Saturday, 30 April 2016

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது


பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது

அத்தியாயம் ஒன்று

டைனோசர்கள் எப்படி தீவுகளுக்குச் சென்றன?

பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன?

( தற்பொழுது  கூறப் படும் தவறான விளக்கமும், எனது விளக்கமும்.)

அத்தியாயம் இரண்டு

நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் சுனாமிகள் உருவாகுவதற்கும் காரணம் என்ன?
( தற்பொழுது  கூறப் படும் தவறான விளக்கமும், எனது விளக்கமும்.)

அத்தியாயம் மூன்று

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன?

( தற்பொழுது  கூறப் படும் தவறான விளக்கமும், எனது விளக்கமும்.)

இணைப்பு.
கடல் மட்டம் தாழ்வாக  இருந்ததை எடுத்துக் காட்டும்  தீவு விலங்கினங்கள்.


அத்தியாயம் ஒன்று

டைனோசர்கள் எப்படி தீவுகளுக்குச் சென்றன?



டைனோசர்களால் கடல் பகுதியைக் கடக்க இயலாது.ஆனால் மடகாஸ்கர் ,நியூ சிலாந்து மற்றும் கியூபா போன்ற தீவுகளில் டைனோசர்களின் புதைபடிவங்களை தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு படித்து இருக்கின்றனர்.அதே போன்று ஆஸ்திரேலியா அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.எனவே டைனோசர்கள் எப்படி தீவுகளுக்கும் தீவுக் கண்டங்களுக்கும் சென்றன? என்ற கேள்வி எழுந்தது.
இந்தப் புதிருக்கு தற்பொழுது புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ,ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும் ,அதன் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று நம்புகின்றனர்.
இந்த விளக்கத்தை முதன் முதலில் கூறியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர்.குறிப்பாக அவர் ,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடல் பகுதியில்,வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள,முதலை போன்ற உருவமுள்ள மெசோ சாரஸ் என்ற ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா,மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
அதன் அடிப்டையில்,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்க முடியாது.
எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் புவியியல் வலுனர்கள் கண்டங்கள் நகர்வது சாத்தியம் இல்லை என்று நம்பினார்கள்.எனவே காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,விலங்கினங்கள் தற்செயலாக ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில்,வெக்னர்,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற பனித் தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய பெரணி மற்றும் கள்ளி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
அதன் அடிப்படையில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் எப்படி கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசத்தில் வளர்ந்து இருக்க முடியும்/ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அந்தத் தீவானது, ஒரு காலத்தில், அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்று விளக்கம் கூறினார்.
அவரின் விளக்கத்தை யாராலும் மறுக்க இயல வில்லை.
உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாக வெக்னர் கூறினார்.அந்தப் பெருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்று பெயர் சூட்டினார்.அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி இருந்த கடல் பகுதிக்கு பாந்தலாசா என்று பெயர் சூட்டினார்.
அதன் பிறகு,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததாகவும்,அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகித் தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில்,டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாக வெக்னர் கூறினார்.
அதன் பிறகு, எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததாகவும் அதனால் வட அமெரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் பெருங்கடல் உருவானதாக வெக்னர் கூறினார்.
அதே போன்று,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால் தென் அமெரிக்கா ,ஆப்பிரிக்கா,இந்தியா ,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் வெக்னர் கூறினார்.
குறிப்பாக கோண்டுவானா கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று ,கோண்டு வாணா கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து ,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இவ்வாறு தென் அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் பிரிந்ததால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தென் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதகுவ்ம் வெக்னர் கூறினார்.
இதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்த பிறகு வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதில் குறிப்பாக இந்திய நிலப் பகுதியானது.ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இவ்வாறு கண்டங்களானது நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படும் பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் வெக்னர் கூறினார்.
ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது?எனப் புவியியல் வல்லுனர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெக்னரால் உறுதியாக எந்த ஒரு விளக்கத்தையும் கூற இயல வில்லை.மாறாக பூமியின் சுழற்சி காரணமாக இருக்கலாம் என்றும் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்றும் யூகம் தெரிவித்தார்.
இந்த நிலையில் ,ஆர்தர் ஹோம்ஸ் என்ற புவியியல் வல்லுநர்,ஒரு கருத்தை முன் மொழிந்தார்.அதாவது ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீர் கொதிக்கும் பொழுது,அடிப்பகுதியில் இருக்கும் வெப்பமான நீரானது, மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ச்சி அடைந்து மறுபடியும் பாத்திரத்தின் அடிப்பகுதிக்கு செல்வதைப் போல,பூமிக்கு அடியில் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து கணம் அதிகரித்து,ஒரு சக்கரம் போன்று சுழன்று, மறுபடியும் பூமிக்கு அடியிலேயே செல்லலாம் என்றும்,அவ்வாறு பூமிக்கு அடியில், பாறைக் குழம்பானது, சுழலும் பொழுது,மேற்பகுதியில் இருக்கும் கண்டங்களை நகர்ந்தலாம் என்றும் ஆர்தர் ஹோம்ஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
அப்பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் பணியாற்றிய,எட்மண்ட் ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர்.அந்தக் கப்பலில் பொருத்தப் பட்டு இருந்த சோனார் கருவியைப் பயன் படுத்தினார்.
குறிப்பாக அவர்,அந்தக் கருவி மூலம் ஒலி அலைகளை கடலுக்குள் செலுத்தி,அந்த ஒலி அலைகளானது கடல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் பட்டு திரும்ப வரும் நேர வித்தியாசத்தை கணக்கிட்டு ,கடல் தரையில் இருந்த மேடுபள்ளங்களை அறிந்தார்.
அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் இருப்பதை அறிந்தார்.
அத்துடன் அந்த எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை வெடிப்புகளும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவதையும் அறிந்தார்.
மேலும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,பல கிளைகளாகப் பிரிந்து கண்டங்களைச் சுற்றி நீண்டு இருப்பதையும் அறிந்தார்.
அதன் அடிப்படையில்,ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தை தெரிவித்தார்.
அதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும்,அதனால் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹாரி ஹெஸ் கூறினார்.

இந்த விளக்கம் உண்மையென்றால் ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, குறைவான தாகவும்,அதே நேரத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து,தொலைவில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, அதிகமானதாகவும் இருக்க வேண்டும்.


ஆனால் தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் பாறைத் தீவுகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் என்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

பொதுவாக எரிமலைத் தீவுகளானது கூம்பு வடிவில் இருக்கும்.ஆனால் புனித பீட்டர் மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் எரிமலைப் பாறைகளுக்குப் பதில் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன தீவாக இருப்பதுடன் சமதளத் தீவாகவும் இருக்கிறது.

இதே போன்று ஆர்க்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும்,இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் நானூற்றி ஐம்பது மற்றும் இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் மற்றும் தீவுகள் இருப்பதன் மூலம் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பதுடன்,கடல் தளமானது நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

இந்த நிலையில்,தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாகப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதே போன்று கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு அடியில் கடல் தளமானது திடீரென்று நகர்ந்து செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதகவும் ,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்தானது அடிப்படை ஆதாரமற்ற கற்பனை என்பது உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட ,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல் ஒரே தொடர்ச்சியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது அதன் அடிப்டையில்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல்,1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,ஒரு உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தைத் தயாரித்தனர்.
அந்த உலக அளவிலான வரை படத்தில்,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் ,வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் ,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து,தென் துருவப் பகுதியில்,அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதன் பிறகு,இந்த அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளமானது  உருவாகி,தெற்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன்,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
எனவே,ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும் தற்பொழுது இருப்பதைப் போன்று ,ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு விலகி நகர்ந்து இருக்க வேண்டும் என்றால்,இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
இந்த நிலையில், புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று,இந்த இரண்டு கண்டங்களும், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குத் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில்,கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக் கூறி நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தையும் வெளியிட்டார்கள்.
அந்த வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில்,கடந்த ,26.12.2004  அன்று, சுமத்ரா தீவுக்கு அருகில்,கடலுக்கு அடியில்,தெற்காசியாவையே உலுக்கிய,சுனாமியை உருவாக்கிய,நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்று நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, 10.01.2005 அன்று ,நாசா வெளியிட்ட,அறிக்கையில்,இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானதாக,டாக்டர் பெஞ்சமின் பாங் மற்றும் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு,குறிப்பாக 27.04.2005 ,அன்று அதே நாசா வெளியிட்ட,இரண்டாவது அறிக்கையில்,ஆஸ்திரேலியக் கண்டத்தின் கடல் தளமானது,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானதாக,விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம்,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாக எதுவும் தெரியாத நிலையிலேயே,அடிப்படை ஆதாரமின்றி, வெறும் யூகத்தின் அடிப்படையில்,தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் ,கரீபியன் தீவுக் கூட்டத்தில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில்,கடந்த,12.01.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட,USGS  என்று அழைக்கப் படும் அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரம் இல்லாமல்,வெறும் யூகத்தின் அடிப்படையில்,தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
ஏனென்றால் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள் நம்பும்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி, வட அமெரிக்கக் கண்டமானது,வட அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி,வடக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
அதே போன்று,தென் அமெரிக்கக் கண்டமானது,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுகள் எப்படி உருவாகியது? என்ற கேள்வி எழுந்தது.
சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பசிபிக் கடல் பகுதியில்,எரிமலைச் செயல் பாட்டின் காரணமாக உருவானது என்று நம்புகின்றனர்.
குறிப்பாகத் தற்பொழுது,பசிபிக் கடல் பகுதியில்,காலபாகாஸ் எரிமலை இருக்கும் இடத்தில் கரீபியன் தீவுக் கூட்டம் உருவானதாக நம்புகின்றனர்.அதன் பிறகு அந்தத் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் நம்புகின்றனர்.
இந்த நிலையில்,எதிர் புறம்,அமெரிக்கக் கண்டங்களானது தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,தற்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உருவாகி இருக்க வில்லை என்றும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகவும்,அந்த இடை வெளிக்குள்,கரீபியன் தீவுக் கூட்டாமானது நுழைந்து விட்டதாகவும்,தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில் ,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கிறது.லெஸ்ஸர் ஆன்டிலிஸ் என்று அழைக்கப் படும்,அந்த எரிமலைத் தொடரானது எப்படி உருவானது என்பதற்கும் புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
அதாவது, கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தளமானது ,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகி மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு,உயர்ந்ததால் லெஸ்ஸர் ஆன்டிலிஸ் எரிமலைத் தொடர், உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தாக்கமானது பசிபிக் கடல் மாதிரி என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் ,அமைந்து இருக்கும் ஹோண்டுராஸ் நாட்டின் மத்தியப் பகுதியில்,டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷ்யாம் ஸ்ரீ வத்ஸ்சவா ஆகியோர், பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான தாவரங்களின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று 1985  ஆம் ஆண்டு ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்கள், ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும், அமோனிட்டிஸ் வகைக் கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

அதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் ,அமைந்து இருக்கும், நிகரகுவா நாட்டில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற டைனோசரின் எலும்புகளை,கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர்.
தற்பொழுது வாசிங்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த டைனோசரின் எலும்பை, ஆய்வு செய்த.யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான, ஜோன் ஆஸ்ட்ரம். அந்த எலும்பானது, ஆர்னிதோபோட்,என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்பு என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.

இதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் அமைந்து இருக்கும் கியூபா தீவிலமேற்குப் பகுதியில் இருக்கும்,, சியரா டி ஆர்காநோஸ் மலைப் பகுதியில் ,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி இடுப்பு வகை  டைனோசரின் முதுகெலும்பின் புதை படிவங்களை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம், அமெரிக்கக் கண்டங்களும்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும், மத்திய அமெரிக்க நிலப் பகுதியும், நிலையாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக , அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், டைனோசர்கள் இடம் பெயர்ந்து இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது.
அதே போன்று டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,கரீபியன் தீவுக் கூட்டமானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருப்பதும் அதன் காரணமாக்  கரீபியன் நிலத் தொடர்பானது, தீவுகளாக உருவாகி இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது அட்லாண்டிக் கடல் மாதிரி என்று அழைக்கப் படுகிறது.இந்தக் கருத்தின் படி கரீபியன் பாறைத் தட்டானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் எரிமலைப் பகுதியைப் போன்று ,அட்லாண்டிக் கடல் பகுதியில் குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைக் கூட்டம் எதுவும் இல்லை.எனவே அட்லாண்டிக் கடல் பகுதியில், குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது, எங்கே உருவானது? என்று, இந்தக் கருத்தை நம்பும் புவியியல் வல்லுனர்களால், சுட்டிக் காட்ட இயலவில்லை.
ஆனாலும், அட்லாண்டிக் கடல் பகுதியில், முன் ஒரு காலத்தில் இருந்த ஒரு எரிமலைப் பகுதியில்,கரீபியன் தீவுக் கூட்டம், உருவான பிறகு,அந்த எரிமலைப் பிளம்புகளானது, மறைந்து விட்டிருக்கலாம், என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனாலும், இந்தக் கருத்தின் படி,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி தொடர்ச்சியாக உருவாகி இருக்கும், லெஸ்ஸர் ஆன்டிலிஸ் எரிமலைகள் எப்படி உருவாகின? என்பதற்கு, இந்தக் கருத்தாக்கத்தின் படி, விளக்கம் கூறப்பட வில்லை.
இந்த நிலையில் இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது ‘இருப்பிட தோற்ற மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.
ஆக மொத்தம் ,கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில்,கடந்த 12.01.2010 அன்று ,கரீபியன் தீவுக் கூட்டத்தில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில்,கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டது.அந்த நில அதிர்ச்சியால் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது? என்பதற்கு விளக்கம் கூற வேண்டிய  சிக்கலான நிலைமை புவியியல் வல்லுனர்களுக்கு ஏற்பட்டது.
அதாவது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாகப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவாகுவதகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக,நம்பும் புவியியல் வல்லுனர்களுக்கு ,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாது.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் கூறினால், பின்னர் அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கும் விளக்கம் கூற வேண்டும்.
அதே போன்று,கரீபியன் தீவுக் கூடமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததால், பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு, நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று விளக்கம் கூறினாலும், பின்னர் அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கும் விளக்கம் கூற வேண்டும்.
எனவவே, u s g s என்று அழைக்கப் படும்,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், வெளியிட்ட அறிக்கையில்,ஒரு தந்திரமான விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அதாவது, கரீபியன் தீவுக் கூட்டமானது உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் ,கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், நில அதிர்ச்சியும், சுனாமியும், ஏற்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
இந்த இடத்தில ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
உண்மையில், கரீபியன் பாறைத் தட்டானது, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று, ஏன் அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள், நேரிடையாகத் தெரிவிக்க வில்லை?
ஏனென்றால் உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமெரிக்கப் புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை என்பதே உண்மை.அதனால்தான் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகாக் கூறினால் பின்னர் அது தொடர்பாக எழும் விடை தெரியாத கேள்விகளுக்கு விளக்கம் கூற வேண்டிய சிக்கலான நிலைமை ஏற்பட்டு விடும்.
அதனைத் தவிர்ப்பதற்காகவே ,தெரியாத ஒன்றைத் தெரிந்ததைப் போன்று தெரிவித்து இருக்கிறார்கள்.
உண்மையில் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்தியாயம் இரண்டு

நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் சுனாமிகள் உருவாகுவதற்கும் காரணம் என்ன?

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் சுனாமிகள் உருவாகின .

புவித் தரைக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

அதே போன்று ,நில அதிர்ச்சியும் சுனாமிகளும் ஏற்பட்ட இடங்களில், எரிமலைகளில் இருந்து வெளி வரும் ரேடான் வாயுக்கள் கசிந்து இருப்பதன் மூலமாகவும், புவித் தரைக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

வட அமெரிக்கக் கண்டத்தில், ஆரிகன் மாகாணத்தில் மூண்று சகோதரிகள் என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள் அமைந்து இருக்கும் பகுதியில், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்களை ஆய்வு செய்த பொழுது, ஒரு இடத்தில் அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவுக்குத் தரைப் பகுதியானது சில அங்குலம் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.

ஆரிகன் புடைப்பு என்று அழைக்கப் படும் அந்த வட்ட வடிவ மேட்டுப் பகுதியின் மத்தியப் பகுதியில், நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

அந்த இடத்தை ஆய்வு செய்த புவியியல் வல்லுனர்கள், அந்த புடைப்புக்குக் கீழே, ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவுக்கு பாறைக் குழம்பு திரண்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

அத்துடன் அந்தப் புடைப்புப் பகுதிக்கு அடியில், புதிதாக ஒரு எரிமலை உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் எவ்வாறு எடுக்கப் பட்டது.

