Monday, 20 July 2026
earth xray report
நான், கடந்த இருபத்தி மூன்று ஆண்டு காலமாக, இணையத்தில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்த தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறேன்.
எனது ஆய்வில்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல்தரைப் பகுதியில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில்,இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய கடுமையான நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ,USGS என்று அழைக்கப் படும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் ஆராய்ச்சியாளர்கள், ஆதாரத்தின் அடிப்படையிலான விளக்கத்தைத் தெரிவிக்காமல் நிரூபிக்க முடியாத கருத்தின் அடிப்படையில், யூகபூர்வமான விளக்கத்தைத் தெரிவித்து இருப்பது தெரிய வந்தது.
எனவே அந்த நில அதிர்ச்சசிகளும் சுனாமியும் ஏற்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிவதாற்காக இணையத்தில் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்த பொழுது,குமுறும் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது, அதனைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளும் உயர்ந்து இறங்குவதால், எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு , சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய,வரப்பு மேடுகளை போன்ற தரைமட்ட மாறுபாடுகள் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.அதே போன்ற தரைமட்ட மாறுபாடுகளானது, ஹைத்தி தீவில் நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், ''நில அதிர்ச்சி'' மையத்தைச் சுற்றிலும் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் ஹைத்தி தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை செயல்பாட்டால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அவ்வாறு கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது,கடல்தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கண்டத் தரையின் மேல், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் நாசாவைச்ச சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு,வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம்'' ஒன்றை வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,தனித் தனியாகாக் கடல்தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இந்த நிரையில் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் ,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையிலான எல்லை பகுதியை வரையறை செய்ய இயல வில்லை.எனவே இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல்தரைப் பகுதியானது ''வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி ''என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால் கரீபியன் பாறைத் தட்டு என்று அழைக்கப் படும் அந்தப் பாறைத் தட்டானது,எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை.
சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் பாறைத் தட்டானது, அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது அந்த பாறைத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.
ஆனால் வேறு சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் பாறைத் தட்டானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது அந்த பாறைத் தட்டு, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.
முன்னது ''அட்லான்டிக் கடல் மாதிரி'' என்றும் பின்னது ''பசிபிக் கடல் மாதிரி'' என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில்,ஜெர்மனியின், பிரி பெர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளாரான, ரேய்மன் பாக்மன், கரீபியன் பறைத தட்டின் தோற்றம் குறித்த ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து, தற்பொழுது எந்தக் கருத்தாலும் கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் குறித்து நிரூபிக்க முடியாது, என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில்,USGS என்று அழைக்கப் படும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,,000 அன்று, ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் ,வட அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகளின் நகர்ச்சியால், பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலே காரணம் என்று நம்புகின்றனர்.
அதன் அடிப்படையில்,குறிப்பாக கரீபியன் பாறைத் தட்டு, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை நேரிடையாகக் கூறாமல்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கரீபியன் பாறைத் தட்டு, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு டையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டதாக ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
நிச்சயம் இந்த விளக்கமானது, ஆதாரத்தின் அடிப்படையில் கூறப் பட்ட,அறிவியல் பூர்வமான விளக்கம் அல்ல.மாறாக நிரூபிக்கப் படாத ஒரு கருத்தின் அடிப்படையில் கூறப் பட்ட, யூகப் பூர்வமான விளக்கமே ஆகும்.
உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நிரூபித்தால் மட்டுமே, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர்களின் விளக்கத்தை, அறிவியல் பூர்வமான விளக்கமாக ஏற்க முடியும்.
