Friday, 4 April 2025
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
000000000000000
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உன்னி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகி கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
000000000000
நார்வே நாட்டுக் கடல் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள, கடல் தரையில்,டைனோசா புதை படிவங்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாய்க் கண்டு பிடித்து நான் தெரிவித்து இருந்தேன்.அதே போன்று கண்டங்களின் மேல் பரவலாக்க கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதையும் கண்டு பிடித்து தெரிவித்து இருந்தேன் இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து இருப்பதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதையும் கண்டு பிடித்துக் கூறி இருந்தேன்.பூமியின் மையக் கோளம் விரிவடையும் பொது அதனை சுற்றி இருக்கும் மேற்பகுதியும் விரிவடைகிறது இதனால் பூமியின் மேலடுக்கில் விரிசல்கள் இடைவெளிகள் ஏற்படுகிறது .இந்த நிலையில் பூமிக்குள் இருந்து வெளிப் படும் பாறைக்கு குழம்பு அந்த இடைவெளிக்குள் நுழைந்து உயரும் பொழுது பாறை அடுக்குகள் நொறுங்குகிறது. இதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுகிறது.
0000000000000000
இந்த நிலையில்,பூமியின் மையக் கோளம் விரிவடைந்து கொண்டு இருப்பதை, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேனியல் ஃப்ரோஸ்ட் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், நில அதிர்ச்சி அலைகள், பூமிக்குள் பரவுவதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்தனர், அதன் அடிப்படையில் பூமியின் உட்கருக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர் பூமிக்குள் படிகங்கள் உருவாகுவதால் பூமியின் உட்கருக் கோளம் விரிவடைகிறதாகவும் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இந்த விரிவானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும் ''இந்தோனேசியாவுக்கு அடியில் வேகமாக நடைபெறுவதாகவும்'' அவர் தெரிவித்து இருக்கிறார்.
00000000000000000
பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குக்கிறேன்.
பூமியின் மையமானது ஒரு அடர்த்தியான வெண்ணெய்யால் ஆன கோளம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.அதனைச் சுற்றிலும் கிரீம் பிஸ்கெட்டில் அல்லது கேக்கில் இருக்கும் கிரீம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மேற்புறமானது பொறுக்கு போன்ற பிஸ்கெட்டால் ஆனது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது மையக் கோளம் விரிவடைவடைந்தால் என்ன ஆகும்.அதனை சுற்றி இருக்கும் கிரீம் போன்ற பகுதி விரிவடையும்.அதனால் அதனை சுற்றி இருக்கும் மேற்புற பொறுக்கு போன்ற பிஸ்கெட் பகுதியானது உடைந்து சிதறி பல பகுதிகளாக பிரிந்து,ஒன்றில் இருந்து ஒன்று விலகும்.இதனை கண்டங்களாக கற்பனை செய்து கொள்ளலாம்.அதற்கு அடுத்த அடுக்காக இருக்கும் கிரீமை, கடல் தளமாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படித்தான் நமது பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.குறிப்பாக மேற்பகுதி விரிவடையும் பொழுது, அதில் ஏற்படும் பிளவுகள் மற்றும் இங்கு இடுக்குகள் வழியாக, பூமிக்குள் இருந்து வெளிப் படும் பாறைக் குழம்பால் நிரப்பப் படும் பொழுது, மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பால், பாறை அடுக்குகள் உடையும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுகிறது. மேலும் மேலும் பாறைக் குழம்பு உயரும் பொழுது, எரிமலையாக வெடித்து வெளியேறுகிறது. கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடிக்கும் பொழுது சுனாமி அலைகள் உருவாகுகிறது.
பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதால் விரிவடைகிறது.குளிரும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணையும் வெளியேறுகிறது.வெளியேறிய நீரால் கடல் உருவானது. வெளியேறிய வாயுக்களால் வளி மண்டலம் உருவானது.
00000000000000
0000000000000000
புதை படிவ ஆதாரங்கள் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கண்டங்கள் எல்லாம். கடல் தளங்களுடன் பக்க வாட்டாக. நகர்ந்து கொண்டு இருப்பதாக. அறிவியல் உலகில் ஒரு தவறான கருத்து நிலவுகிறது.
அடிப்படை ஆதாரம் இல்லாத கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து எப்படி உருவாக்கப் பட்டது? இது குறித்து சற்று விரிவாக காணலாம்.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர், என்ற ஆராய்ச்சியாளர் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் அவரின் மற்ற ஆராய்ச்சியாளர்கள் அப்பொழுது ஏற்றுக் கொள்ள வில்லை.
காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரப் படுக்கைகள் மேல் இருந்தபடி, விலங்கினங்கள் பல நாட்கள், பல வாரங்கள், கடலில் தத்தளித்தபடி, மிதந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து, பெருகி இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில், அண்டார்க்டிக் கண்டத்தில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, லிஸ்ட்ரோசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்கள், இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டு பிடிக்கப் பட்டது.ஆனால் லிஸ்ட்ரோ சாராஸ் விலங்கானது, தாவரங்களை உண்டு ஆமையைப் போன்று, மெதுவாக நகரக் கூடிய, ஒரு மந்தமான விலங்கு என்பதுடன், நடக்கும் பொழுது இடுப்பை வளைத்து வளைத்து,அசைத்து அசைத்து மெதுவாக நடக்கும் விலங்கு என்பதும், எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்தது.எனவே அந்த விலங்கால், பல நாட்கள் கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, ஆர்ப்பரிக்கும் கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும், அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்திருக்கும் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது.
எனவே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் நகர்வதற்கான சாத்தியங்கள் குறித்து யோசிக்கலாயினர்.
இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார்.
இந்த நிலையில்,வெக்னர், ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள், அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை, வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தைச் சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
முதல் பிரிவு.
அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இரண்டாவது பிரிவு.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
மூன்றாவது பிரிவு.
அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி, விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.
அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பணி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே, த்ராப் அந்த வரை படத்தை தயாரித்தார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில். வடக்கு தெற்கு திசையில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, எரிமலைத் தொடர் இருப்பதுடன், அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும், வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப், வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின், பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படத்தையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை, ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரை படத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது, ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது.
இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம், ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
துருவப் பகுதிகளில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன?
கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில் பனிரெண்டு இந வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன.
அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது.
பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய அளவில் இருக்கும், டைனோசர்களின் முட்டைகளானது, பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது.
நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை. ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த, டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய, ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க, ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது, கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில், டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, காடுகள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
டைனோசர்கள் எப்படி அழிந்தன?
சில ஆராய்ச்சியாளர்கள்,ஆர்க்டிக் பகுதி டைனோசர்கள் ஒடிந்த கிளைகள் கொப்புகளை உண்டு, எப்படியோ தப்பித் பிழைத்து இருக்கும் என்று நம்பினாலும் இந்த விளக்கமானது ,டைனோசர்களின் அழிவுக்கு கூறப் பட்ட, விண்கல் மோதல் விளக்கத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல், ஒரு ராச்சத விண் கல் மோதியதாகவும், அதனால் எழுந்த புழுதியானது, பூமியெங்கும் பரவி, ஆறு மாத காலம் சூரியனையே மறைத்தாகாவும், அதனால் தாவர இனங்களே அழிந்ததாகவும், அதனால் டைனோசர் போன்று, அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய, விலங்கினங்கள் முற்றாக அழிந்ததாகவும், ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதனால் ஆர்க்டிக் பகுதியில். ஆறுமாத காலம் டைனோசர்கள் கொப்புகளையும் கிளைகளையும் உண்டு வாழ்ந்தால், விண் கல் மோதலின் போதும் அதே போன்று கொப்புகளையும் கிளைகளையும் உண்டு, டைனோசர்கள் உயிர் பிழைத்து இருக்க முடியுமே என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி ஆறு மாத காலம், சூரிய ஓளியின்றி வாழ்ந்தன, அடர்ந்த காடுகள் எப்படி உருவாகின, போன்ற கேள்விகளும் விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
கடல் தளமானது, தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ,நார்வே நாட்டுக் கடல் பகுதியில், எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது, கிடைத்த பாறைப் பகுதிகளில், ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரவலாக வாழ்ந்த, பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,தாவர உண்ணி வகை டைனோசரான, பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது, எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர், அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட, எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் 6000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து, சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம், டைனோசர் காலத்தில், கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில், காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும்,அதன் வழியாக டைனோசர்கள் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து பூமியின் மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
இவ்வாறு கண்டங்களும், கடல் மட்டமும், மாறி மாறி உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
முக்கியமாக டைனோசர்களின் காலத்தில், பூமியானது சிறியதாக இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில், சூரிய ஒளியும் விழுந்து இருக்கிறது.