மூன்று சகோதரிகள் என்று அழைக்க படும்  அந்த எரிமலையின் மேல் செயற்கைக் கோள் பறந்து செல்லும் பொழுது, செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டன.
அந்த ரேடியோக் கதிர்கள், தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டுத் , திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான கருவிகள் மூலம், தரையின் ஏற்றத் தாழ்வுகள் நீலம்,சிவப்பு,மஞ்சள் போன்ற வண்ணங்களில் பதிவு செய்யப் பட்டது.
இதே போன்று மறுபடியும், அதே எரிமலைப் பகுதியின் மேல் செயற்கைக் கோள் பறந்து சென்ற பொழுதும், ரேடியோ கதிர்கள் மூலம் தரையின் மேடுபள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.
இவ்வாறு ஒரு எரிமலைப் பகுதியின் மேல், வெவ்வேறு காலத்தில் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம், பதிவு செய்யப் பட்ட தரை மட்ட மேடு பள்ளப் பதிவுகளக் கணினி உதவியுடன், ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில், அந்த எரிமலைப் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான மாற்றம் கூட பதிவாகிறது.
உதாரணமாக இந்த முறையில் ஒரு வயல் வெளியை உழுதிருந்தால் கூட, கண்டு பிடித்து விட முடியும்.
இதே முறையில் ஆரிகன் மாகாணத்தில் உள்ள எரிமலைப் பகுதியின் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்து பார்த்த பொழுது, அந்தப் பகுதியில் அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையானது பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த 2004  ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்தவட்ட வடிவ மேட்டுப் பகுதியின் மத்தியில் இருந்த புடைப்பு போன்ற பகுதியில்   முன்னூற்றி ஐம்பதுக்கும் அதிகமான முறை சிறிய அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
எரிமலைகளைச் சுற்றி உருவாகும் வளைய வடிவிலான வரப்புகள்  போன்ற மேடு பள்ள வளையங்கள்.
மியாமி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், தரை மட்ட மாறுபாடுகளை, ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
இவ்வாறு எரிமலையைச் சுற்றியுள்ள தரையில் வளைய வடிவில் மேடு பள்ளங்கள் உருவாகுவதற்கு, அந்த எரிமலையானது உயர்ந்து இறங்குவதே காரணம், என்று டாக்டர் ஜூலியட் பிக் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு திரண்டு, அந்த எரிமலை உயரும் பொழுது, எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் எரிமலையுடன் சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இந்த நிலையில், அந்த எரிமலையில் இருந்து வாயுக்களும் நீராவியும் வெளியேறுவதால் எரிமலையின் உயரம் மறுபடியும் இறங்குகிறது.
அதனால் எரிமலையுடன் வட்ட வடிவில் உயர்ந்த தரைப் பகுதியானது, மறுபடியும் தாழ்வடைகிறது.
இவ்வாறு எரிமலையுடன், எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்  சில செண்ட்டி மீட்டர் ,உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக வடுக்கள் போன்ற மேடு பள்ள வளையங்கள் பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகின்றன.
இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றியும், வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பசிபிக் பெருங் கடலின் வட பகுதியில் சங்கிலி போன்று வளைவான பாதையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகள் அலூசியன் தீவுகள் என்று அழைக்கப் படுகின்றன.
அந்த எரிமலைத் தீவு வரிசையில் உள்ள பெலிக் என்ற எரிமலையானது, 1814 மற்றும் 1852 ஆம் ஆண்டுகளில் சீறிய பிறகு அமைதியாகி விட்டது.
அந்த எரிமலையின் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோளில் இருந்து ரேடியோக் கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டது.அவ்வாறு தரையை நோக்கி அனுப்பப் பட்ட ரேடியோ கதிர்கள் பெலிக் எரிமலையின் மீதும் சுற்று வட்ட தரைப் பகுதியில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டுத் திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான கருவிகள் மூலம், பெலிக் எரிமலையைச் சுற்றியிருந்த தரைப் பகுதியின் மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.
இதே போன்று பல முறை பெலிக் எரிமலையின் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம், ரேடியோக் கதிர் வீச்சு முறையில் பெலிக் எரிமலையின் தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.
பின்னர் அந்தப் படங்கள், கணிப் பொறி மூலம் ஒரே படமாக மாற்றப் பட்டது.
அந்தப் படத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1997  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில், பெலிக் எரிமலையைச் சுற்றி முப்பது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, ஆறு அங்குல உயரத்துடன், ஆறு வளையங்கள் உருவாகி இருப்பது பதிவாகி இருந்தது.
இவ்வாறு பெலிக் எரிமலையை சுற்றி வரப்பு போன்று ஆறு வளையங்கள் உருவாகி இருந்ததற்கு ,பெலிக் எரிமலைக்கு அடியில் ஆறு கிலோ மீட்டர் ஆழத்தில், புதிதாக ஐந்து கோடி கன சதுர மீட்டர் அளவிற்கு பாறைக் குழம்பு சேர்ந்ததே காரணம், என்று எரிமலை இயல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இத்தாலி நில அதிர்ச்சியும் ரேடான் வாயுக் கசிவும்.
இதே போன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களிலும்,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றியும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, எரிமலையைச் சுற்றி உருவாகுவதைப் போன்றே ,வரப்புகள் வெட்டியதைப் போன்ற  மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
உதாரணமாகக் கடந்த 2009  ஆண்டு இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பொழுது  நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போலவே, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும், கதிர் வீச்சுத் தன்மை உடைய வாயு வெளிப் பட்டு இருந்ததை, நில அதிர்ச்சி ஏற்படுவதை முன் கூட்டியே கணிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட, ஜியுலியாணி ஜியாம்ப்பாவ்லோ என்ற தொழில் நுட்ப வல்லுநர், கண்டு பிடித்தார்.
முக்கியமாக ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப்படும், நிறமற்ற மணமற்ற கதிரியக்கத் தன்மை உடைய வாயுவாகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே, இத்தாலி நாட்டில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 11.03.2011  அன்று ஜப்பானின் ஹோண்சு தீவுக்கு அருகில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி ஏற்பட்டது.
அப்பொழுது ஹோண்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நில அதிர்ச்சி மையப் பகுதிக்கு மேலே, வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது, அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இவ்வாறு வளி மண்டலத்தில் அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்ததற்கு, அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம் என்று நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த டிமிட்டார் ஒவ்சொனவ் என்ற புவியியல் வல்லுநர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக ரேடான் வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால், அந்த எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான் மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இதனால் உருவான அயனிகள் நீரை ஈர்க்கும் தன்மை உடையது என்றும், இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால், வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்றும், டாக்டர் டிமிட்டார் ஒவ்சொனவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது, மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதும், செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று, கடந்த 12.01.2010  அன்று, ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாது அந்த நில அதிர்சிக்குப் பிறகு ஹைத்தி தீவின் கடற் கரையானது, கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது.அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்து உயர்ந்ததாலேயே ஹைத்தி தீவில், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 26.12.2004 அன்று,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி உருவானது.
அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு, சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது, கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன.
இந்த நிலையில், அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் 20.02.2008 அன்று கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவின் மத்தியப் பகுதியில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, ஐம்பத்தி ஒன்பது சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே தெற்காசிய சுனாமி உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

ஒரு நல்ல செய்தி.

இனிமேல் நில அதிர்ச்சி வருமா? வராதா ?என்று வானிலை ஆய்வு மையத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வானத்தைப் பார்த்து மழை வருமா! வராதா?  என்றுதான் அறிவிப்பார்கள்.

ஆனால் முதன் முதலாக வானத்தைப் பார்த்து நில அதிர்ச்சி ஏற்படப் போவதை, ஒரு வாரத்திற்கு முன்பே சரியாகக் கணித்துக் கூறி,  ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள்.

பன்நெடுங்  காலமாகவே பெரிய நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்பு அசாதாரண வானிலை நிலவி இருப்பது அறியப் பட்டுள்ளது.

 குறிப்பாகக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பொழுது கூட, ஹோண்சு தீவில் நில அதிர்ச்சி மையத்திற்கு மேலே வளி மண்டல மேலடுக்கில் அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்து இருந்தது.ஆனால் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.

ஆனால் வளி மண்டலத்தில் ஏற்பட்ட இந்த அசாதாரண வெப்ப நிலை உயர்வானது , நில அதிர்ச்சிக்குப் பிறகு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்தான்  தெரிய வந்தது.


இவ்வாறு நில அதிர்ச்சிக்கு முன்பு வளி மண்டல மேலடுக்கில் வெப்ப நிலை உயர்ந்ததற்கு, நாசாவைச் சேர்ந்த டிமிட்டார் ஒவ்சொனவ் ''அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வெளிப் பட்ட கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம், என்று தெரிவித்து இருந்தார்.

ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப் படும் மணமற்ற, நிறமற்ற, கதிரியக்கத் தன்மையுடைய வாயு ஆகும்.

இந்த வாயுவின் கதிரியக்கத்தால் காற்றில் உள்ள மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்கள் தனியாகப் பிரிக்கப் படுகின்றன.இதனால் காற்றில் மின் சுமை உடைய அயனிகள் உருவாகின்றன.

இந்த அயனிகளானது நீரை ஈர்க்கும் தன்மை உடையது.அவ்வாறு நீரை ஈர்க்கும் வினை நடைபெறும் பொழுது வெப்பம் உமிழப் படுகிறது.இதனால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்று டிமிட்டார் ஒவ்சொனவ் விளக்கி  இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் ஜப்பானின் அவாஜி தீவில் ,17 இடங்களில் வளி மண்டலத்தில், சாதாரணமாக ஒரு கண சதுர சென்டி மீட்டர் பகுதியில் ஆயிரம் அயனிகள் இருப்பதற்கு பதிலாக பனிரெண்டாயிரம் எண்ணிக்கை என்ற அளவில், உயர்ந்து இருப்பது வானிலை ஆய்வு செயற்கைக் கோள் மூலம் தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் ஒரு தனியார் தொண்டு நிறுவன ஆராய்ச்சியாளர்கள், அவாஜி தீவில் ரிக்டர் அலகில் 5 அளவிலான நில அதிர்ச்சி ஏற்படும் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 

அந்த அறிவிப்பு வெளியிட்ட பிறகு ஏப்ரல் பதின்மூன்றாம் நாள், ரிக்டர் அலகில் 6.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்பொழுது இருபத்தி நான்கு பேர் காயம் அடைந்ததைத் தவிர உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயுக் கசிவு ஏற்படுவதற்கு இது வரை யாரும் சரியான விளக்கத்தைக் கூற வில்லை,எரிமலைகளில் இருந்து வெளிவரும் ரேடான் வாயு,நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் இருந்து வெளிப் பட்டு இருப்பதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதை உறுதிப் படுத்துகிறது.


பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன?

கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைபடிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவது,பன்னெடுங்காலமாகவே புரியாத புதிராக இருந்தது.

இந்தப் புதிரை விடுவிப்பதற்காக ஒரு விளக்கம் கூறப் பட்டது.

அதாவது முன் ஒரு காலத்தில் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் பட்டது.

இந்தக் கருத்தின் அடிப்படையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் ஆசியக் கண்டத்தின் வடபகுதியான சைபீரியா ஆகிய நிலப் பகுதிகளானது ,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங்குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து விட்டதாக நிபுணர்கள் கணித்து இருந்தனர்.

இந்த நிலையில்,எழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்களானது, ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் கண்டு பிடிக்கப் பட்டது.


அதே போன்று, ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கும்,ஆக்சல் ஹைபெர்க் தீவுக்கு அருகில் உள்ள பைலட் தீவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ஹேட்ரோ சாராஸ் என்று அழைக்கப் படும், வாத்தின் அலகைப் போன்ற வாயை உடைய தாவர உண்ணி வகை டைனோசர் மற்றும், கொன்று திண்ணி வகையைச் சேர்ந்த டைரானோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதையும் மெக்கில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர், ஹான்ஸ் லார்சன் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.


இது போன்ற பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் பொரியாது
இந்தப் புதிருக்குப் புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்களால் இன்று வரை சரியான விளக்கத்தைக் கூற முடிய வில்லை.

இந்தப் புதிருக்கு விடைதான் என்ன?

கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான, ஆர்க்டிக் வளையப் பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பனிரெண்டு வகையான டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான, அலாஸ்காவின் வட பகுதியில் இருக்கும் கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியில் இருக்கும், சைபீரியாவின் வட பகுதியில் இருக்கும், காக்க நாட்டு ஆற்றுப் பகுதியிலும்,தவர உண்ணி மற்றும் கொன்றுண்ணி வகை டைனோசர்களின் புதை படிவங்கள்,அத்துடன் இளவயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களைத் தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
ஆனால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போல், ஊர்வன வகை விலங்கினங்களால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.
எனவே ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்கள், எப்படி ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வாழ்ந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
ஒரு வேளை டைனோசர்கள் மட்டும் பிரத்யேகமாக ஏதாவது சிறப்புத் தகவமைப்புககளைக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் கூட ,ஊர்வன வகை விலங்கினமான டைனோசர்கள், முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.
ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால், அதற்கு முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
நிச்சயம் பனிப் பிரதேசத்தில் டைனோசர்கள் முட்டையிட்டு,இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்க முடியாது.
எனவே தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, விளக்கம் கூற முடியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி தற்பொழுது பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ச்சியாக பகலும்,அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிருடன் வாழ்ந்து இருக்க இயலாது.
எனவே துருவப் பகுதிகளில்,டைனோசர்கள் வாழக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.
எனவே டைனோசர்கள், பனிக் கரடிகளைப் போல அறிதுயில் மேற்கொண்டு இருக்குமா? அல்லது பனி மான்களைப் போல குளிர் கால இடப் பெயர்ச்சி செய்து இருக்குமா? என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் ஆர்க்டிக் பகுதியில் இருந்து, மித வெப்பக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளுக்கு வர வேண்டும் என்றால்,அதற்கு ஆறாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.ஆனால் மிகவும் இளவயது டைனோசர்களால் அவ்வளவு தூரம் பயணம் செய்து இருக்க இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அதே போன்று பெரிய அளவிலான டைனோசர்களானது,குகைகளில் பனிக் கரடிகளைப் போன்று அரிதுயிலை மேற்கொண்டு இருக்கவும் இயலாது, என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
முக்கியமாக ஆர்க்டிக் பகுதியில் மிகவும் இளவயது டைனோசர்களின் பற்களும்,டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், டைனோசர்களானது ஆர்க்டிக் பகுதியிலேயே இனப் பெருக்கம் செய்து, ஆண்டு முழுவதும் வாழ்ந்து இருப்பதை, எடுத்துக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
எனவே ஆர்க்டிக் பகுதியில், ஆறுமாத காலம் நீடிக்கும் இரவுக் காலத்தில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன?என்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு இருக்கிறது.
குறிப்பாக துருவப் பகுதிகளில் ,ஆறு மாத காலம் ,தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது,வெப்ப நிலையானது மைனஸ் ஐம்பது டிகிரிக்கும் கீழே செல்கிறது.இது போன்ற சூழலில் டைனோசர்கள் குடிப்பதற்குக் கூட நீர் இருந்திருக்காது.
இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,ஆறு மாத கால இரவுக் காலத்தில், டைனோசர்களானது,இறந்த தாவரங்களை உண்டு வாழ்ந்து இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
ஆனால் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர் இனம் அழிந்ததற்கு ஒரு விளக்கம் கூறப் பட்டது.
அதாவது பூமியில் ஒரு விண் கல் விழுந்ததால், பூமியெங்கும் தூசி கிளம்பியதாகவும் ,அதனால் பல மாதங்கள் சூரிய ஒளி மறைக்கப் பட்டதாகவும்,அதனால் தாவரங்கள் அழிந்ததாகவும், அதனால் டைனோசர் இனமே அழிந்ததாகவும் நம்பப் பட்டது.
இந்த நிலையில்,ஆர்க்டிக் பகுதியில், ஆறு மாத காலம் தொடர்ந்து நீடிக்கும் இரவுக் காலத்தை டைனோசர்கள் சமாளித்து வாழ்ந்து இருந்தால், பின்னர் ஏன் விண் கல் விழுந்த பொழுது உருவான ஆறு மாத கால இரவுக் காலத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்தன? என்ற கேள்வி எழுந்தது.
ஆக மொத்தம் தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள், விளக்கம் கூற இயலாத நிலையில் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
இதே போன்று ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹை பெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, நன்னீர் ஆமையின் புதை படிவங்களை,ரோஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ,டாக்டர் ஜான் டார்டுனோ குழுவினர் கண்டு பிடித்தனர்.
சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத, ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த ஆமையானது,பனிப் பிரதேசத்தில் அமைந்து இருக்கும்,ஆக்சல் ஹாய் பெர்க் தீவில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாழ்ந்தன? என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு விடை கூறும் வண்ணம்,பேராசிரியர் டாகடர் ஜான் டார்டுனோ ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஆறு இடங்களில், எரிமலைகள், பெரும் அளவில் வாயுக்களை வெளியிட்டதாகவும்,அதனால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது உயர்ந்ததாகவும்,அதனால் துருவப் பகுதிகளில்,வெப்ப நிலை அதிகமாக இருந்ததாகவும், அதனால் பனிப் படலங்கள் உருவாக முடியவில்லை என்றும்,அதனால் ஆமைகளால் துருவப் பகுதிகளில் வாழ முடிந்திருக்கிறது, என்று டாக்டர் ஜான் டார்டுனோ விளக்கம் கூறினார்.
ஆனால் இந்த விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியை ஒரு விண் கல் தாக்கியதால்,எழும்பிய புகை மற்றும் தூசி மண்டலமானது, பூமியெங்கும் பரவியதால், சூரிய ஒளியானது ,பல மாதங்கள் மறைக்கப் பட்டதாகவும்,அதனால் தாவர வகைகள் அழிந்ததாகவும்,அதனால் டைனோசர்களும் அழிந்ததாகவும் ,புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரின்சிடன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெர்டா கெல்லர் என்ற புவியியல் வல்லுநர்,விண் கல்லுக்குப் பதில் இந்தியாவின் மத்தியப் பகுதியான தக்காணப் பீட பூமிப் பகுதியில்,ஏற்பட்ட எரிமலைச் செயல்பாட்டால் ,புகை மண்டலம் எழும்பி, சூரியனை மறைத்ததால்,பல மாதங்கள் இரவும் குளிரும் நீடித்தால், தாவரங்கள் அழிந்ததாகவும் அதனால் டைனோசர்கள் அழிந்ததாகவும், விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு...
எரிமலைகளின் சீற்றத்தால் பூமியின் வெப்ப நிலையானது உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாக வில்லை.
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு...
எரிமலைகளின் சீற்றத்தால் தூசி மண்டலம் உருவாகி சூரியனை மறைத்ததால் குளிர்ச்சி ஏற்பட்டு,தாவரங்களும் டைனோசர்களும் அழிந்தன.
ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு...
துருவப் பகுதியில் டைனோசர்கள் ஆறு மாத காலம் நீடித்த இரவுக் காலத்தில் இறந்த தாவரங்களை உண்டு வாழ்ந்தன.
இவ்வாறு புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும், முன்னுக்குப் பின் முரணாக இருப்பதுடன் ,நம்பத்தகாத விளக்கங்களாகவும் இருக்கிறது.
இந்தப் புதிருக்கு விடை என்ன?
நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ,பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதைப் புவியியல் வல்லுனர்கள் தற்செயலாகக் கண்டு பிடித்தனர்.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கூட,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் தொன்மையை அறிவதற்காகப் பிரிட்டிஷ் நாட்டுப் புவியியல் வல்லுனர்கள்,கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அந்தப் பாறைகளின் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்தப் பாறைப் படிவுகளில்,மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும்,பிரிட்டிஷ் நாட்டுப் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறாது.
எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கம் தவறான விளக்கம் என்பதுடன்,டைனோசர்களின் புதை படிவங்களானது தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்கு,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருபதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம் என்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.
இவ்வாறு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்திருக்கிறது.
அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததாலும்,கடலின் பரப்பளவு அதிகரித்தாலும்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது படிப்படியாகக் குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத டைனோசர்கள் அழிந்து இருக்கின்றன.
முக்கியமாகத் தற்பொழுது பூமியானது, தன் அச்சில் இருபத்தி மூன்றரைப் பாகை, சாய்ந்து இருப்பதால் ,துருவப் பகுதிகளில்,ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும், அதே போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. 
இது போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது துருவப் பகுதிகளில் வெப்ப நிலையானது மைனஸ் ஐம்பது டிகிரி வரை கீழே செல்கிறது.இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் டைனோசர்கள் உண்பதற்கான பசுந்தாவரங்கள் வளர்ந்து இருக்க இயலாது.
அத்துடன் ஆறு மாத காலம் சூரிய ஒளியின்றி இரவு நீடித்தால்,சூரிய ஒளியின் உதவியின்றி தாவரங்கலால் ஒளிச் சேர்க்கை செய்து உயிருடன் வாழ்ந்து இருக்கவும் இயலாது.எனவே துருவப் பகுதிகளில், டைனோசர்கள் வாழக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் உருவாகி இருக்க இயலாது.
எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருப்பதும்,துருவப் பகுதிகளில் காணப் படும் டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் உறுதியாகிறது.
குறிப்பாகத் தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.ஆனால் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும், அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பதும்,கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
அத்தியாயம் மூன்று

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?

சுடு நீர் ஊற்று நீரால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தற்பொழுது தவறான விளக்கம் கூறப் படுகிறது.
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாகத் தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குத் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயுக்களானது வளி மண்டலத்தில் கலப்பதால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல என்று நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்து இருக்கிறார்.
நாசாவைச் சேர்ந்த,டாக்டர். ஜேய் ஜேவாளி அவர்கள்,வெளியிட்ட ஆய்வறிக்கை, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்பொழுது,தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருக்கும் கரிய மில வாயு,வளி மண்டலத்தில் கலப்பதால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்களானது, உருகி நீராகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,எனவே கரிய மில வாயு வெளியிடுவதைக் கட்டுப் படுத்துங்கள்! என்று கடந்த பத்து ஆண்டுகாலமாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த, பனி இயல் வல்லுனரான,டாக்டர் ஜேய் ஜேவாளி தலைமையிலான ஆய்வுக் குழுவினர்,ஐரோப்பிய செயற்கைக் கோள்கள் மற்றும் நாசாவின் லேசர் செயற்கைக் கோள்கள் மூலமாக,சேகரிக்கப் பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர்.
குறிப்பாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,அண்டார்க்டிக்காக் கண்டத்தில் பெரிய பரப்பளவில்,குறைவாக உயர்ந்த பனியின் அளவு பற்றிய, செயற்கைக் கோள் பதிவுகளையும், அதே போன்று குறைந்த பரப்பளவில், அதிகமாக உயர்ந்த, பனிப் படலங்கள் பற்றிய, செயற்கைக் கோள் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், உலகில் தொண்ணூறு சதவீதப் பனியைக் கொண்டு இருக்கும், அண்டார்க்டிக்காக் கண்டத்தில் ,10,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனியின் அளவு அதிகரிக்கத் தொடங்கியதாக, டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக டாக்டர். ஜேய் ஜேவாளி குழுவினர், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் மற்றும் மெக்சிகோவையும் உள்ளடக்கிய, அண்டார்க்டிக்காக் கண்டத்தின்,ஐம்பது லட்சத்தி நாற்பதாயிரம் சதுர மைல் பரப்பளவில் இருக்கும், பனி பற்றி, ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் ,அண்டார்க்டிக்காக் கண்டத்தில், பனிப் பொழிவின் காரணமாகப் பனிப் படலங்களின் தடிமனானது, ஆண்டுக்கு 0.7 இன்ச் ( 1.7 சென்டி மீட்டர் )அதிகரித்ததாகவும் ,டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு அண்டார்க்டிக்காக் கண்டத்தில் பனிப் படலத்தின் அதிகரிப்பானது, பல்லாயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்ததாகவும்,அதனால் அண்டார்க்டிக்காக் கண்டத்தில், பனி உருகிய அளவைக் காட்டிலும், உருவான பனியின் அளவு அதிகமாக இருந்ததாகவும், டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
எனவே கடல் மட்ட உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக்காக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல, என்றும் டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் கடல் மட்ட உயர்வுக்கு, வேறு எதோ காரணம் இருக்கலாம்! என்றும் டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
முக்கியமாக டாக்டர். ஜேய் ஜேவாளியின் ஆய்வு முடிவானது, கடந்த 2013 ஆம் ஆண்டு, ''சர்வதேச கால நிலை மாற்றதிற்கான அமைப்பைச் '' [ Intergovernmental Panel on Climate Change (IPCC)]சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கைக்குச் சவால் விடுவதாக இருக்கிறது.
குறிப்பாக ''சர்வதேச கால நிலை மாற்றதிற்கான அமைப்பைச் '' [ Intergovernmental Panel on Climate Change (IPCC)]சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட, ஆய்வறிக்கையில்,அண்டார்க்டிக்காக் கண்டத்தின் தீப கற்பம் மற்றும் கடலோரப் பகுதிகளில், ஆண்டுக்கு ‘ 65 டன் பனி வீதம் உருகிக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
தற்பொழுது மேற்கொண்ட ஆய்வு முடிவும், இதனுடன் ஒத்துப் போவதாகவும், ஆனால் அதே நேரத்தில், ''சர்வதேச கால நிலை மாற்றதிற்கான அமைப்பின் ஆய்வுக்கு, முற்றிலும் முரணாக, அண்டார்க்டிக்காவின் மேற்குப் பகுதியிலும், அதே போன்று, கிழக்கு அண்டார்க்டிக்காக் கண்டத்தின் மத்தியப் பகுதியிலும், பனிப் படலங்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதாகவும் ,டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாகக் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை,அண்டார்க்டிக்காக் கண்டத்தில்,200 பில்லியன் டன் பனி உருவாகி இருப்பதாகவும் , டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார். 
ஆனால் சர்வதேச கால நிலை மாற்றதிற்கான அமைப்பைச் சேர்ந்தவர்கள், அண்டார்க்டிக்காக் கண்டத்தில், ஆண்டுக்கு 65 பில்லியன் டன் பனி, உருகுவதாகத் தெரிவித்து இருந்தனர்.
எனவே அண்டார்க்டிக்காக் கண்டத்தில் ஆண்டுக்கு 135 பில்லியன் டன் பனி அதிகப்படியாக உருவாகுவதாக ,டாக்டர். ஜேய் ஜேவாளிி் , தெரிவித்து இருக்கிறார். 
இவ்வாறு அண்டார்க்டிக்காக் கண்டத்தில், பனிப் படலங்கள் உருகுவதைக் காட்டிலும், அதிக அளவில் பனிப் படலங்கள் உருவாகுவதால்,கடல் மட்ட உயர்வுக்கு, அண்டார்க்டிக்காக் கண்டம் காரணம் அல்ல, என்று டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையில்  காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது?


கடல் மட்டம் உயர்ந்த கால கட்டத்தில், பனிப் பொழிவு ஏற்பட்டது ஏன்?

ஆழமற்ற கடல் பகுதியில் வாழும் பவள உயிரிகள், கடல் மட்டம் உயர்ந்தால்,சூரிய ஒளியின்றி இறந்து விடும்.

இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப் படும் பவள உயிரினங்களின் புதை படிவங்களை, கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்வதன் மூலம், அந்தப் பவள உயிரிகள் எப்பொழுது இறந்தன? என்பதைக் அறிய இயலும்.

அதன் அடிப்படையில் ,அந்த இடத்தில் கடல் மட்டம் எப்பொழுது உயர்ந்தது? என்பதை அறிய இயலும்.

இந்த முறையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடாக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் சரிவாகச் செல்லும் பாறைத் தளத்தில்,நூறு முதல் ஐம்பது மீட்டர் ஆழத்தில்,ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்ட உயர்வால் இறந்த பவள உயிரிகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

அதன் அடிப்படையில்,புளோரிடா பகுதியில் கடந்த ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டு கால அளவில் கடல் மட்டம் நூற்றி இருபது  மீட்டர் வரை, தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதே கால கட்டத்தில், வட துருவப் பகுதியில், பனிப் பொழிவின் காரணமாகப் பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்கள் அழிந்து இருப்பதும் ,கோபன் ஹேகன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ்லெவ் தலைமயிலான குழுவினர் சேகரித்த, தாவர மற்றும் விலங்கினங்களின் புதைபடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக  50,000 ,ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும், அதன் பிறகு பனிப் பொழிவு அதிகரித்ததால், 25,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பதினைந்தாயிரம் ஆண்டு வரையிலான காலத்தில் , வட துருவப் பகுதியில், பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக ,கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ் தலைமயிலான ஆராய்ச்சிக் குழுவினர், மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவித்து உள்ளனர்.

அதன் பிறகும் பனிப் பொழிவு தொடர்ந்து அதிகரித்ததால், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வட துருவப் பகுதியில், பூக்கும் தாவரங்கள் அழிந்தால் ,வட துருவப் பகுதியில் வாழ்ந்த, பனி யானை மற்றும் பனி காண்டா மிருகங்கள் போன்ற விலங்கினங்கள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிந்ததாகவும், டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

எனவே பூமியில் ஒரே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது.

எனவே கடல் மட்ட உயர்வுக்குப் பனி உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு.


நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட பனிப் படலங்கள் எப்படி உருவாகின?

சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.
அந்த நீர் எப்படி உருவனதென்றால்...நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது,நிலவின் மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்ததால் பனியாக உருவாகி இருக்கிறது.
இது போன்று பாறைக் குழம்பில் இருந்து உருவாகும் நீரானது பாறைக் குழம்பு நீர் என்றும், மாக்மாட்டிக் வாட்டர் என்றும், அழைக்கப் படுகிறது.
நம் பூமியும், ஆரம்பத்தில் கொதிக்கும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு மெதுவாகக் குளிர்ந்ததால்,பூமியின் மேலோடு உருவானது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது  படிப் படியாகக் குளிர்ந்ததால்,பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில், பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது.
இந்த நிலையில்,பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக, பூமிக்கு மேலே திரண்டதால் கடல் உருவானது.
இன்றும் கூட, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து கொண்டு இருப்பதால், அதில் இருந்து உருவாகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்,கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது, அதன் கன அளவானது அதிகரிக்கிறது.அதனால் புவிப் பரப்பின் மேல், கண்டங்கள் புடைத்துக் கொண்டு உருவாகின.
இவ்வாறு கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்தபொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, தற்பொழுது கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் புதை படிவங்களாகக் காணப் படுகிறது.
இந்த நிலையில் ,எரிமலைகள் மூலம் வெளிப்படும் வாயுக்களால், பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது. 

எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் , நீர் உற்பத்தி ஆகுவதும் தொடரும்.எனவே பூமிக்கு அடியில் உற்பத்தி ஆகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப் பதும் தொடரும்.

எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இதனால் நிலப் பகுதிகள் யாவும், கடலில் மூழ்கும்,அத்துடன் தரையில் வாழும் தாவரங்கள்,மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது.

கடந்த 2014 ஆண்டு, கடலில் இருக்கும் நீரை விட ,மூன்று மடங்கு அதிகமான நீர், பூமிக்கு அடியில், குறிப்பாக அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில்,  ரிங்க்வூடைட் என்று அழைக்கப் படும் பாறையில் கலந்து இருப்பதாக,அமெரிக்காவின், நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, ஸ்டீவ் ஜாக்கப்சென் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார்.


மேலும் அவர், நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்யும் கருவிகள் மூலமாக, பூமிக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், பூமிக்கு அடியில், நீர் பெருமளவில் இருப்பது தெரிய வந்ததாகவும், தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் பூமிக்கு மேல் இருக்கும் கடலானது , பூமிக்கு அடியில் இருந்தே மேற்பகுதிக்கு வந்திருக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.


இதற்கு முன்பு கடலானது, விண்வெளியில் இருந்து, பூமியில் மேல் விழுந்த லட்சக் கணக்கான பனிப் பாறைகாளால் உருவானது என்று நம்பப் பட்டது.



00000000000000000000000000000000000000000000000000000000000000000000
                                                       00000000000000000000000000000000000000000000000000000000000000000000

தனிக் கட்டுரைகள் 


கடல் மட்டம் தாழ்வாக  இருந்ததை எடுத்துக் காட்டும்,  தீவு விலங்கினங்கள்.
கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.

மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் நரி முகக் குரங்குகள், டென் ரெக் என்று அழைக்கப் படும் பூச்சித் திண்ணி விலங்குகள்,போசா என்று அழைக்கப் படும் இரையுண்ணி விலங்குகள்,மற்றும் எலி போன்ற கொறித்துண்ணி விலங்குகளும் காணப் படுகின்றன.
இவ்வாறு மடகாஸ்கர் தீவில் ஒரு கண்டத்தில் காணப் படுவதைப் போன்றே பல வகையான விலங்கினங்களும் தாவரங்களும் காணப் படுவதால் அந்தத் தீவானது எட்டாவது கண்டம் என்றும் அழைக்கப் படுகிறது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவுக்கு விலங்கினங்கள் எப்படிச் சென்றன? என்பது குறித்து இன்று வரை விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
உதாரணமாக மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் நரி முகக் குரங்குகள் காணப் படுகின்றன.லெமூர் குரங்குகள் மற்றும் தேவாங்குகளின் கீழ் தாடையின் முன் பகுதியில் உள்ள பற்கள் நெருக்கமாக அமைந்து சீப்பு போன்ற அமைப்பில் இருக்கும்.
இந்த அமைப்புடைய குரங்கின் எலும்புப் புதை படிவங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில் லெமூர் குரங்கின் மூதாதைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து இருபது தெரிய வந்துள்ளது.
எனவே லெமூர் குரங்குகள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்தன? என்ற கேள்வி எழுந்தது.
ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கின்றன.
எனவே லெமூர்கள் நிச்சயம் கடல் வழியாகத்தான் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது.
குறிப்பாக காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த படி இரண்டு வார காலம் கடலில் தத்தளித்த படி லெமூர்கள் மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இந்த முறையில் பல குரங்குகள் வர இயலா விட்டாலும் குறைந்த பட்சம் ஒரே ஒரு கர்ப்பிணிக் குரங்காவது அரை மயக்க நிலையில் தீவில் கரை ஒதுக்கி இருக்கலாம் என்றும், அதன் பிறகு பல குட்டிகளை ஈன்ற பிறகு  மடகாஸ்கர் தீவில் லெமூர் இனங்கள் பெருகி இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
இதே போன்று மற்ற விலங்கினங்களும் வெவ்வேறு கால கட்டத்தில் மடகாஸ்கர் தீவில் தற்செயலாகக் கரை ஒதுங்கிய பிறகு பின்னர் அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்த சில விலங்கினங்களுக்கு இந்த விளக்கம் அவ்வளவாகப் பொருத்த வில்லை.

குள்ள வகை நீர் யானைகள்

உதாரணமாக மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது.
லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது.
அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன.
இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது.
எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது  யற்கைக்கு மாறான விளக்கம்.

எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில்  காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள்  மூலம்,  கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.

சைவ முதலை

 1998 ,  ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான முதலையின் புதை படிவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதி நீண்டு இருப்பதற்குப் பதிலாக மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாக கிராம்பு போன்ற வடிவில் தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது.
அதன் உடலின் மேற் பகுதியிலும் கால்களின் மேற் பகுதியும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன் வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.
எனவே அந்த வாலைக் கொண்டு அந்த முதலையால் நீந்த இயலாது.அதன் கால்களும் நடப்பதற்கு எதுவாக தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது.
அந்த முதலையால் உடலை பக்க வாட்டில் வளைக்க இயலாத படி ஆமையின் உடலை மூடி இருக்கும் கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.
ஏற்கனவே சீமோ சூக்கசின் இனவகைளின் புதை படிவங்கள் ஆப்பிர்க்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
ஆனால் சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பது குறித்து வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை.


எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன?

லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார்.


அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார்.



மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல்  எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும்.


எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன.மலைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன.


தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது.


அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.



ஆனால் இந்தக் கருத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.


சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.


ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவதிற்கு ஓட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது.


பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும்  மண் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது.


தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.


கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும்.



எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார்.


இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் தனி வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன.


உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள்.


எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது.


இந்த நிலையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் தரை வழித் தொடர்பு வழியாக மண் புழுக்கள் எரிமலைத் தீவுகளை அடைந்திருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.


குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்துக்கு அருகில் உள்ள கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் மண் புழுவினம் காணப் படுகிறது.கெர்கூலியன் தீவானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலையின் உச்சிப் பகுதி ஆகும்.


இந்த நிலையில் கெர்கூலியன் தீவு எப்பொழுது உருவானது என்று அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர்,கெர்கூலியன் தீவு அமைந்து இருக்கும் கடலடிப் பீடபூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளைச் சேகரித்து அதன் தொன்மையை ஆய்வு செய்தனர்.


அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகள் ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.


அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அந்தக் குழுவினர் கண்டு பிடித்தனர்.


இதன் அடிப்படையில் டாக்டர் மைக்கேல் காபின், தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் அந்தக் கடலடிப் பீட பூமியானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியிலும் கூட கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடித் தரையில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளிலும் கூட இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாரஸ் என்ற டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.

இந்தக் கண்டு பிடிப்பனது , ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதும், அதன் காரணமாகக் கெர்கூலியன் கடலடிப் பீட பூமிக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. 


எனவே அந்தத் தரை வழித் தொடர்பு வழியாகவே மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெர்கூலியன் பீட பூமிப் பகுதிக்கு வந்து சேர்ந்து இருக்கிறது.


அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் அந்தப் பீட பூமியானது கடலுக்குள் மூழ்கிய பொழுது, மண் புழுக்கள் தற்பொழுது கடல் மட்டத்துக்கு மேலாக தீவாக இருக்கும் எரிமலையின் மேற்பகுதிக்கு வந்து இருக்கின்றன.


இடைப் பட்ட காலத்தில் மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் பரிணாம மாற்றத்தால் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் புதிய இன வகையாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கிறது.


இதே போன்று ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது இருந்த தரைவழித் தொடர்பு வழியாகத்  தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மற்ற எரிமலைத் தீவுகளுக்கும் வந்த மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் காலப் போக்கில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனவகைகளாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கின்றன.

எரிமலைத் தீவுகளுக்கு நத்தைகள் எப்படி சென்றன?

ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார்.
அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது.
பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார்.
அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும்.
தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும்.
எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.

எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது.



கடற்பசு,கடல் மட்டம்,மற்றும் கால நிலை மாற்றம்.

கடல் பசு என்று அழைக்கப் படும் பாலூட்டி விலங்கினம்,கடற் கரையோரத்தில் ஏழு அடி ஆழத்தில் உள்ள கடல் தரையில் வளர்ந்து இருக்கும் புற்களை உண்டு வாழும் ஒரு சாதுவான விலங்கு.
குறிப்பாகக் கடற்பசுக்கள் , வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதிக் கடல் பகுதியில் வாழ்கின்றன.கடலுக்கு அடியில் வாழ்ந்தாலும் கடற் பசுக்கள் கடல் நீரைக் குடிப்பதில்லை,ஆறு மற்றும் குளத்தில் உள்ள நல்ல நீரையே குடிக்கின்றன.
அதே போன்று கடற் பசுக்கள் காற்றை சுவாசிக்கவும் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை நீர்பரப்புக்கு மேல் மூக்கைத் திறந்து காற்றை சுவாகிக்கும்.நீருக்கு அடியில் சென்றதும் மூடி போன்ற தசையினால் மூக்கை மூடிக் கொள்ளும். அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் கடற் பசுவால் நீருக்குள் சுவாசிக்காமல் தாக்குப் பிடிக்க வல்லது.
கடற் பசுக்களின் உடற் செயலியல் மந்தமானது என்பதால் கடற் பசுக்கள் மெதுவாகவே இயங்கக் கூடியது.ஒரு நாளைக்க எட்டு மணி நேரம் புற்களை மேயும்.ஒரு நாளைக்கு நாற்பது கிலோ எடையுள்ள புற்களை உண்கின்றன.

கடற் பசுவில் இரண்டு இனங்கள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டோகோங் என்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானாட்டி என்றும் அழைக்கப் படுகிறது.

டோகோங் இனத்தில் ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் திமிங்கிலம் அளவுள்ள கடற் பசுக்கள் ,பசிபிக் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன,தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது.


டோகோங் இனத்தில் ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் கடற் பசுக்களின் புதை படிவங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக ஜெர்மனி,பெல்ஜியம்,பிரான்ஸ் ஸ்விட்சர் லாந்து பகுதிகளில் டோகாங் வகை கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.




வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய கடற் பசுக்களின் புதை படிவங்கள் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படுவதன் மூலம்,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டம் அமைந்து இருக்கும் அட்ச ரேகைப் பகுதியில் கூட, பூமத்திய ரேகைப் பகுதியைப் போலவே அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது புலனாகிறது.

அதே போன்று ஐரோப்பாக் கண்டத்தின் நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டதுக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது.

அத்துடன் ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையானது என்பதுடன், அந்தக் கடற் பசுக்கள் சிறிய அளவிலான தொடை எலும்புடன் வாழ்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது.அதனால் புல் தரைகள் காலியாக இருந்தது.அந்தக் காலத்தில் மரங்களில் பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த, ஒரு மூஞ்சூறு வகை விலங்கினமானது,தரையில் இறங்கி தாவரங்களை உண்டு வாழ ஆரம்பித்ததுடன்,பல வகையான வாழிடங்களிலும் வாழ ஆரம்பித்ததால் பல தகவமைப்புகளுடன் பல வகை பாலூட்டி விலங்கினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றின.

அப்பொழுது தரைப் பகுதியில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஒரு விலங்கினம் ,ஆறு குளம்,ஏரி போன்ற நீர் நிலைகளுக்கு அடியில் இருந்த தாவரங்களை உண்டு வாழும் வாழ்க்கை வாழ்ந்ததில், கால்களை நடக்கப் பயன் படுத்துவதற்குப் பதிலாக உந்தி உந்தி நீந்தவும் நீர்ப் பரப்புக்கு மேலே எம்பவும் பயன் படுத்தியத்தில், காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகள் வளர்ந்து கடற் பசுவினம் தோன்றியது.

கடற்பசுவின் மூததையானது யானை,திமிங்கிலம்,மற்றும் ஹை ராக்ஸ் என்று அழைக்கப் படும் ஒரு கொறித்துண்ணி விலங்கினத்தின் நெருங்கிய சொந்தம்.

எனவே கடற் பசுவின் தொன்மையான புதை படிவங்கள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்டது.

அத்துடன் மானாட்டி வகைக் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவில் குறிப்பாக புளோரிடா பகுதியிலும் கரீபியன் தீவுகளிலும் காணப் படுவதால்,மானாட்டி வகைக் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடல் நீரோட்டங்களின் உதவியுடன் அட்லாண்டிக் கடலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பயணம் செய்து, அமெரிக்கக் கண்டங்களை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில்,ஒரு கடற் பசுவின் தலைப் பகுதியின் புதை படிவங்களை ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார்.

தொல் விலங்கியல் வல்லுனர்கள் தொன்மையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்ற எதிர் பார்ப்புக்கு மாறாக இந்தக் கண்டு பிடிப்பு இருந்தது.

அப்படியென்றால் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் அதாவது புதிய உலகம் என்று அழைக்கப் படும்,அமெரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம், அட்லாண்டிக் கடலில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி பயணம் செய்து.ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. 

இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில்,ஒரு ஆற்றுப் படுகையில்,மீன்கள்,முதலை,குரங்கின் எலும்பு போன்ற புதை படிவங்களுடன்,காண்டா மிருகத்தின் புதை படிவத்தையும்,டாக்டர்,டாரில் டொமினிக் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் முக்கியமாக காண்டா மிருகமானது நீரில் நீந்த இயலாதா விலங்கு.

எனவே ஜமைக்கா தீவில் காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.

இந்த நிலையில் அதே ஜமைக்கா தீவில் டாக்டர் டாரில் டொமினிக், நாலு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, கடற் பசுவின் எலும்புப் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார்.

பிசோசைரன் என்று பெயரிடப் பட்ட அந்த விலங்கானது, நன்கு வளர்ந்த கால்களுடன் இருந்தது.அத்துடன் அந்த விலங்கானது நீர் வாழ் கடற் பசுவுக்கும் நிலத்தில் வாழ்ந்த நடக்கும் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்றும் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக நீர் யானையானது பகலில் நீர் நிலைகளில் நீருக்கு அடியில் தாவரங்களை உண்டும், இரவில் தரைக்கு வந்து தாவரங்களை உண்டும் வாழ்கிறது.அதே போன்று ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட பிசோசைரன் விலங்கும் நீர் யானையைப் போலவே, நீரிலும் நிலத்திலும் வாழ்ந்தது என்று டாக்டர் டாரில் டொமினிக் தெரிவித்து இருக்கிறார். 

இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள டுனீசியாவில்,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் உட் செவிப் பகுதியில் காணப் படும் எலும்பின் புதை படிவங்களை,டாக்டர் ஜூலியட் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் கண்டு பிடித்தார்.



குறிப்பாகக் கடற் பசுவின் உட்செவிப் பகுதி எலும்பானது தனித் தனியயுடன் இருக்கும் என்பதால்,அதனை ஆய்வு செய்த டாக்டர் ஜூலியட் பினாய்ட்,அந்த விலங்கு ஒரு கடற் பசுவின் எலும்பு என்றும்,அந்த விலங்குக்கு,சாம்பி கடல் பசு என்று பெயர் சூட்டினார். 

அத்துடன் அந்த காதுப் பகுதி எலும்பமைப்பின் படி, அந்த விலங்கானது நீரடி வாழ்க்கைக்கு ஏற்ப தகவமைப்பு பெற்று இருந்தது என்றும் டாக்டர் ஜூலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார்.

முக்கியமாக டுனீசியாவில் வாழ்ந்த விலங்கின் எலும்பு அமைப்பானது மிகவும் தொன்மையானது என்றும்,அந்த விலங்கின் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடற் பசுவானது, ஆப்பிரிக்கப் பகுதியிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில், அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் அமெரிக்காவுக்கு நடக்கும் கடற் பசுக்களே சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஒரே காலத்தில் அட்லாண்டிக் கடலுக்கு இரண்டு பக்கமும் நடக்கும் கடற் பசுக்கள் இருந்திருப்பது புதிராக இருக்கிறது.

இதன் மூலம் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களுக்கு நடக்கும் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் மாநாட்டி வகைக் கடற் பசுக்கள் காணப் படுவதன் மூலமும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.

ரிப்சாலிஸ் புதிர் 



ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் கள்ளித் தாவரமானது எப்படி அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு பரவியது என்பது, அறிவியல் உலகில் இன்று வரை விடுவிக்கப் படாத புதிராக இருக்கிறது.

கள்ளித் தாவரத்தின் தாயகம் அமெரிக்கா.

கள்ளித் தாவரக் குடும்பத்தின் இன வகைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் பரவலாகக் காணப் படுகிறது அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் வட பகுதியில் இருக்கும் கனடாவின் தென் பகுதி வரை பரவி இருக்கிறது.

கள்ளித் தாவரமானது, பூக்களின் மகரந்தங்கள் மூலம், காற்றின் மூலமாகப் பரவினாலும்கூட, பெரும் பாலும் பூச்சிகள்,விலங்குகள் மற்றும் பறவைகள் மூலமாகவே பரவுகிறது.

அதன் காரணமாகவே கள்ளியின் இனவகைகளானது, அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே பரவி இருக்கிறது.

ஆனால் கள்ளிக் குடும்பத்தில், மரங்களின் மேல் படர்ந்து வாழும், ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் ,ஒரு இனம் மட்டும், விநோதமாக,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும், இலங்கைத் தீவிலும் காணப் படுகிறது.

எப்படி இந்தக் கள்ளித் தாவரமானது,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும், மடகாஸ்கர் தீவுக்கும், இலங்கைத் தீவுக்கும், பரவியது? என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.

பொருந்தாமல் போன கோண்டுவாணா விளக்கம்.

இது போன்று ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் பகுதிக் கண்டங்களில் காணப் படுவதற்கு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்கள்,எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அதன் பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

இந்த நிலையில், மரபணு வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில்,கள்ளிக் குடும்பமானது,மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் கள்ளிக் குடும்பத் தாவரங்கள் காணப் படுவதற்கு கோண்டுவானா விளக்கம் பொருந்தாது.

முக்கியமாக கள்ளித் தாவரத்தின் புதை படிவங்களும் ஐந்து கோடி ஆண்டுகளக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில்,காணப் படவில்லை,ஏனென்றால் கள்ளிக் குடும்பமானது புவியியல் காலகட்டத்தில்,மிகவும் சமீபத்தில் தோன்றிய தாவரமாகும்.

இந்த நிலையில்,நீண்ட தொலைவு பறந்து செல்லும்,பறவைகள் மூலம், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ரிப்சாலிஸ் கள்ளியானது,ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப பரவிய பிறகு,மற்ற பறவைகள் மூலம்,மடகாஸ்கர் மற்றும் இலங்கைத் தீவுகளுக்குப் பரவி இருக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு,அந்தக் கண்டத்தில் எச்சமிட்டதால், ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படுகிறது.

ஆனால் அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்கும் வரை எச்சமிடாமல்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் வந்து எச்சமிட்டது என்று கூறப் படும் விளக்கமானது இயற்கைக்கு முரணான விளக்கம்.

இதே போன்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பியர்கள் மேற்கொண்ட கடல் பயணத்தால்,கப்பல்களின் சரக்குகள் மூலம் , ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்றும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படும் ரிப்சாலிஸ் கள்ளிகளானது வெவ்வேறு இனவகைகளைச் சேர்ந்தது.
இது போன்று ஒரு இனத்தில் இருந்து புதிய இனவகைகள் தோன்ற லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகும்.

எனவே ஐரோப்பியர்களின் கடல் பயணங்கள் மூலமாக, ரிப்சாலிஸ் கள்ளிகள், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படும் விளக்கமும் இயற்கைக்கு முரணான விளக்கம்.

எனது விளக்கம்.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்திருக்கிறது.அப்பொழுது கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருக்கிறது.

அதன் வழியாக விலங்கினங்கள் இடம் பெயர்ந்து இருக்கின்றனது.
அந்த விலங்கினங்கள் மூலமாகவே, ரிப்சாலிஸ் கள்ளிகளானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கின்றன.
அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,மடகாஸ்கர் தீவுக்கும் இலங்கைத் தீவுக்கும், ரிப்சாலிஸ் கள்ளிகள்,விலங்கினங்கள் மூலமாகவே பரவி இருக்கின்றன.

அதன் பிறகு சுடு நீர் ஊற்றுக்கள் மூலம், பூமிக்கு அடியில் இருந்து வெளிவந்த நீரானது, கடலில் கலந்ததால், கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.

கண்டங்கள் எல்லாம்,தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே, எப்பொழுதும் இருந்திருகின்றன.
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியா ஆகிய கண்டங்கள் எல்லாம் தீவுக் கண்டங்களாக நகர்ந்து கொண்டு இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்தக் கால கட்டத்தில்,வட பகுதிக் கண்டமான,வட அமெரிக்கக் கண்டத்தில்,பரிணாம வளர்ச்சியின் தோன்றிய பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்களானது, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியா ஆகிய கண்டங்களில்,கண்டு பிடிக்கப் பட்டதன் மூலமாகக், கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடத்திலேயே,எப்பொழுதும் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வெக்னரின் விளக்கத்தின் படி, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் மடகாஸ்கர் தீவும் தனித் தனித் தீவுகளாக இருந்ததாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ஒரு விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

அந்தப் புதை படிவ விலங்குக்கு, முதன்மைக் குழம்புக் காலி என்று பொருளைத் தரும், புரோட்டோ அங்குலேட்டம் டோனா என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.

ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உடற் கூறியல் வல்லுனர்,டாக்டர் மாவுரின் ஓ ஏ லியரி தலைமையிலான குழுவினர், அந்த விலங்கின் எலும்பு அமைப்பை மற்ற பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களுடன், ஆறு ஆண்டுகள் ஒப்பாய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் தற்பொழுது உள்ள கழுதை,குதிரை,எருமை,நாய்,பன்றி,யானை,சிங்கம்,புலி,கரடி போன்ற பாலூட்டி விலங்கினங்கள் யாவும், வட அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, அந்த புரோட்டோ அங்குலேட்டம் டோனா விலங்கினத்தில் இருந்தே, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பரிணாம வளர்ச்சியடைந்து தோன்றி இருப்பதாக,டாக்டர் மாவுரின் ஓ ஏ லியரி கண்டறிந்து இருக்கிறார்.

அத்துடன் அந்த மூதாதைப் பாலூட்டியான புரோட்டோ அங்குலேட்டம் டோனா, வேறு கண்டங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்றும், ஆனால் புரோட்டோ அங்குலேட்டம் டோனா, நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு என்றும், டாக்டர் மாவுரின் ஓ ஏ லியரி தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே பாலூட்டி வகை விலங்கினம் வாழ்ந்திருப்பது, அந்தக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, அல்சிடெடோர் பிக்னியா என்ற பாலூட்டி விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த விலங்கின் நெருங்கிய சொந்தங்களின் எலும்புப் புதை படிவங்கள், வட அமெரிக்கக் கண்டத்திலும்,ஆசியக் கண்டத்தில் சீனாவிலும் ஆறரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே டாக்டர் வெக்னர் கூறிய விளக்கத்தின் படி, தென் அமெரிக்கக் கண்டமானது, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை, என்பதுடன்,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே தென் அமெரிக்கக் கண்டம் இருந்திருப்பதும், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆசியயா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்ட அல்சிடெடோர் பிக்னியா விலங்கினதைச் சேர்ந்த விலங்குகளின் ,எலும்புப் புதை படிவங்கள் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படும், ஆப்பிரிக்கக் கண்டத்திலும்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, எரிதீரியம் அசொசோரம் என்று அழைக்கப் படும் பாலூட்டி வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களை, பாரிஸ் அருங் காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

பன்றியின் அளவுள்ள அந்த விலங்கானது யானையின் மூதாதை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதே போன்று,பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவும் இந்தியாவும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்த தாகவும்,பின்னர் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நிலப் பகுதியானது, மடகாஸ்கர் தீவில் இருந்து தனியாகப் பிரிந்து நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்,ஆசியக் கண்டத்துடன் மோதியதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தீவுக் கண்டமாக வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்ட, இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்ட, பாலூட்டி விலங்கின் எலும்புப் புதை படிவம் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, தென் இந்தியாவில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள நாஸ்கல் கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான, பாலூட்டி வகை விலங்கினத்தின் எலும்புப் புதை படிவங்களைப் பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, தொல்விலங்கியல் வல்லுநர்,டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், டாக்டர் அசோக் சாகினி, நேட்சர் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது, வட பகுதிக் கண்டங்களிளில் இருந்து,தனித்து இருந்திருக்க வில்லை என்றும், தெரிவித்து இருக்கிறார்.

எனவே தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தற்பொழுது உள்ள இடங்களிலேயே இருந்திருப்பதுடன், வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருப்பதும் ,அந்தக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்ட, ஆறு கோடி ஆண்டுகள் தொண்மையான பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.



                                                                000000000000000000000000000





No comments:

Post a Comment