0000
இதே போன்று தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கும் நாசா வைச்ச சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,ஆதாரத்தின் அடிப்படையிலான அறியவியல் விளக்கத்தைத் தெரிவிக்க இயலாமல், யூகத்தின் அடிப்படையிலான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில்,தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக,இணையத்தில் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்த பொழுது,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும், சிமிலு என்ற தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே, அந்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது, தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம், கண்டு பிடித்து இருக்கிறேன்.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித்த தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில்,நாசா வெளியிட்ட, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்''இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தரைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இந்த நிலையில்,கண்டங்களின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி, நாசா ஒரு வரைபடத்தையும் வெளியிட்டது.அந்த வரைபடத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல்தரைப் பகுதியைத் தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,கடல் தரைப் பகுதியில், சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, அந்த இடத்தில் என்ன செயல்பாடு நடக்கிறது, என்று உறுதியாகத் தெரிய விலை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் சில ஆராய்ச்சியாளர்கள்,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால், இந்தியக் கண்டத்தின் கடல்தளமானது, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து சென்றதால்தான்,தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது, என்று அடிப்படை ஆதாரமற்ற ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால்,ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல்தளமானது, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து சென்றதால்தான்,தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது என்று, அடிப்படை ஆதாரமற்ற இன்னொரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
நாசா ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை.எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா ஆராய்ச்சியாளர்கள் தங்களின் இணையப் பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில்,தெற்காசிய சுனாமிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் ''சிமிலு''என்ற தீவானது,கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதே சிமிலு தீவில்,28.2.2020 ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில செண்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது போன்ற தரைமட்ட மாறுபாடுகளானது குமுறும் எரிமலைகளுடன் அந்த எரிமலைகளைச் சுற்றிலும் இருக்கும் நிலப் பகுதிகளானது,சில செண்டி மீட்டர்,உயரத்திற்கு, உயர்ந்து இறங்குவதால் ஏற்பட்டு இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம்,சிமிலு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால்,தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம்,ஆதார பூர்வமாக நிருபணம் ஆகி இருக்கிறது.
சிமிலு தீவு ஏன் உயர்ந்தது என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில்,கடந்த ஆம் ஆண்டு மார்ச் மாதம் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும், அசோர் என்ற தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும், ஜோர்ஜ் தீவில், ஆயிரத்திற்கும் அதிகமான முறை நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.
அதற்கான காரணத்தை அறிவதற்காக, லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் ஸ்டீபன் ஹைக், தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், அந்தத் தீவில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
குறிப்பாக அவர்கள்,நில அதிர்ச்சி அளவைக் கருவிகளை,ஜோர்ஜ் தீவிலும், அட்லாண்டிக் கடல் தரையின் மேலும்,நிலை நிறுத்தியதுடன்,செயற்கைக் கோள், ஜிபிஎஸ் கருவிகளையும் பொருத்தி கண்காணித்தனர்.
அப்பொழுது,அந்தத் தீவுக்கு அடியில், பாறைக் குழம்பு, ஆறு போல, இரண்டாயிரம் அடிக்கு கீழிருந்து மேற்பகுதிக்கு உயர்ந்து வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால்,அந்த எரிமலைக்கு மேலே இருந்த நிலப் பகுதியானது, ஆறு சென்டிமீட்டர், உயர்ந்து இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அவ்வாறு மேலே வந்த பாறைக்கு குழம்பு ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் நின்று விட்டதாகவும்,அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.அதன் பிறகே நில அதிர்ச்சிகள் அதிகரித்ததாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் தீவுகள் உயர்வதற்கு அந்தத் தீவுகளுக்கு அடியில் எரிமலைக் குழம்பு உயர்ந்ததே காரணம் என்பதும் உறுதியாகிறது.
00000000000000000
தற்பொழுது பூமியின் மேலோடானது தனித் தனிப் பகுதிகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை ஆதாரமின்றி நம்புகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில், நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும்,சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயலாமல் தடுமாறுகின்றனர்.
இந்த நிலையில் அந்தக் கருத்தின் படி,வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்ககளுக்கும், ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலாத நிலையில் குழப்பத்தில் இருக்கின்றனர்.
கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படும் இந்தக் கருத்தின் படி,வட பகுதிக் கண்டங்களான வட அமெரிக்காவின் வடபகுதியான அலாஸ்காவின் வடபகுதியியும், ,அதே போன்று ஆசியக் கண்டத்தின் வடபகுதியான சைபீரியாவில் வடபகுதியியும், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அடர்ந்த பசுமைக் காடுகள் வளர்ந்து இருப்பதற்கு ஆதாரமாக,மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் , மரங்களின் அடிப்பகுதிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்தக் கண்டு பிடிப்பானது உலக அளவில் ஆராய்ச்சியாளர்களைக் குறிப்பாக தாவரவியல் வல்லுநர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஏனென்றால் தாவரங்கள் தங்களின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையான சர்க்கரை சத்துப் பொருளை,சூரிய ஒளியின் உதவியுடன், கரியமில வாயு மற்றும் நீர் ஆகியவற்றின் மூலம், ஒளிச் சேர்க்கை செய்து தயாரித்து சேமித்து உயிர் வாழ்கின்றன.ஆனால் பூமியியானது இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றுவதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் சூரியன் உதிப்பதே இல்லை. எனவே ஐந்து மாதங்கள் சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில் எப்படி மரங்களுடன் அடர்ந்த காடுகள் உருவாகியது என்ற கேள்விக்கு விடை காண தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் கணிப் பொறி மூலம் பல்வேறு வித காலநிலை மாதிரிகாலை உருவாக்கி ஆய்வுகளை செய்து வந்தாலும், இன்று வரை விடை காண இயல வில்லை.
அதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த ஊர்வன வகை விலங்குகளான ராட்சத பாம்புகள்,ராட்சத தாரைவாழ் ஆமைகள் மற்றும் முதலைகளின் புதைப்படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பும், விலங்கியல் ஆராய்ச்யாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏனென்றால்,ஊர்வன வகை விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை, பாலூட்டி விலங்கினங்களை போன்று சீராக வைத்து இருக்க இயலாது,பாலூட்டி வகை விலங்கினங்களானது, உணவை செரிப்பதன் மூலம், உடல் வெப்பத்தை சுயமாக உற்பத்தி செய்து குளிர் காலத்தைத் தாக்கு பிடிக்கிறது. ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களுக்கு இந்த தகவமைப்பு இல்லை.எனவே ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்பமானது, எப்பொழுது சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். ஆனால் ஆர்க்டிக் பகுதியில்,ஐந்து மாதங்கள் சூரியன் உதிக்காத நிலையில், வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கும் கீழே செல்கிறது. இது போன்ற தாழ் வெப்ப நிலையில், ஊர்வன வகை விலங்கினங்களால் உயிர்வாழ இயலாது. எனவே ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ராட்சத தரை வாழ் ஆமையின் புதை படிவங்கள் குறித்து,கனடாவைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுனரான, டாக்டர், ஜெயலின் எபர்லி,இந்தக் கண்டு பிடிப்பானது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று எல்லிஸ் மெர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட மரங்களின் புதைப்படிவங்கள் குறித்து, லூசியானா பல்கலைக் கழகத்தை சேர்ந்த,புவி உயிரியல் வல்லுனரான டாக்டர்,ஹோப் ஜெஹரன் ,இந்த மரங்களைப் பார்க்கும் பொழுது, தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதைக் காண்பது போன்று குழப்பமாக இருக்கிறது,என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தற்பொழுது பூமியின் மேலோடானது தனித் தனிப் பகுதிகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை ஆதாரமின்றி நம்புகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில், நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும்,சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயலாமல் தடுமாறுகின்றனர்.
இந்த நிலையில் அந்தக் கருத்தின் படி,வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்ககளுக்கும், ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலாத நிலையில் குழப்பத்தில் இருக்கின்றனர்.
கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படும் இந்தக் கருத்தின் படி,வட பகுதிக் கண்டங்களான வட அமெரிக்காவின் வடபகுதியான அலாஸ்காவின் வடபகுதியியும், ,அதே போன்று ஆசியக் கண்டத்தின் வடபகுதியான சைபீரியாவில் வடபகுதியியும், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அடர்ந்த பசுமைக் காடுகள் வளர்ந்து இருப்பதற்கு ஆதாரமாக,மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் , மரங்களின் அடிப்பகுதிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்தக் கண்டு பிடிப்பானது உலக அளவில் ஆராய்ச்சியாளர்களைக் குறிப்பாக தாவரவியல் வல்லுநர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஏனென்றால் தாவரங்கள் தங்களின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையான சர்க்கரை சத்துப் பொருளை,சூரிய ஒளியின் உதவியுடன், கரியமில வாயு மற்றும் நீர் ஆகியவற்றின் மூலம், ஒளிச் சேர்க்கை செய்து தயாரித்து சேமித்து உயிர் வாழ்கின்றன.ஆனால் பூமியியானது இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றுவதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் சூரியன் உதிப்பதே இல்லை. எனவே ஐந்து மாதங்கள் சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில் எப்படி மரங்களுடன் அடர்ந்த காடுகள் உருவாகியது என்ற கேள்விக்கு விடை காண தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் கணிப் பொறி மூலம் பல்வேறு வித காலநிலை மாதிரிகாலை உருவாக்கி ஆய்வுகளை செய்து வந்தாலும், இன்று வரை விடை காண இயல வில்லை.
அதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த ஊர்வன வகை விலங்குகளான ராட்சத பாம்புகள்,ராட்சத தாரைவாழ் ஆமைகள் மற்றும் முதலைகளின் புதைப்படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பும், விலங்கியல் ஆராய்ச்யாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏனென்றால்,ஊர்வன வகை விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை, பாலூட்டி விலங்கினங்களை போன்று சீராக வைத்து இருக்க இயலாது,பாலூட்டி வகை விலங்கினங்களானது, உணவை செரிப்பதன் மூலம், உடல் வெப்பத்தை சுயமாக உற்பத்தி செய்து குளிர் காலத்தைத் தாக்கு பிடிக்கிறது. ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களுக்கு இந்த தகவமைப்பு இல்லை.எனவே ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்பமானது, எப்பொழுது சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். ஆனால் ஆர்க்டிக் பகுதியில்,ஐந்து மாதங்கள் சூரியன் உதிக்காத நிலையில், வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கும் கீழே செல்கிறது. இது போன்ற தாழ் வெப்ப நிலையில், ஊர்வன வகை விலங்கினங்களால் உயிர்வாழ இயலாது. எனவே ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ராட்சத தரை வாழ் ஆமையின் புதை படிவங்கள் குறித்து,கனடாவைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுனரான, டாக்டர், ஜெயலின் எபர்லி,இந்தக் கண்டு பிடிப்பானது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று எல்லிஸ் மெர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட மரங்களின் புதைப்படிவங்கள் குறித்து, லூசியானா பல்கலைக் கழகத்தை சேர்ந்த,புவி உயிரியல் வல்லுனரான டாக்டர்,ஹோப் ஜெஹரன் ,இந்த மரங்களைப் பார்க்கும் பொழுது, தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதைக் காண்பது போன்று குழப்பமாக இருக்கிறது,என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் நான்கு முக்கிய ஆதாரங்கள் மூலம்,கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகளானது ,ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று இறப்பதற்கு,அந்த அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில்,வட துருவப் பகுதியில் இருந்து, தென் துருவப் பகுதி வரை, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, ஆங்கில ''எஸ் ''எழுத்து போன்ற வடிவில்,ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருப்பதற்கும்,அந்த எரிமலைத் தொடர் பகுதியில், அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும் நில அதிர்ச்சியிகள் ஏற்படுவதற்கு,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
குறிப்பாக,அந்த கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதாகவும் ,அவ்வாறு வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் உண்மை யென்றால், அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும், பாறைகளின் தொன்மையானது, சில லட்சம் ஆண்டுகளாகவும், அதே நேரத்தில்,கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, பல கோடி ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில்,அமெரிக்க நாட்டின் புவியியல் வல்லுனரான ராண்டல் ரைட் என்ற ஆராய்ச்சியாளர் ,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும்,புனித பால் பாறைத் தீவு மற்றும் புனித பீட்டர் பாறைத் தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டார்.அந்த ஆய்வில் அந்த தீவுகளின் பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பதைக் கண்டு பிடித்தார்.
அவரது ஆய்வு முடிவானது, அமெரிக்கப் புவியியல் கழகத்தின் ஆய்வு இதழிலும் வெளியிடப் பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்,வடஅமெரிக்கக் கண்டமானது, மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதே போன்று ,தென் அமெரிக்கக் கண்டமானது,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும், தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல்தளப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படவேண்டும்.
இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.
ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது '' வரையறுக்கப் படாத எல்லை '' என்றும் அழைக்கப் படுகிறது.
இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக எரிமலைகள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அத்துடன் வட அட்லான்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. அதே போன்று தெற்கு அட்லான்டிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடலில், குறிப்பாக இந்த கண்டங்களுக்கும் இடைப் பட்ட, கடல் தளப் பகுதியில் அமைந்து இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் தள பகுதியில் உருவாகி இருந்தால், அந்த எரிமலைத் தீவுக் கூட்டமானது, நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ, கவிழ்த்துப் போட்ட 'ட ' வடிவில் உருவாகி இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க இயலாது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டமானது ஒழுங்கற்ற வடிவில் உருவாகி இருக்கிறது.
அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக காலபாகஸ் தீவுகள் இருக்கும் இடத்திலேயே உருவாகி, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும், தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த கருத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வண்ணம், மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி இந்த நிலப் பகுதியை கடந்து, கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து உயர்ந்து இருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறினார்கள்.
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டில்,ஒன்பது முதல் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைப்படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் எரிமலைச் செயல் பாட்டால் உருவாகிய பிறகு, ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகக் கூறப் படும், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்த, இடைவெளி வழியாக நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும்,தற்பொழுது கரீபியன் பாரித் தட்டையானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும்.
இந்த நிலையில்,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் கரீபியன் தீவுக் கூட்டமானது, பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், பாலம் போன்று தொடர்ச்சியாக இருந்து இருப்பதுடன், கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும், அதனால் கடல் மட்டத்துக்கு மேலே இருந்த கரீபியன் நிலத் தொடர்பு வழியாக, டைனோசர் உள்பட பல விலங்கினங்கள், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடப் பெயர்ச்சி செய்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. பின்னர் பூமி விரிவடைந்ததால் கரீபியன் நிலத் தொடர்பானது துண்டிக்கப் பட்டு, தனித் தனித் தீவுகளாக உருவாகி இருப்பதும் உறுதியாகிறது. எனவே பசிபிக் கடல் மாதிரி விளக்கம் ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கம்.
இந்த நிலையில்
அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது வரிசையாக உருவாகாமல், கவிழ்ந்துப் போட்ட ''ட '' வடிவில் உருவாகி இருக்கிறது.இதன் மூலமாக அட்லாண்டிக் கடல் தளமானது, நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரின் உட்சிப் பகுதிகளாக இருக்கும், புனித பீட்டர் பாறைத் தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளின், பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலமாகவும்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டத்திற்குக் கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்களானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி ''வில்'' போன்று வளைவான பாதையில் உருவாகி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தளமானது, நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது,ஆதார பூர்வமாகவும் ஆணித்த தரமாகவும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதனால்,இவ்வாறு அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வி எழுத்து.
இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக,பசிபிக் பாடல் பகுதியில் புதிதாக உருவாகி நகரும் கடல் தளங்களானது, பசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் தீவுகளுக்கு அடியிலும்,கண்டங்களுக்கு அடியிலும் உரசியபடி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும், அதனால் பசிபிக் கடல் பகுதியானது, சுருங்கி கொண்டு இருப்பதாகவும்,அதனால் பூமியின் அளவானது, விரிவடையாமல் ஒரே அளவில் இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அத்துடன் இவ்வாறு பசிபிக் கடல் பகுதியில் கடல் தளங்களானது, பசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் தீவுகளுக்கு அடியிலும்,கண்டங்களுக்கு அடியிலும் உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது, கடலுக்கு அடியில் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி அலைகள் உருவாவுவதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அவ்வாறு கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும்,நகர்ந்து செல்லும் கடல் தளப் பாறையானது, வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக மாறி, மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தையும் நிலப் பகுதிகளையும் பொத்த்துக் கொண்டு, கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்களாக உருவாக்குகின்றன, என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதன் அடிப்படையில்,மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் பசிபிக் கடல் தளமானது வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில்,நகர்ந்து சென்ற பிறகு,பாறைக் குழம்பாக மாறி, மேல் நோக்கி உயர்ந்து,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொத்துக் கொண்டு,வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் எரிமலைத் தொடர்களாக உருவாகி இருக்கின்றன என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் சரியான விளக்கம் என்றால் வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் எரிமலைத் தொடர்களாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களில் எல்லாம், ஒன்றுக்கு கொன்று இணையாக, ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல், வட மேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களில் எல்லாம், ஒன்றுக்கு கொன்று இணையாக, ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வில்லை.
ஆனால் அவ்வாறு இல்லாமல்,வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு.வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதற்கு இன்று வரை புவியியல் ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
இவ்வாறு.வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலம்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாகவும், ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு,பல ஆதாரங்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவம்.
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
டைனோசர் காலத்தில், கடல்மட்டமும், நில மட்டமும், குறைவாக இருந்திருக்கிறது.
அதாவது பூமியின் அளவானது சிறியதாக இருந்து இருக்கிறது. கடல் மட்டம் குறைவாக இருந்ததால், கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.
சிறிய அளவில் பூமி இருந்ததால், துருவங்களில் அதிக அளவில் சூரிய வெளிச்சம் விழுந்து இருக்கிறது.
எனவே , துருவப் பகுதிகளில்,வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததும்,பூமியின் அளவானது சிறிதாக இருந்ததால்,துருவப் பகுதிகளில் அதிக அளவில் சூரிய வெளிச்சம் விழுந்ததும் காரணம்.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால், கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்பநிலை குறைந்ததால், துருவங்களில் குளிர்ச்சி அதிகரித்து, பனிப் படலங்கள் உருவாகியது. அத்துடன், பூமியின் அளவும் அதிகரித்ததால்,துருவப் பகுதிகளில் விழுந்த, சூரியனின் வெளிச்சமும் குறைந்ததால் துருவப் பகுதிகளில், குளிர்ச்சி அதிகரித்து, பனிப் படலங்கள் உருவாகியது.
இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால், அதாவது, பூமி குளிர்ந்ததால், துருவங்களில் காடுகளும், விலங்கினங்களும் அழிந்தன.
0000000
பூமி விரிவடைந்து இருக்கிறது,பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது,பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதுடன்,கடலுக்கு அடியிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் டைனோசர்கள் உள்பட,
வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்து இருப்பதும், அதனால்,பூமியின் வெப்ப நிலையானது,அதிக அளவில் இருந்து இருப்பதும், அதனால் துருவப் பகுதிகளிலும் அதிக வெப்ப நிலை இருந்து இருப்பதுடன், பின்னர்,கடல் மட்ட உயர்வால்,கடலின் பரப்பளவின் அதிகரிப்பால்,பூமியின் வெப்ப நிலையானது,படிப்படியாகக் குறைந்து, பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும், புதைபடிவ ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டமானது, இரண்டு கோடி ஆண்டுகளில், இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.
கிரீன்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப் பட்ட தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.
இதன் மூலம் கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது, நான்கு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டமானது, இரண்டு கோடி ஆண்டுகளில், இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள், நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம். குள்ள வகை நீர் யானைகளின் உடல் நீண்டு குறுகி இருப்பதுடன், கால்களும் குட்டையாக இருப்பதால், குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
எனவே இந்த விலங்கு எப்படி சைப்ரஸ் தீவுக்கு வந்தன என்று ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்காவை பூர்வீகமாக் கொண்ட, ''லெமூர்'' என்று அழைக்கப் படும் குரங்கினமும் காணப் படுகிறது.
சில ஆராய்ச்சியாளர்கள்,லெமூரின் மூதாதைகள், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து,தற்செயலாகக் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து பெருகி இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த, ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து, பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள், இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால், அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது.
அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த, பெரிய நீர் யானை, தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால், குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன.
இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும், நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும், குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள், ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஐந்து தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.
குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம், நில மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.
000000000000000000000
மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ''சைவ முதலை''யின் புதை படிவங்கள்.
கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.
எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.
ஏற்கனவே சீமோ சூக்கஸ் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
000000
நன்றி!
-விஞ்ஞானி.க.பொன்முடி.
0000000
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment