புவியியல் வல்லுனர்கள் மகா குழப்பத்தில் இருக்கின்றனர்.
கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதியில்,
ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பனிரெண்டு வகையான டைனோசர்களின் புதை
படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவின் வட
பகுதியில் இருக்கும் கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,ஆசியக் கண்டத்தின் வட
பகுதியில் இருக்கும் சைபீரியாவின் வட பகுதியில் இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப்
பகுதியிலும்,தவர உண்ணி மற்றும் கொன்றுண்ணி வகை டைனோசர்களின் புதை படிவங்கள்,இளவயது
டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கலைத் தொல்
விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
ஆனால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போல், ஊர்வன வகை விலங்கினங்களால்
சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.
எனவே ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்கள் எப்படி ஆர்க்டிக்
பனிப் பிரதேசத்தில் வாழ்ந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
ஒரு வேளை டைனோசர்கள் மட்டும் பிரத்யேகமாக ஏதாவது சிறப்புத்
தகவமைப்புககளைக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் கூட ,ஊர்வன வகை விலங்கினமான
டைனோசர்கள், முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.
ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால், அதற்கு
முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
எனவே பனிப் பிரதேசத்தில் எப்படி டைனோசர்களின் முட்டைகள் பொரிந்தன என்ற
கேள்வியும் எழுந்திருக்கிறது.
நிச்சயம் பனிப் பிரதேசத்தில் டைனோசர்கள் முட்டையிட்டு,இனப் பெருக்கம்
செய்து வாழ்ந்து இருக்க முடியாது.
எனவேதான் புவியியல் வல்லுனர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி தற்பொழுது பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை
பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆணுக்கு ஆறு மாத காலம் தொடர்ச்சியாக
பகலும்,அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்
தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிருடன்
வாழ்ந்து இருக்க இயலாது.
எனவே டைனோசர்கள் வாழக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் உருவாகி
இருக்க இயலாது.
எனவே டைனோசர்கள் பனிக் கரடிகள் போல அறிதுயில் மேற்கொண்டு இருக்குமா
அல்லது பனி மான்களைப் போல குளிர் கால இடப் பெயர்ச்சி செய்து இருக்குமா என்றெல்லாம்
ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் ஆர்க்டிக் பகுதியில் இருந்து மித வெப்பக் கால நிலை நிலவக் கூடிய
பகுதிகளுக்கு வர வேண்டும் என்றால்,ஆறாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய
வேண்டும்.ஆனால் மிகவும் இளவயது டைனோசர்களால் அவ்வளவு தூரம் பயணம் செய்து இருக்க
இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அதே போன்று பெரிய அளவிலான டைனோசர்களானது,குகைகளில் பனிக் கரடிகளைப்
போன்று அரிதுயிலை மேற்கொண்டு இருக்கவும் இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர்.
முக்கியமாக ஆர்க்டிக் பகுதியில் மிகவும் இளவயது டைனோசர்களின்
பற்களும்,டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு
இருப்பதன் மூலம்,ஆர்க்டிக் பகுதியிலேயே டைனோசர்களானது இனப் பெருக்கம் செய்து, ஆண்டு
முழுவதும் வாழ்ந்து இருப்பதை, எடுத்துக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள்
நம்புகின்றனர்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் ஆறுமாத காலம் நீடிக்கும் இரவுக் காலத்தில்
எப்படி டைனோசர்கள் வாழ்ந்தன?என்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு
இருக்கிறது.
குறிப்பாக துருவப் பகுதிகளில் ,ஆறு மாத காலம் ,தொடர்ந்து இரவு
நீடிக்கும் பொழுது,வெப்ப நிலையானது மைனஸ் ஐம்பது டிகிரிக்கும் கீழே செல்கிறது.இது
போன்ற சூழலில் டைனோசர்கள் குடிப்பதற்குக் கூட நீர் இருந்திருக்காது.
இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,ஆறு மாத கால இரவுக் காலத்தில்,
டைனோசர்கள் ,இறந்த தாவரங்களை உண்டு வாழ்ந்து இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
ஆனால் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் அழிந்ததற்கு ஒரு
விளக்கம் கூறப் பட்டது.அதாவது பூமியில் ஒரு விண் கல் விழுந்ததால் பூமியெங்கும்
தூசி கிளம்பியதாகவும் ,அதனால் பல மாதங்கள் சூரிய ஒளி மறைக்கப் பட்டதாகவும்,அதனால்
தாவரங்கள் அழிந்ததாகவும் அதனால் டைனோசர் இனமே அழிந்ததாகவும் நம்பப் பட்டது.
இந்த நிலையில்,ஆர்க்டிக் பகுதியில், ஆறு மாத காலம் தொடர்ந்து
நீடிக்கும் இரவுக் காலத்தை டைனோசர்கள் சமாளித்து வாழ்ந்து இருந்தால் பின்னர் ஏன்
விண் கல் விழுந்த பொழுது உருவான ஆறு மாத கால இரவுக் காலத்தை தாக்குப் பிடிக்க
முடியாமல் அழிந்தன என அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.
ஆக மொத்தம் தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, புவியியல் மற்றும்
விலங்கியல் வல்லுனர்கள், விளக்கம் கூற இயலாத நிலையில் குழம்பிக் கொண்டு
இருக்கின்றனர்.
இதே போன்று ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹை
பெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னீர் அமையின் புதை
படிவங்களை,ரோஸ்டர் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,டாக்டர் ஜான் டார்டுனோ குழுவினர்
கண்டு பிடித்தனர்.
சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை விலங்கினத்தைச்
சேர்ந்த ஆமையானது,பனிப் பிரதேசத்தில் அமைந்து இருக்கும், ஆக்சல் ஹாய் பெர்க்
தீவில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன? என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு விடை கூறும் வண்ணம் ஜான் டார்டுனோ ஒரு விளக்கத்தைக்
கூறினார்.
அதாவது,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஆறு இடங்களில்
எரிமலைகள் பெரும் அளவில் வாயுக்களை வெளியிட்டதாகவும்,அதனால் வளி மண்டலத்தின் வெப்ப
நிலையானது உயர்ந்ததாகவும்,அதனால் துருவப் பகுதிகளில்,வெப்ப நிலை அதிகமாக
இருந்ததாகவும், அதனால் பனிப் படலங்கள் உருவாக முடியவில்லை என்றும்,அதனால் ஆமைகளால்
துருவப் பகுதிகளில் வாழ முடிந்திருக்கிறது, என்று டாக்டர் ஜான் டார்டுனோ விளக்கம்
கூறினார்.
ஆனால் இந்த விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு
முன்பு,பூமியை ஒரு விண் கல் தாக்கியதால்,எழும்பிய புகை மற்றும் தூசி மண்டலமானது
பூமியெங்கும் பரவியதால் சூரிய ஒளியானது ,பல மாதங்கள் மறைக்கப் பட்டதாகவும்,அதனால்
தாவர வகைகள் அழிந்ததாகவும்,அதனால் டைனோசர்களும் அழிந்ததாகவும் ,புவியியல்
வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரின்சிடன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்
ஜெர்டா கெல்லர் என்ற புவியியல் வல்லுநர்,விண் கல்லுக்குப் பதில் இந்தியாவில்
குறிப்பாக தக்காணப் பீட பூமிப் பகுதியில் இருந்து எரிமலைச் செயல்பாட்டால் ,புகை
மண்டலம் எழும்பி சூரியனை மறைத்ததால்,பலமாதங்கள் இரவும் குளிரும் நீடித்தால்
தாவரங்கள் அழிந்ததாகவும் அதனால் டைனோசர்கள் அழிந்ததாகவும் விளக்கம் தெரிவித்து
இருக்கிறார்.
இதனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைகளால் பூமியின் வெப்ப
நிலையானது உயர்ந்ததால் வெப்பம் அதிகரித்தால் துருவப் பகுதிகளில் வெப்ப நிலையானது
உயர்ந்ததால் பனிப் படலங்கள் உருவாக வில்லை என்றும் ஆனால் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு
முன்பு எரிமலைகளால் உருவான புகை மண்டலமானது சூரியனை மறைத்ததால் பூமியில் பல
மாதங்கள் வெப்ப நிலையானது குளிர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப்
பின் முரணாக விளக்கங்களைக் கூறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான கேள்வியும் எழுகிறது.
அதாவது ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆர்க்டிக் பகுதியில் ஆறு மாத
காலம் இரவு நீடிக்கும் பொழுது,டைனோசர்களானது,இறந்த தாவரங்களை உண்டு வாழ்ந்து
இருந்தால்,பின்னர் ஏன் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மாதக் கணக்கில்
நிலவிய இரவுக் குளிர் காலத்தில் அழிந்தன?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கம் கூற இயலாமல் தற்பொழுது
புவியியல் வல்லுனர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்தப் புதிருக்கு விடை என்ன?
நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,எண்ணெய் எடுப்பதற்காகக் கடல்
மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் கடல் தரையைத்
துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு
முன்பு,ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ,பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப்
படும் தாவர உண்ணி டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதைப் புவியியல்
வல்லுனர்கள் தற்செயலாகக் கண்டு பிடித்தனர்.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கூட,கடல் மட்டத்தில்
இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட
பூமியின் தொன்மையை அறிவதற்காகப் பிரிட்டிஷ் நாட்டுப் புவியியல் வல்லுனர்கள்,கெர்கூலியன்
பீட பூமி என்று அழைக்கப் படும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில்
இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அந்தப் பாறைகளின் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக
இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்தப் பாறைப் படிவுகளில்,மரங்களின் கருகிய
பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும்,பிரிட்டிஷ் நாட்டுப்
புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்கள்
வாழ்ந்த காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ
மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில்
காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக்
காட்டப் படுகிறாது.
எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது கடல்
பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் காணப்
படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும்
பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும்
விளக்கம் தவறான விளக்கம் என்பதுடன்,டைனோசர்களின் புதை படிவங்களானது தீவுகளிலும்
கண்டங்களிலும் காணப் படுவதற்கு,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது
இருபதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கும்
தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம்
என்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.
இவ்வாறு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவும் குறைவாக
இருந்ததால்,பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்திருக்கிறது.
அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததாலும்,கடலின்
பரப்பளவு அதிகரித்தாலும்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது படிப்படியாகக்
குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி
செய்ய இயலாத டைனோசர்கள் அழிந்து இருக்கின்றன.
முக்கியமாக தற்பொழுது பூமியானது, தன் அச்சில் இருபத்தி மூன்றரைப் பாகை,
சாய்ந்து இருப்பதால் ,துருவப் பகுதிகளில்,ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும், அதே
போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது துருவப்
பகுதிகளில் வெப்ப நிலையானது மைனஸ் ஐம்பது டிகிரி வரை கீழே செல்கிறது.இது போன்ற
குறைந்த வெப்ப நிலையில் டைனோசர்கள் உண்பதற்கான பசுந்தாவரங்கள் வளர்ந்து இருக்க
இயலாது.
அத்துடன் ஆறு மாத காலம் சூரிய ஒளியின்றி இரவு நீடித்தால்,சூரிய
ஒளியின் உதவியின்றி தாவரங்கலால் ஒளிச் சேர்க்கை செய்து உயிருடன் வாழ்ந்து
இருக்கவும் இயலாது.எனவே துருவப் பகுதிகளில், டைனோசர்கள் வாழக் கூடிய அடர்ந்த
பசுமைக் காடுகளும் உருவாகி இருக்க இயலாது.
எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு
ஏற்பட்டு இருப்பதும்,துருவப் பகுதிகளில் காணப் படும் டைனோசர்களின் புதை படிவங்கள்
மூலம் உறுதியாகிறது.
குறிப்பாகத் தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டராக
இருக்க்ரியது.ஆனால் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக்
காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும் அதன் பிறகு கடல்
மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பதும்,கடலுக்கு அடியில் கண்டு
பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்ததற்கு காரணம்
என்ன என்ற கேள்வி எழுகிறது.
No comments:
Post a Comment