பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.
நம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வருகிறது.
நானூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் ஆஸ்திரேலியா மற்றும் கிரீன்லாந்து தீவில் காணப் பட்டத்தின் அடிப்படையில் நம் பூமி நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டிருகிறது.
இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருப்பது பல தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் உறுதியாகத் தெரிய வந்திருகிறது.
குறிப்பாக நீர் யானைகளால் நீரில் நீந்த இயலாது.முக்கியமாக நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது.
தற்பொழுது நிலத்தில் விலங்குகளில் யானை மற்றும் காண்டா மிருகத்திற்கு அடித்த படியாக நீர் யானை மூன்றாவது பெரிய விலங்கு ஆகும்.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு குகையில் உலகில் வேறெங்கும் காண இயலாத தனி வகை குள்ள நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.
பொதுவாக நீர் யானைகள் தண்ணீருக்கு அடியில் நடக்கும் .ஐந்து நிமிடங்கள் வரை காற்று இல்லாமல் தாக்குப் பிடிக்கும்.அதன் பிறகு காலால் உந்தித் தள்ளி நீருக்கு மேல் வந்து சுவாசிக்கும்.மற்ற படி நீர் யானைகளால் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
சைப்ரஸ் தீவிற்கு நீர் யானைகள் எப்படி வந்திருக்கும் என்று தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இருநூறு முதல் முன்னூறு கிலோ எடை யுடைய குள்ள வகை நீர் யானைகளால் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலமாகவும் மிதந்தபடி சைப்ரஸ் தீவிற்கு வந்து சேர்ந்திருக்க இயலாது.குறிப்பாக நீர் யானைகள் நீரில் மூழ்கியிருந்தாலும் அவற்றின் கண் காது மற்றும் மூக்குத் துவாரங்கள் நீருக்கு மேல் இருக்கும் வண்ணம் நீர் யானையின் கண் காது மற்றும் மூக்குத் துவாரங்கள் தலையின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.
ஆனால் சைப்ரஸ் தீவில் காணப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் மூக்குத் துவாரங்கள் கீழ் புறமாக அமைந்திருந்தது. அதே போன்று சைப்ரஸ் தீவுக் குள்ள வகை நீர் யானைகளின் கால் எலும்புகளும் தரை வாழ்க்கைக்கு ஏற்ற படி இருந்தது.
மேலும் நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம்.மேலும் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் சிசிலி கிரிட்டி மால்டா ஆகிய தீவுகளிலும் பல்வேறு பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவது குறிப்பிடத் தக்கது.
அத்துடன் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மடகாஸ்கர் தீவிலும் மூன்று வகையான குள்ள நீர் யானைககள் வாழ்ந்திருப்பது எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
தற்பொழுது ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று வகை நீர் யானைகளின் மூதாதைகளும் தனித் தனியாகக் கடல் பயணம் செய்து மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
குறிப்பாக மடகாஸ்கர் தீவு குள்ள நீர் யானைகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரியவந்திருகிறது.நானூறு கிலோ எடையுடன் நீந்தவோ மிதக்கவோ இயலாத நீர் யானைகள் நிச்சயம் தரைவழியாகவே மடகாஸ்கர் நிலப் பகுதிக்கு வந்திருக்க முடியும்.
முக்கியமாக ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருகிறது.
எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது சைப்ரஸ் கிரிட்டி சிசிலி மால்டா மற்றும் மடகாஸ்கர் ஆகிய தீவுகளில் காணப் படும் பல்வேறு வகையான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைபடிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
No comments:
Post a Comment