Friday, 4 April 2025

My tsunami research report for media.

பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால், சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில் நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டது .விஞ்ஞானி.க.பொன்முடி. அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும், சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.அதை போலவே, அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும், ஹைத்தி ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் கூட ,அமெரிக்க ஐக்கிய புவியியல் கழகத்தை சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருப்பதுடன், அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டாமானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.இந்தக் கருத்தானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு இருக்கும், மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு, குளிர்ந்து இருகிப் புதிய கடல் தளமாக உருவான பிறகு, எதிரெதிர் திசைகளை நோக்கி, அதாவது மேற்கு கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில், அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், யூரேசியக் கண்டமானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இவ்வாறு அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளங்களுடன் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் அடிப்படையில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததால் அடிப்படையில், அந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் எல்லைகளை வரையறை செய்ய முடிய வில்லை எனவே அந்த பகுதியானது 'வரையறுக்கப் படாத எல்லை' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் அட்லாண்டிக் கடல் தளங்களானது மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புவதால்,இந்த நிலையில் பூமிக்குள் இருக்கும் எரிமலைப் பிழம்பால் அட்லாண்திக் கடல் தளமானது தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால் அந்த எரிமலைத் தீவுகளானது, அட்லாண்டிக் கடல் தளங்களானது, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி, வரிசையாக உருவாகி இருக்க வேண்டும். ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது, வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு தீஷையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்து இருக்கலாம், என்ற ஒரு கருத்து உருவாக்கப் பட்டது.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டத்தில் மிகவும் தொன்மையான தீவே ஒன்றரை கோடி ஆண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. எனவே ,கரீபியன் தீவுக் கூட்டமானது, காலபாகஸ் தீவு அமைந்து இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பிறகு, இலேசான பாறைத் தட்டாக உருவானதால்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக சில ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா,ஹிப்பானொலியா,ஜமைக்கா,போர்டோ ரிக்கோ,ஆகிய பெரிய தீவுகளானது கண்டங்களைப் போன்று, கிரானைட் வகைப் பாறையால் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும், அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக கரீபியன் தீவுகளில், கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.இதன் மூலம் கரீபியன் தீவுகளானது , கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இவ்வாறு கடல் மட்டமும், தீவுகளும் மாறி மாறி உயர்ந்து இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இவ்வாறு கரீபியன் நிலப் பாலம் உயர்ந்ததால் பல பகுதிகளாக பிரிந்து இருப்பதுடன் கடல் மட்ட உயர்வால் தீவுகளாக உருவாகியிருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.அத்துடன் பூமி விரிவடைந்ததால், மேலடுக்கில் ஏற்பட்ட பிளவுகள் வழியாக, பூமிக்குள் இருந்து, மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பால், கரீபியன் தீவுக்கு கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள, எரிமலைகள் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளான கியூபா,ஹிப்பானொலியா,ஜமைக்கா,போர்டோ ரிக்கோவின் கடற் கரை ஒரப் பகுதிகள், ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று இருக்கிறது.இதன் மூலம் பூமி விரிவடைந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. மேலும் சில ஆதாரங்கள் கண்டது தட்டு நகர்ச்சி கொள்கையின் படி,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,புதிய கடல் தளங்கள் தொடர்ந்து உருவாகி, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இதன் படி அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது சில லட்சம் ஆண்டுகளாகவும் அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தள பாறைகளின் தொன்பமையானது பத்து கோடி ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும் ஏனென்றால் பாத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடல் பகுதியானது விரிவடைந்து