Thursday, 16 July 2026

tsunami 777

tsunami 777 மதிப்பிற்குரிய ஆசிரியர்/நிருபர்,அவர்களுக்கு, முதலில் எனது பணிவான வணக்கம்! இணையத்தில் கிடைக்கும் சான்றாவணங்களை ஆய்வு செய்த பொழுது,தெற்காசிய சுனாமிக்கு,''கண்டத் தட்டு நகர்ச்சிக் கோட்பாட்டின்'' அடிப்படையில்,நாசா ஆராய்ச்சியாளர்களால், சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில்,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் ''சிமிலு'' தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததால், அந்த நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், நான் தெற்காசிய சுனாமிக்கு உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து இருக்கிறேன். எனது கண்டு பிடிப்பு பற்றி உரிய சான்றுகளுடன் இந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறேன். இந்த செய்திக் கட்டுரையை தங்களின் மேலான ஊடகத்தில் வெளியிட வேண்டு என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! தங்களின் நம்பிக்கையுள்ள, விஞ்ஞானி.க.பொன்முடி. 00000 வணக்கம்! (777 words) நான் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்த தரவுகளை, இணையத்தில் திரட்டி ஆய்வு செய்து வருகிறேன். எனது ஆய்வில்,நான்கு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமிகளுக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன். தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கடை தளங்களுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடல் தரையின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,தனித் தனியாகக் கடல் தளங்களுடன், மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும்,அதே போன்று,தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும் ,தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதும், கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாத நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், எல்லைப் பகுதியை வரையறை செய்ய இயல வில்லை. அதனால், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தரைப் பகுதியானது ''வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி'' என்றும் அழைக்கப் படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒரு தனிப் பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக அடிப்படை ஆதாரமின்றி புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக அந்த பாறைத் தட்டானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா என்று புவியியல் ஆராய்ச்சியார்களால் நிரூபிக்க இயலவில்லை. இந்த நிலையில்,ஜெர்மனில் உள்ள பெர்லினில் உள்ள பிரிபெர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த, ராய்க் பாக்மன் என்ற புவியியலாளர்,கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் பற்றிய, கருத்துக்களை, ஆய்வு செய்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் ஆய்வுக் கட்டுரையானது ,அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களான,லோத்தார் ராட்ச் பாகர் மற்றும் க்ளாஸ் ஸ்டாநக் ஆகியோர்களால் மீளாய்வு செய்யப் பட்டு,இணையத்தில் வெளியிடப் பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்தக் கட்டுரையின் முடிவில் ,கரிபியன் பாறைத் தட்டின் தோற்றம் குறித்து,தீர்க்கமாக, எந்த ஒரு கோட்பாட்டினாலும் கூற முடியாது,என்றும் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்து இருக்கிறார், இந்த நிலையில்,அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டதற்கு,கரீபியன் பாறைத் தட்டு குறிப்பாக எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல்,வட வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்,கரீபியன் பாறைத் தட்டானது, வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கிழக்கு திரையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதாகாவும் ,அதனால் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டதாக, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் ஆய்வுக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதே போன்ற தரைமட்ட மாறு பாடுகளானது, குமுறும் எரிமலைகள் உயர்ந்து இறங்குவதால், எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளும் உயர்ந்து இறங்குவதால், எரிமலைகளைச் சுற்றி, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்களாக உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் ஹைத்தி தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயே, ஹைத்தி தீவில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும் ,தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாதா நிலையில்,கண்டங்களின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி நாசா ஆராய்ச்சியாளர்கள் ஒரு வரைபடத்தையும் வெளியிட்டனர். அந்த வரைபடத்தில்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியைத் தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, அந்தப் பகுதியில் என்ன செயல்பாடு நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை, என்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதன மூலம்,இந்த இரண்டு கண்டகளுக்கும் இடையில் இருக்கும்,கடல் தரைப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதும், கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் இரண்டாவது முறையாகவும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில்,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும், சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது, சுனாமிக்குப் பிறகு கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து இருப்பது செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம் தெரிய வந்தது. அத்துடன் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கடல் தாவரங்களும் கடல் மட்டத்துக்கு மேலாக வெளியில் தெரிந்தது. இந்த நிலையில், அதே சிமிலு தீவில், நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்று,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் ஆயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்களாக உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் சிமிலு தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயே, இந்தோனேசிய பகுதியில்,இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய, நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, இரண்டாவது முறையாகவும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. நன்றி! விஞ்ஞானி.க.பொன்முடி.

No comments:

Post a Comment