தற்பொழுது பூமியின் நடுப்பகுதி புடைத்துக் கொண்டு இருக்கிறது.ஆனால் துருவப் பகுதிகளில் தட்டையாக இருக்கிறது.ஆனால் பூமி உருவாகிய பொழுது, கோளமாக இருந்திருக்கிறது.பூமி விரிவடைந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
00000000000000000000
இந்தியா தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை.
இந்திய நிலப் பகுதியானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு அந்தக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுடன் இந்திய பிரிந்து நகர்ந்ததாகவும், அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மடகாஸ்கர் தீவில் இருந்தும், இந்திய நிலப் பகுதி பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தின் படி, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நிலப் பகுதியானது, ஒரு தீவுக் கண்டமாக, இந்திய பெருங் கடலில் நகர்ந்து கொண்டு இருந்ததாக, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அவ்வாறு இந்திய நிலப் பகுதியானது, இந்திய பெருங் கடலில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த பொழுது, இந்தியாவுக்கு வட பகுதியில் இருந்த கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் உரசிய படி நகர்ந்து சென்றதாகவும், அவ்வாறு பூமிக்கு அடியில் சென்ற இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது, பூமிக்குள் இருந்த வெப்பத்தால் மறுபடியும் பாறைக் குழம்பாக மாறி, மேல் நோக்கி உயர்ந்த பிறகு, கடல் தளத்தை பொத்துக் கொண்டு, இந்தோனேசிய பகுதியில் எரிமலைகளாக உருவானதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்தோனேசியப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு, இவ்வாறான இந்திய நிலப் பகுதியின் நகர்ச்சியே காரணம் என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய நிலப் பகுதியானது, ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவு,ம் அதனால் இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமயமலைத் தொடர் உருவானதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இமய மலைப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு, இவ்வாறான இந்திய நிலப் பகுதியின் நகர்ச்சியே காரணம் என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் இமய மலையில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ட்ரைலோபைட் போன்ற கடல் உயிரினங்களின் புதைப்படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இமய மலையானது, ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே, கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களானது, கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கருத்தானது, அடிப்படை ஆதாரம் இல்லாத கருத்து என்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
,இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி அவார்கள்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று,நேட்சர் பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கிறார்.
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,லேட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும், காலத்தில், இந்திய நிலப் பகுதியானது,இந்திய பெருங் கடலில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படும் நிலையில்,அதே கால கட்டத்தில்,ஆசியக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ட்ரூடோண்டிட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே லேட் கிரட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த, ட்ரூடோண்டிட் டைனோசரின் புதை படிவங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில், காவிரி ஆற்றுப் பகுதியில், காணப் படுவதன் அடிப்படையிலும் , டைனோசர்கள் காலத்தில் இருந்தே, கண்டங்கள் எல்லாம், தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே, நிலையாக இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்ட தொன்மை மரபு பிசினில் பூச்சிகளின் புதை படிவங்கள்
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களை எப்படி மறுபடியும் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள் என்பதற்கு ஜுராசிக் பார்க் படத்தில் ஒரு காட்சி வரும்.
அதாவது டைனோசர்கள் காலத்தில் டைனோசரை கடித்த கொசு ஒன்று மரப் பிசினில் சிக்கிக் கொள்ளும்.அதை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அந்த கொசுவின் இரத்தத்தை எடுத்து அதில் இருக்கும் டைனோசரின் மரபணுவை பிரித்து வேறு ஒரு முட்டைக்குள் வைத்து டைனோசரை உருவாக்குவதாக காட்சி அமைக்கப் பட்டு இருக்கும்.
இதே போன்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் இருந்து வெளிப் பட்ட பிசினானது நாற்பதாயிரம் ஆண்டுகளில் காய்ந்து உலர்ந்து இறுதியில் ஆம்பர் என்று அழைக்கப் படும் முத்துக்கள் போன்ற கல்லாக மாறி விடும்.
குறிப்பாக தாவரங்கள் மற்றும் பூச்சிகள் உள்பட விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால நிலையில் வாழக் கூடியவைகள்.
எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பிசினில் உள்ள பூச்சிகள் மற்றும் தாவரங்களின் மரந்த த் துகள்கள் மற்றும் விதைகளை ஆய்வு செய்வதன் மூலம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் நிலவிய தட்ப வெப்ப நிலையை ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள காம்பே வளைகுடா பகுதியில் ஐந்து கோடியே இருப்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான ஆம்பர் 150 கிலோ அளவில் சேகரிக்கப் பட்டது.அதன் அடிப்படையில் குஜராத் பகுதியில் அடர்ந்த காடுகள் இருந்திருப்பது தெரிய வந்தது.ஆனால் அதில் சிக்கி இருந்த சிலந்திகள்,வண்டுகள்,குளவிகள்,எறும்புகள்,தேனீக்கள்,ஆகியவற்றை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி இந்தியாவானது தென் துருவப் பகுதியில் இருந்து நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாக நம்பப் பட்டது.இந்த நிலையில் குஜராத் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஆம்பரில் காணப் பட்ட பூச்சியினங்களானது ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா பகுதியில் காணப் படும் பூச்சியினங்களாக இருந்தது முக்கியமாக அதில் பல பூச்சி இனங்களானது பறக்க இயலாத பூச்சிகளாகவும் இருந்தது.
அதன் அடிப்படையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் ஆசியக் கண்டத்துக்கும் இடையில் பல தீவுகள் இருந்து இருக்கலாம் என்று தற்பொழுது சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அந்தத் தீவுகள் வழியாக சில பூச்சி இனங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் சில பூச்சி இனங்களானது கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலம் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
குறிப்பாக ஆறாரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் பட்ட நிலையில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய பகுதியில் வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டியின் புதை படிவங்களும் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நாஸ்கல் கிராமத்தில் கண்டு பிடிக்கப் பட்டத்தை தொடர்ந்து, ஆறாரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை என்று இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத் தக்கது.
00000000000000000
பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால், சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டது .-விஞ்ஞானி.க.பொன்முடி.
அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும், சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும், நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.அதை போலவே, அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும், ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் கூட , என்று அழைக்கப் படும் ,அமெரிக்க ஐக்கிய புவியியல் கழகத்தை சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருப்பதுடன், அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது.
எனவே கரீபியன் தீவுக் கூட்டாமானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.இந்தக் கருத்தானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு இருக்கும், மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு, குளிர்ந்து இருகிப் புதிய கடல் தளமாக உருவான பிறகு, எதிரெதிர் திசைகளை நோக்கி, அதாவது மேற்கு கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அதன் அடிப்படையில், அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அதே போன்று அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், யூரேசியக் கண்டமானது, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அதே போன்று, அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது, வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அதே போன்று, அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது, வட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளங்களுடன், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் அடிப்படையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரையானது, தொடர்ச்சியாக இருப்பதுடன், கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், அந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், எல்லைகளை வரையறை செய்ய முடிய வில்லை. எனவே அந்த பகுதியானது 'வரையறுக்கப் படாத எல்லை' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் அட்லாண்டிக் கடல் தளங்களானது, மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் ,இந்த நிலையில் பூமிக்குள் இருக்கும் எரிமலைப் பிழம்பால் அட்லாண்டிக் கடல் தளமானது, தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால், அந்த எரிமலைத் தீவுகளானது, அட்லாண்டிக் கடல் தளங்களானது, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி, வரிசையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது, வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்து இருக்கலாம், என்ற ஒரு கருத்து உருவாக்கப் பட்டது.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டத்தில், மிகவும் தொன்மையான தீவே ஒன்றரை கோடி ஆண்டுகள் என்று தெரிய வந்துள்ளது.
எனவே ,கரீபியன் தீவுக் கூட்டமானது, காலபாகஸ் தீவு அமைந்து இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பிறகு, இலேசான பாறைத் தட்டாக உருவானதால்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக சில ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள்.
இந்தக் கருத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இந்த இரண்டு கண்டங்களையும் இணைக்கும் வண்ணம் பாலம் போன்று மாதிய்யா அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது.எனவே க்ரீஎபியன் தீவுக்கு கூட்டம் எப்படி இந்த நிலப் பகுதியைக் கடந்து பசிபிக் கடல் பகுதியில் இருந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்தது என்ற கேள்வி எழுந்தது.இந்தக் கேள்விக்கு விடை கூறும் வண்ணம், கரீபியன் தீவுக்கு கூட்டமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பொழுது, மத்திய அமெரிக்க நீலப் பகுதியே உருவாகியிருக்க வில்லை என்றும், மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் அமிழ்ந்து இருந்ததாகவும், கரீபியன் தீவுக்கு கூட்டமானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், வந்து சேர்ந்த பிறகே, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறினார்கள்.
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும், தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே, எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.இதன் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் கடல் மாதிரியை நிராகரித்து விட்டனர்.குறிப்பாக பசிபிக் கடல் மாதிரியின் படி கரீபியன் தீவுக்கு கூட்டமானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது. அதன் அடிப்படையில் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட அட்லாண்டிக் கடல் தளமானது கரீபியன் தீவுகளுக்கு அடியில் சேர பிறகு வெப்பத்தால் உருகி, மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தை துளைத்துக் கொண்டு உயர்ந்ததால், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ள, எரிமலைத் தீவுகளானது, வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் பசிபிக் கடல் மாதிரிக்கு ஆதாரம் இல்லாததால், தற்பொழுது அந்த எரிமலைகள் எப்படி உருவானது, என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
முக்கியமாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா,ஹிஸ்பானொலியா,ஜமைக்கா,போர்டோ ரிக்கோ,ஆகிய பெரிய தீவுகளானது. கண்டங்களைப் போன்று, கிரானைட் வகைப் பாறையால் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும், அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
முக்கியமாக கரீபியன் தீவுகளில், கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.இதன் மூலம் கரீபியன் தீவுகளானது , கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இவ்வாறு கடல் மட்டமும், தீவுகளும் மாறி மாறி உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இவ்வாறு கரீபியன் நிலப் பாலம் உயர்ந்ததால், பல பகுதிகளாக பிரிந்து இருப்பதுடன், கடல் மட்ட உயர்வால் உடைந்த நிலப் பாலம் , தீவுகளாக உருவாகியிருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.அத்துடன் பூமி விரிவடைந்ததால், மேலடுக்கில் ஏற்பட்ட பிளவுகள் வழியாக, பூமிக்குள் இருந்து, மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பால், கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள, எரிமலைகள் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளான கியூபா,ஹிப்பானொலியா,ஜமைக்கா,போர்டோ ரிக்கோவின் கடற் கரை ஒரப் பகுதிகளானது , ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று இருக்கிறது.இதன் மூலம் பூமி விரிவடைந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
மேலும் சில ஆதாரங்கள்.
கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,புதிய கடல் தளங்கள் தொடர்ந்து உருவாகி, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதன் படி அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, சில லட்சம் ஆண்டுகளாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, ,பத்து கோடி ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அட்லாண்டிக் கடல் பகுதியானது, கடல் தளம் விரிவடைந்து நகர்ந்ததால் உருவானதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்தார்.அது குறித்து அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து, நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது, நிலையாக இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
மேலும் ஒரு புதிய ஆதாரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
கடந்த 1976 ஆம் ஆண்டு,ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான, டாக்டர் பீட்டர் ரானா,தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஒரு நீர் மூழ்கிக் கலனின் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு மைல் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆய்வு செய்தனர்.
அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு இரண்டு மணி நேரமானது.
எரிமலைகளும் சுடு நீர் ஊற்றுக்களும் நிறைந்த, அந்த கடலடி எரிமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில்,விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்,காமிராக்கள் மூலம் வினோத கடல் உயிரினங்களைப் படம் பிடித்து, வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,ஆய்வுக் கூடத்துக்கு திரும்பினார்கள்.
அதன் பிறகு, டாக்டர் பீட்டர் ரானா, அந்தப் படச் சுருள்களை டெவலப் செய்து பார்த்த பொழுது,கடல் தரையில்,தேன் கூடு போன்ற வடிவில் இருந்த படிவுகள் இருந்ததைக் கண்டார்.
ஏதோ ஒரு கடல் உயிரினத்தின் புதைப் படிவங்களா அல்லது எதோ ஒரு கடல் உயிரினத்தின் கூடா,அல்லது கடல் தாவரத்தின் புதைப் படிவங்களா என்று குழம்பினார்.
எனவே, அந்தப் படிவுகள் குறித்து அறிவதற்காக,நிபுணர்களின் உதவியை நாடினர்.
ஆனால், ஒருவராலும் அந்தப் படிவு குறித்த விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை.
