும் மண் புழுக்களால் கடல் நீரில் மிதக்க இயலாததால் உடனே மூழ்கி இறந்து விடும்.

மேலும் மண் புழுவின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அதிக நேரம் காற்றிலும் வெயிலிலும் மண் புழுக்கள் இருந்தாலும் உயிர் இழக்க நேரிடும்.

இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கும் கூட; மண் புழுக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரவி, புது வகை மண் புழுக்களாக உருவாகியிருப்பது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.