நகர்ந்ததால் உருவானதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து, நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாக இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது,  ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. மேலும் ஒரு புதிய ஆதாரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 1976 ஆம் ஆண்டு,ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான, டாக்டர் பீட்டர் ரானா,தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஒரு நீர் மூழ்கிக் கலனின் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு மைல் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆய்வு செய்தனர். அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு இரண்டு மணி நேரமானது. எரிமலைகளும் சுடு நீர் ஊற்றுக்களும் நிறைந்த, அந்த கடலடி எரிமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில்,விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்,காமிராக்கள் மூலம் வினோத கடல் உயிரினங்களைப் படம் பிடித்து, வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,ஆய்வுக் கூடத்துக்கு திரும்பினார்கள். அதன் பிறகு, டாக்டர் பீட்டர் ரானா, அந்தப் படச் சுருள்களை டெவலப் செய்து பார்த்த பொழுது,கடல் தரையில்,தேன் கூடு போன்ற வடிவில் இருந்த படிவுகள் இருந்ததைக் கண்டார். ஏதோ ஒரு கடல் உயிரினத்தின் புதைப் படிவங்களா அல்லது எதோ ஒரு கடல் உயிரினத்தின் கூடா,அல்லது கடல் தாவரத்தின் புதைப் படிவங்களா என்று குழம்பினார். எனவே, அந்தப் படிவுகள் குறித்து அறிவதற்காக,நிபுணர்களின் உதவியை நாடினர். ஆனால், ஒருவராலும் அந்தப் படிவு குறித்த விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. எனவே,அந்தப் படிவமானது, எதோ ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்ற விளக்கத்துடன்,ஒரு அறிவியல் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டார். அதனைப் படித்த,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான,டாக்டர் அடால்ப் சிலாக்கர்,உடனடியாக டாக்டர் பீட்டர் ரானாவைத் தொடர்பு கொண்டு,அதே போன்ற படிவுகளானது,ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் வியன்னா பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான, கடற் கரையோரப் பாறைகளில்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது குறித்து தெரிவித்தார். பேலியோ டிக்டைன் என்று அழைக்கப் படும் அந்தப் படிவமானது ‘பேலியோ டிக்டைன் நோடசம்’ என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்ட கூடு என்றும் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். ஆனாலும், இது வரை அந்த உயிரினத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை என்றும்,அந்த உயிரினத்தின் மூதாதையானது முதன் முதலில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்ததாகவும் அதன் பிறகு,காலப் போக்கில்,ஆழ்கடல் பகுதிக்கு வாழத் தலைப் பட்டதாகவும்,அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். ############## இதே போன்ற படிவுகள்,வட அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் சுண்ணாம்புப் படிவுகளில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதே போன்று கலா பாகாஸ் தீவுக்கு அருகில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஜப்பானுக்கு அருகில் இருக்கும் கடல் தரை அகழிப் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. லியனார்டோ டாவின்சியின் குறிப்புகளிலும் பேலியோ டிக்டைன் படிவின் வரை படம் காணப் படுகிறது. ############## ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகக் கருதப் பட்ட, படிவமானது பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகளானது, தற்பொழுது புதிய கடல் தளப் பகுதி உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,இன்றும் அந்த உயிரினம் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், எனவே இது குறித்த ஆராய்ச்சியில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகவும்,பீட்டர் ரானாவுக்கு,டாக்டர் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,கடந்த 1990,1991,1993,2001,2003 ஆகிய ஆண்டுகளில்,டாக்டர் பீட்டர் ரானா,பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க,நவீனக் கருவிகள் பொருத்தப் பட்ட நீர் மூழ்கிக் கலன் மூலம் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மேலும் பல பேலியோ டிக்டைன் படிவுகளைக் கண்டு பிடித்தார். டாக்டர் பீட்டர் ரானாவுடன், டாக்டர் அடால்ப் சிலாக்கரும்,நீர் மூழ்கிக் கலனில் பயணம் செய்தார். ஆனாலும், இறுதி வரை அவர்களால், பேலியோ டிக்டைன் பதிவுகளை உருவாக்கிய, பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க முடிய வில்லை. குறிப்பாகக் கடல் நீருக்குள் புதைப் படிவப் பாறைகள் உருவாக இயலாது. ஏனென்றால் சேரும் சகதியும் மண்ணும் கடல் நீரினாலும்,கடல் அலையினாலும் கலைக்கப் பட்டு விடும். அதே போன்று மற்ற கடல் உயிரினங்களாலும் கடல் உயிரினத்தின் சுவடுகள் கலைக்கப் பட்டு விடும். குறிப்பாகக் கடல் உயிரினங்களானது, திடீரென்று கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் உயரும் பொழுது,ஏற்படும் நிலச் சரிவின் காரணமாகச் சேறு சகதியில் சிக்கிப் புதையுண்ட பிறகு.