எனவே,அந்தப் படிவமானது, எதோ ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்ற விளக்கத்துடன்,ஒரு அறிவியல் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டார்.
அதனைப் படித்த,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான,டாக்டர் அடால்ப் சிலாக்கர்,உடனடியாக டாக்டர் பீட்டர் ரானாவைத் தொடர்பு கொண்டு,அதே போன்ற படிவுகளானது,ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் வியன்னா பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான, கடற் கரையோரப் பாறைகளில்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது குறித்து தெரிவித்தார்.
'பேலியோ டிக்டைன்' என்று அழைக்கப் படும் அந்தப் படிவமானது ‘பேலியோ டிக்டைன் நோடசம்’ என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்ட கூடு என்றும் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார்.
ஆனாலும், இது வரை அந்த உயிரினத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை என்றும்,அந்த உயிரினத்தின் மூதாதையானது, முதன் முதலில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்ததாகவும் அதன் பிறகு,காலப் போக்கில்,ஆழ்கடல் பகுதிக்கு வாழத் தலைப் பட்டதாகவும்,அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார்.
இதே போன்ற படிவுகள்,வட அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் சுண்ணாம்புப் படிவுகளில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதே போன்று கலா பாகாஸ் தீவுக்கு அருகில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஜப்பானுக்கு அருகில் இருக்கும் கடல் தரை அகழிப் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
லியனார்டோ டாவின்சியின் குறிப்புகளிலும் பேலியோ டிக்டைன் படிவின் வரை படம் காணப் படுகிறது.
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகக் கருதப் பட்ட, படிவமானது பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகளானது, தற்பொழுது புதிய கடல் தளப் பகுதி உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,இன்றும் அந்த உயிரினம் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், எனவே இது குறித்த ஆராய்ச்சியில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகவும்,பீட்டர் ரானாவுக்கு,டாக்டர் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து,கடந்த 1990,1991,1993,2001,2003 ஆகிய ஆண்டுகளில்,டாக்டர் பீட்டர் ரானா,பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க,நவீனக் கருவிகள் பொருத்தப் பட்ட நீர் மூழ்கிக் கலன் மூலம் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மேலும் பல பேலியோ டிக்டைன் படிவுகளைக் கண்டு பிடித்தார்.
டாக்டர் பீட்டர் ரானாவுடன், டாக்டர் அடால்ப் சிலாக்கரும்,நீர் மூழ்கிக் கலனில் பயணம் செய்தார்.
ஆனாலும், இறுதி வரை அவர்களால், பேலியோ டிக்டைன் படிவுகளை உருவாக்கிய, பேலியோ டிக்டைன் உயிரினத்தைக் கண்டு பிடிக்க முடிய வில்லை.
குறிப்பாகக் கடல் நீருக்குள் புதைப் படிவப் பாறைகள் உருவாக இயலாது.
ஏனென்றால் சேரும் சகதியும் மண்ணும், கடல் நீரினாலும்,கடல் அலையினாலும் கலைக்கப் பட்டு விடும்.
அதே போன்று மற்ற கடல் உயிரினங்களாலும் கடல் உயிரினத்தின் சுவடுகள் கலைக்கப் பட்டு விடும்.
குறிப்பாகக் கடல் உயிரினங்களானது, திடீரென்று கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் உயரும் பொழுது,ஏற்படும் நிலச் சரிவின் காரணமாகச் சேறு சகதியில் சிக்கிப் புதையுண்ட பிறகு.சூரிய ஒளியிலும் காற்றினாலும் காய்ந்து உலர்ந்து காலப் போக்கில், புதை படிவங்களாக உருவாகுகின்றன.
எனவே,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் கூடுகளின் பாறைப் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்த காலத்தில். கடலுக்கு அடியில் இருந்து திடீரென்று உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
அதன் பிறகு, வெய்யில் காய்ந்து, சேறும் சகதியும் பாறையாக உருவான பிறகு,கடல் மட்ட உயர்வால்,மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடலுக்குள் மூழ்கி இருப்பதும், பேலியோ டிக்டைன் படிவுகள் மூலம் தெரிய வருகிறது.
முக்கியமாக ,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும், எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து பூமிக்கு அடியில் இருந்து, இளகிய பாறைக் குழம்பானது, வெளிப் பட்டுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும், அந்தக் கடல் தளங்களுடன் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறினாலும் கூட,தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த பேலியோ டிக்டைன் உயிரினத்தின் கோடுகளின் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடந்த ஐந்து கோடி ஆண்டுகளாக அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று, அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும், புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொண்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதையும் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம், கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாக அதாவது பூமி தோன்றிய காலம் முதல்,அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பதும்,அதே போன்று கடல் தளங்களுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே,கடல் தளம் மற்றும் கண்டங்களின் பிரிவுகளால், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அட்லாண்டிக் கடல் உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது அடிப்படைஆதாரமற்ற கற்பனை ஆகும்.
பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகளில், பல முறை அதாவது ஒவ்வொரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, கண்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஒரு சூப்பர் கண்டமாக உருவான பிறகு ,கடல் தள விரிவாக்கம் மூலம், மறுபடியும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன, என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்தானது, ஒரு அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்பது பேலியோடிக்டின் புதை படிவங்கள் மற்றும் தொன்மைப் பாறைகள் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் கடல் தளம் நகர்ந்து, கண்டங்களுக்கு அடியில் செல்வதால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை ஆகும்.
குறிப்பாக அட்லாண்டிக் கடல் மாதிரி அடிப்படையிலும், அதே போன்று பசிபிக் கடல் மாதிரி அடிப்படையிலும், கரீபியன் தீவுக் கூட்டத்தின் தோற்றத்தை விளக்க இயலாத நிலையில், தற்பொழுது கரீபியன் தீவுக்கு கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற ஒரு விளக்கத்தையும் சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் முன் மொழிந்து இருக்கின்றனர்.ஆனால் எந்தக் கருத்துக்கும் ஆதாரம் இல்லாததால், கரீபியன் தீவின் தோற்றம் குறித்து இன்றளவும் புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே விவாதங்கள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.
அதனால் அமெரிக்கப் புவியியல் வல்லுநர்கள் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ,ஒரு ' மறைமுகமான ' விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால், பின்னர் அதன் தோற்றம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவானது என்ற கேள்விக்கு விளக்கம் கூற வேண்டும், என்பதால் அதனைத் தவிர்க்கும் பொருட்டு,கரீபியன் தீவுக் கூட்டமானது,குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,கரீபியன் பாறைத் தட்டானது, வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற மறைமுகமான விளக்கத்தை கூறி இருக்கின்றனர்.
அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது..இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் , வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும்.
அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லாமல் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கிறது என்ற கருத்துக்கும் கூட, மேற்சொன்ன அதே விளக்கத்தை பொருத்திக் கொள்ள முடியும்.
ஆக கரீபியன் தீவுக் கூட்டமானது, எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில்,அமெரிக்கப் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒரு தந்திரமான விளக்கத்தைக் கூறி தப்பித்து இருக்கின்றனர்.
நிச்சயம் இந்த விளக்கமானது ஒரு அறிவியல் விளக்கம் அல்ல .
உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது, எங்கே எப்படி உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு, ஆதார பூரவமாக விளக்கம் கூறிய பிறகு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு விளக்கம் கூறினால் மட்டுமே, அந்த விளக்கமானது அறிவியல் பூர்வமான விளக்கமாக இருக்கும்.
எனவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ''இரண்டாவது முறையாகவும்'' ஆணித் தரமாகவும்'ஆதாரபூர்வமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு, எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை நிரூபிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதைப் போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என, இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில், 11.03.2011 அன்று, நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதைப் போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வளி மண்டல் அசாதாரண வெப்ப நிலையை பதிவு செய்த வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் நிரூபணமாகி இருக்கிறது.
0000000000000000000000
பர்மா நில அதிர்ச்சிக்கு பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம்.
இந்திய நிலப் பகுதி மற்றும் யுரேசிய நிலப் பகுதிகளானது பர்மாவுக்கு அடியில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பர்மா பகுதியில் நிலத்தில் முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாக நம்புகின்றனர். இவ்வாறான நிலப் பகுதிகளின் நகர்ச்சியால் பர்மா நில முறிவுப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறான விளக்கம் கூறுகின்றனர்.குறிப்பாக இந்தக் கருத்தின் படி இந்திய நிலப் பகுதியானது, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பெருங் கடலில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை. எனவே கண்டங்களின் நகர்ச்சியால் பர்மாவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது, அடிப்படை ஆதாரமில்லாத விளக்கம் ஆகும்.
000000000000000000
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment