Thursday, 16 July 2026

expanding earth report

expanding earth report மதிப்பிற்குரிய ஆசிரியர்/நிருபர்,அவர்களுக்கு, முதலில் எனது பணிவான வணக்கம்! இணையத்தில் கிடைக்கும் சான்றாவணங்களை ஆய்வு செய்த பொழுது,குறிப்பாக ,வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட,புதைப்படிவங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்த பொழுது,பூமி விரிவடைந்து கொன்டு இருப்பது தெரியவந்துள்ளது. எனது கண்டு பிடிப்பு பற்றி உரிய சான்றுகளுடன் இந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறேன். இந்த செய்திக் கட்டுரையை தங்களின் மேலான ஊடகத்தில் வெளியிட வேண்டு என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! தங்களின் நம்பிக்கையுள்ள, விஞ்ஞானி.க.பொன்முடி. 000000 பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது ,கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல்தளங்களுடன் நமரும் பொழுது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தளத்தின் மேல், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா,அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, பதிவாகி இருக்கிறது.இதனால் அந்த பகுதியானது '' வரையறுக்கப் படாத எல்லை '' என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில்இருக்கும் கடல் தரையானது, தொடர்ச்சியாக இருப்பதுடன், கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதும்,நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில்,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் எல்லாம் கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதால்,ஐனோசர்கள் எப்படி கடல் ஆகுதியாக் கடந்து தீவுக்கு கண்டங்களுக்கு சென்றன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று நான்கு கிலோ மீட்டர் பனை அடுக்குகளால் ஓடாய் பட்டு இருக்கும் அண்டார்க்டிக்காக் கண்டத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படி புரிந்தன என்ற கேள்வியும் எழுகிறது. முக்கியமாக அண்டார்க்டிக்காக் கண்டத்தில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில்,யானைக் கூட்டத்தை விடாப் பல மடங்கு தாவரங்களை உணவாக உட்கொள்ளும், டைனோசர்களின் கூட்டத்திற்கு, உணவளிக்கக் கூடிய அளவிற்கு, அடர்ந்த பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது. டைனோசர்கள் இருபத்தி மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிறிய முதலை போன்ற விலங்கினத்தி இருந்து தோன்றியது.அதன் பிறகு,டைனோசர்கள் இனத்தில் பல் வகை டைனோசர்கள் தோன்றியதுடன் ,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பனை மர் உயரமுள்ள டைனோசர்கள் தோன்றி பல கண்டங்களுக்குப் பரவி வாழ்ந்து இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இவ்வாறு தனிசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்கள் எல்லாம் ஒன்றான இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அதன் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலை உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஆசியப் பகுதிகளில் வாழ்ந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதைப்படிவங்களானது, தென் இந்தியாவில் குறிப்பாகக் காவிரிக் கரைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டதற்கு, ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். இந்த நிலையில்,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் காணப் பபக் கூடிய மரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதைப்படிவங்கள் வட துருவப் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் குழப்பதையம் ஏற்படுத்தி இருக்கிறது. வட துருவப் பகுதியில் அமைந்து இருக்கும்,எல்லிஸ் மெர் தீவில்,கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள். குறிப்பாக பாலூட்டி விலங்கினங்கள், உணவை செரிப்பதன் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. அத்துடன் உடல் வெப்பத்தை பாதுகாக்க மயிர்த் தோலையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பாலூட்டிகளின் உடல் வெப்பமாக இருப்பதால், இரவிலும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க முடிகிறது. அத்துடன் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளிலும் பாலூட்டிகளால் வாழ முடிகிறது. . அதனால்தான் தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில் மான்கள், கரடிகள்,'நரிகள், முயல்கள், போன்ற பாலூட்டி விலங்கினங்களே காணப்படுகிறன. ஆனால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக்கூடிய, பாம்புகள் பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகளால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே ஊர்வன வகை விலங்கினங்கள் உடல் வெப்பத்தை உயர்த்திக் கொள்ள சூரிய வெளிச்சத்தில் உடலை காய வைக்கின்றன. அதனால் துருவப் பகுதிகளில் ஊர்வன வகை விலங்கினங்கள் வசிப்பதில்லை. மாறாக ஊர்வன வகை விலங்கினங்கள் அதிக வெப்பம் நிலவக் கூடிய பூமத்தி யரேகைப் பகுதியிலயே அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில், கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில், நாலரை முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, ராட்சத பாம்புகள், முதலைகள், பல்லிகள், மற்றும் கால பாகஸ் தீவுகளில் "இந்தத் தீவு களுக்கு இந்த விலங்குகள் எப்படி வந்தன" என்று டார்வின் பார்த்து வியந்த, ராட்சத தரை வாழ் ஆமைகள், போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்றும் ஆதிகாலக் குரங்குகள், டபிர் என்று அழைக்கப்படும் பன்றி போன்ற விலங்கினம், ஐந்து டன் எடையுள்ள நீர் யானை போன்ற "கோரி போடன்" என்ற விலங்கு மற்றும் காண்டாமிருகம் போன்ற "பிராண்டோ தீரி" ஆகிய பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்தப் புதைப்படிவங்களின் அடிப்படையில் இந்த இடமானது , சதுப்பு நிலக் காடுகள்,மற்றும் மழைக் காடுகள் போல இருந்ததாக கருதப் படுகிறது. ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எழுதிய கட்டுரையை,டைம் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரையை அலாஸ்கா பல்கலைக் கழகம் தனது இணையப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது. அந்தத் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் . இந்த மரங்களானது நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையானது என்றாலும் கூட அந்த மரங்களானது கல்மரங்களாக மாறாமல் இருக்கிறது. அதற்கு அந்த மரங்கள் மண்ணால் திடீரென்று மூடப்பட்ட பிறகு ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த மரங்கள் முதலில் வளர்ந்தன? ஏனென்றால், ஆண்டுக்கு நான்கு மாத காலம் தெரடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய அவசியமான சூரிய வெளிச்சம் இல்லாத சூழலில் எப்படி இந்த மரங்கள் வளர்ந்தன என்பதுதான் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் அலாஸ்காவில்,ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் உட்பட ஆயிரக் கணக்கான மற்ற விலங்கினங்களும் அழிந்தன, அதற்கான காரணம் இது வரை, அறியப் பட வில்லை. அதே போன்று இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. ஆண்டில் பாதி காலம் இரவு நீடிக்கும் ஆர்க்டிக் பகுதியில், ஒருவேளை குளோபல் வார்மிங் காரணமாக வெப்பத்தை பெற்றாலும் கூட, எப்படி இந்த விலங்குகளும், தாவரங்களும், உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூரிய வெளிச்சத்தைப் பெற்றன. அதற்கு அந்த காலத்தில் அந்த நிலப் பகுதிகள் அதிக சூரியவெளிச்சம் விழக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு, துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து இருக்கலாம் என்று கூறப்படும் கண்டத்தட்டு நகர்ச்சி விளக்கம் இங்கே, அதிஉயர் ஆர்க்டிக் பகுதிக்கு பொருந்தாது. ஒருவேளை, பூமியின் அச்சு சாய்ந்ததால், ஆர்க்டிக் பகுதியில் அதிக வெளிச்சம் கிடைத்திருக்குமா? ஆனால் அதற்கு எந்த இயக்க செயல் பாடும் அறியப்பட வில்லை. எனவே நாம் தற்பொழுது, செய்யவேண்டிய தெல்லாம், முன் ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், ஒப்பீட்டளவில் வெப்பமான அடர்ந்த காடுகளில், டைனோசர்களும், மற்ற விலங்கினங்களும், இருளில் வாழ்ந்திருக்கிறது என்பதை நம்பியாக வேண்டும். எப்படி இந்த விலங்கினங்களும் தாவரங்களும் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்பது விடையளிக்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மம். -பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்கள் ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா ஆகிய தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வியம் எழுகிறது. எனவே,டைனோசர்கள் காலத்தில், பூமியில் அதிக வெப்ப நிலை இருந்ததற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவு கூட்டத்தில் உள்ள கியூபா என்ற தீவில்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்க கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. எனவே,தற்பொழுது தனித்த தனியான தீவுகளாக இருக்கும் கியூபா,ஹிஸ்பானொலியா,ஜமைக்கா மற்றும் போர்டோ ரிக்கோ ஆகிய தீவுகளானது, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றாக இணைந்து, ஒரே தொடர்ச்சியாக பாலம் போன்று, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்து இருப்பதுடன், அதன் வழியாக, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், டைனோசர்களின் போக்குவரத்து நடை பெற்றும் இருப்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தின் மத்திய பகுதியில், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடிப் பீடபூமியானது, முன் ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக, ஒரு தீவாக இருந்து இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை உயர்ந்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுகளில்,கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.இதன் மூலம்,நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு நிலப் பகுதிகள் உயர்ந்ததால், ஒரே தொடர்ச்சியாக இருந்த கரீபியன் நிலப் பகுதியானது, தனித் தனிப் பகுதிகளாகப் பிரிந்ததுடன்,கடல் மட்ட உயர்வால்,தீவுகளாகவும் உருவாகி இருக்கின்றன.இதை நிரூபிக்கும் விதமாக, கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, தீவுகளின் ஒரப் பகுதிகளானது, ஒன்றுக் கொன்று இணையான வடிவில் இருக்கிறது. இந்த நிலையில், கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவம். நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம், பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. பூமி ஏன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது? ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியின் மேற்பகுதி குளிர்ந்ததால்,புவித் தரை உருவானது.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் மற்றும் வாயுக்களால், ஆழமற்ற கடலும் ,மெலிதான வளி மண்டலமும் உருவானது. அதன் பிறகு, புவிப் பரப்புக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்த பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது, சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் கலந்ததால் கடல் ஆழமானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள், புவியின் மேற்பகுதிக்கு வந்ததால், வளி மண்டலத்தின் அடர்த்தி அதிகமானது.இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத் தட்டுகளின் அடர்த்தியானது, குறைவாக இருந்தது. அடர்த்தி அதிகமான கடல் நீரில் உருவாகும் பனிப் பாறைகளும் அடர்த்தியானது குறைவாக இருப்பதால்,அந்தப் பாறை அடுக்குகளானது மேல் நோக்கி உயர்கிறது. அதே போன்று பூமியின் உட்கருக் கோளமும் விரிவடைகிறது, இதனால் பூமியின் மேலோடு பிளவு பட்டு பிரிந்து விலகியது.இதனால் மேல் அடுக்கில் இடைவெளி ஏற்பட்டது .அந்த இடை வெளி வழியாக பூமிக்குள் இருந்த கடல்தளப் பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவானது. அதவாது நமது மேல் தோலில் கீறல் ஏற்படும் பொழுது, அதன்வழியாக வெளியேறும் இரத்தமானது, உலர்ந்து இறுகி, ஒரு படலமாக உருவாகுவதைப் போன்று, பூமியின் மேலோடு விலகிப் பிரியும் இடத்தில் புதிய கடல் தளம் உருவாகுகிறது. பூமி எப்படி விரிவடைகிறது? ஒரு உதாரணம். ஒரு பலூனின் மேல் செய்தித் தாளை ஒட்டுங்கள்.இப்பொழுது பலூனை ஊதினால், பலூன் பெரிதாகும் பொழுது,அதன் மேல் ஒட்டிய செய்தித் தாளானது, பல பகுதிகளாகப் பிரிந்து, ஒன்றில் இருந்து ஒன்று, விலகி நகரும்.இதில் பிரிந்து விலகும் தாள்களைக் கண்டங்கள் எனலாம்.விரிவடையும் பலூன் பரப்பைக் கடல் தளம் எனலாம். இதே போன்றுதான் புவிப் பரப்பின் மேல், கடல் தளம் விரிவடைவதால் கண்டங்கள் விலகிப் பிரிகின்றன. முக்கியமாக அட்லான்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களின் ஒரப் பகுதிகள் ஒன்றிற் கொன்று இணையாக இருப்பதை போன்றே,பிரிட்டிஷ் தீவுகள்,கரீபியன் தீவுகள்,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா,பப்புவா நியூ கினியா,டாஸ்மேனியா,நியூசிலாந்து தீவின் வடக்கு மற்றும் தென் பகுதித் தீவுகளின் ஒரப் பகுதிகளும், ஒன்றிற் கொன்று இணையாக இருப்பது, பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையே புலப் படுத்துகிறது. 000000000000000000000000000000000 சமீபத்தில் பூமியின் மையாக கோளம் விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் ஆனால் அதன் காரணம் தெரியவில்லை என்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேனியல் புரொஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். மையக் கோளம் விரிவடைவதால்.அதனைச் சுற்றி இருக்கும் பாறைக் குழம்பு மண்டலம் விரிவடைவதால், மேற் புற அடுக்கான கடல் தள அடுக்கு விரிவடைவதால், அதற்கும் மேலே இருக்கும். புவியோடது பிளவு பட்டு பிரிந்து நகர்ந்தால், கண்டங்கள் உருவாகின. மையக் கோளம் விரிவடைவதால், கடல் தள அடுக்கு விரிவடைவதால், பூமி பெரிதாகிக் கொண்டு இருக்கிறது. 00000000 நன்றி! விஞ்ஞானி.க.பொன்முடி.

No comments:

Post a Comment