Thursday, 16 July 2026

ஓவாமூவாமூவா

omuamua ஐன்ஸடீன் கூறியதைப் போன்று சூரியனைச் சுற்றி ஒரு பெரிய 'குழி' உருவாகி இருக்க வில்லை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கிரகங்கள் எல்லாம் சூரியனை சுற்றி வருவதற்கு காரணம் ஈர்ப்பு விசை என்று நியூட்டன் விளக்கம் கூறினார்.அதாவது நேராகச் செல்லும் கிரகத்தை சூரியனின் ஈர்ப்பு விசையானது தொடர்ந்து இழுப்பதால்,கிரகங்களின் பாதையானது தொடர்ந்து வளைக்கப் படுவதால் ,கிரகங்கள் சூரியனைச் சுற்றுகிறது என்று நியூட்டன் விளக்கம் கூறினார். ஆனால் புதன் கிகரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கு சிறிது இடம் பெயர்வதற்கு நியூட்டனின் ஈர்ப்பு விசை விளக்கத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. இந்த நிலையில் ஐன்ஸடீன், நியூட்டன் கிரகங்கள் எல்லாம் சூரியனை சுற்றி வருவதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். அதாவது நியூட்டன் கூறியதை போன்று உண்மையில் சூரியனுக்கு ஈர்க்கும் வீசி இல்லை.மாறாக சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுகிறது.இதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் அதாவது ஒரு பெரிய குழி உருவாகிறது. இந்த நிலையில், நேராகச் செல்லும் கிரகங்கள் அந்த பள்ளத்துக்கு உள்ளே அதாவது குழிக்குள் விழுவதால்,கிரகங்கள் எல்லாம் சூரியனை சுற்றி வருகிறது என்று ஐன்ஸடீன் விளக்கம் கூறினார். அதாவது ஒரு பெரிய மெத்தையில் ஒரு இரும்பு குண்டை வைத்தால் அந்த மேதையின் மேல் ஒரு பள்ளம் உருவாகும்,இந்த நிலையில் அந்த இரும்பு குண்டை நோக்கி சில கோலிக் குண்டுகளை வீசினால் அந்த கோலிக் குண்டுகளானது அந்த இரும்புக்கு குண்டை சுற்றிவரும்,மற்றபடி இரும்புக்கு குண்டுக்கு ஈர்ப்பு விசையெல்லாம் கிடையாது அதே போன்றுதான் சூரியனுக்கும் கிரகங்களை ஈர்க்கும் விசை இல்லை என்று ஐன்ஸடீன் விளக்கம் கூறினார். ஆனால் அனஸ்தீனின் விளக்கம் முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக பல் ஆதாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக கடந்த ஆம் ஆண்டு சூரியனை நோக்கி ஒரு மைல் நீளமுள்ள ஒரு விண்பாறையானது, வினாடிக்கு என்பதை ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கியது.அந்த விண்பாறைக்கு ''ஓமூவாமூவா''என்று பெயர் சூட்டப் பட்டு அதன் பாதை கவனிக்கப் பட்ட பொழுது அந்த விண்பாறையானது சூரிய மண்டலத்தை சேர்ந்தது அல்ல என்பது தெரிய வந்தது.பொதுவாக சூரிய மண்டலத்தை சேர்ந்த வாழ் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றிச் சென்ற பிறகு மறுபடியும் சூரியனை நோக்கி வரும்.ஆனால் ''ஓமூவாமூவா'' விண்பாறையானது சூரியனை சுற்றிவிட்டு மறுபடியும் திரும்பி வர முடியாத பாதையில் சென்றது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் ''ஓமூவாமூவா'' விண்பாறையானது,சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருந்து, சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து, மறுபடியும் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி இருக்கிறது. இதன் மூலம் ஐன்ஸ்ட்டின் கூறியத்தைப் போன்று, சூரியனைச் சுற்றி ஒரு பெரிய குழி உருவாகி இருக்க வில்லை என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

No comments:

Post a Comment