சூரிய ஒளியில் காய்ந்து,காலப் போக்கில், இறு எனவே,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் கூடுகளின் பாறைப் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து திடீரென்று உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. அதன் பிறகு, வெய்யில் காய்ந்து சேறும் சகதியும் பாறையாக உருவான பிறகு,கடல் மட்ட உயர்வால்,மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடலுக்குள் மூழ்கி இருப்பதும் பேலியோ டிக்டைன் படிவுகள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. முக்கியமாக ,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து பூமிக்கு அடியில் இருந்து இளகிய பாறைக் குழம்பானது வெளிப் பட்டுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் அந்தக் கடல் தளங்களுடன் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறினாலும் கூட,தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடந்த ஐந்து கோடி ஆண்டுகளாக அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது. இதே போன்று, அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும், புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொண்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதையும் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம், கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாக அதாவது பூமி தோன்றிய காலம் முதல்,அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பதும்,அதே போன்று கடல் தளங்களுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணமாகிறது. எனவே,கடல் தளம் மற்றும் கண்டங்களின் பிரிவுகளால், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அட்லாண்டிக் கடல் உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது அடிப்படைஆதாரமற்ற கற்பனை ஆகும். அத்துடன் நில கடல் தளம் நகர்ந்து கண்டங்களுக்கு அடியில் செல்வதால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை ஆகும். குறிப்பாக அட்லாண்டிக் கடல் மாதிரி அடிப்படையிலும், அதே போன்று பசிபிக் கடல் மாதிரி அடிப்படையிலும், கரீபியன் தீவுக்கு கூட்டத்தின் தோற்றத்தை விளக்க இயலாத நிலையில் தற்பொழுது கரீபியன் தீவுக்கு கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற ஒரு விளக்கத்தையும் சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் முன் மொழிந்து இருக்கின்றனர்.ஆனால் எந்தக் கருத்துக்கும் ஆதாரம் இல்லாததால் கரீபியன் தீவின் தோற்றம் குறித்து இன்றளவும் புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே விவாதம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. அதனால் அமெரிக்கப் புவியியல் வல்லுநர்கள் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ,ஒரு ' மறைமுகமான  ' விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால், பின்னர் அதன் தோற்றம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவானது என்ற கேள்விக்கு விளக்கம் கூற வேண்டும், என்பதால் அதனைத் தவிர்க்கும் பொருட்டு,கரீபியன் தீவுக் கூட்டமானது,குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,கரீபியன் பாறைத் தட்டானது, வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற மறைமுகமான விளக்கத்தை கூறி இருக்கின்றனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கிறது என்ற கருத்துக்கும் கூட, மேற்சொன்ன அதே விளக்கத்தை பொருத்திக் கொள்ள முடியும்.ஆக கரீபியன் தீவுக் கூட்டமானது, எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு விடை கூறத் தெரியாத நிலையில்,அமெரிக்கப் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒரு தந்திரமான விளக்கத்தைக் கூறி தப்பித்து இருக்கின்றனர்.நிச்சயம் இந்த விளக்கமானது, உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே எப்படி உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு ஆதார பூரவமாக விளக்கம் கூறிய பிறகு , கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு விளக்கம் கூறினால் மட்டுமே, அந்த விளக்கமானது அறிவியல் பூர்வமான விளக்கமாக இருக்கும். அப்படி ஒரு விளக்கத்தை தெரிவிக்கும் நிலையில் தற்பொழுது யாரும் இல்லை. இந்த நிலையில்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ''இரண்டாவது முறையாகவும்'' ஆணித் தரமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு, எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை நிரூபிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதைப் போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என, இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில், 11.03.2011 அன்று, நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதைப்  போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.

No comments:

Post a Comment