Tuesday 14 December 2010

என் கண்டு பிடிப்பு -விஞ்ஞானி.க.பொன்முடி.

நீர் யானைகளால் நீந்த இயலாது. அவைகளால் மிதக்கவும் இயலாது.

ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மடகஸ்கார் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுகிறது.

நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றிய விலங்கு.

ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் பதினோராயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருகிறது.

நீந்தவோ மிதக்கவோ இயலாத நீர் யானைகளால் தரை வழித் தொடர்பு வழியாகவே ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்குப் பரவ இயலும்.

எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்களானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பதினோராயிரம் அடி தாழ்வாக தாழ்வாக இருந்திருப்பதை நிரூபிக்கிறது.

No comments:

Post a Comment