முதலைகள் வெப்ப மண்டலப் பகுதியில் வாழக் கூடிய விலங்கினம்.
ஆனால் வட துருவப் பகுதியில் அமைந்திருக்கும் எல்ஸ்மர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகளின் எலும்புப் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்து இருகின்றனர்.
மேலும் வட துருவப் பகுதியில் அமைந்திருக்கும் கிரீன்லாந்து தீவில் வண்ணத்துப் பூசிகள் பறந்த காடுகள் இருந்ததிற்கு ஆதாரமாக பைன் ஈவ் போன்ற மரங்களின் புதை படிவங்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.
மேலும் வடக்கு மற்றும் தென் துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் காடுகள் இருந்திருப்பதற்கு ஆதாரமாக டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.
எனவே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் பூமி அதிக வெப்பமாக இருந்திருப்பது விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
எனவே நம் பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக பத்தாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டிருக்கும் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்கள் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவது கடல் மட்டம் பத்தாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதையும் நிரூபிக்கிறது.
எனவே பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதற்கு கடல் பரப்பு அதிகரித்ததே காரணம்.
கடல் மட்டம் உயர்த்ததற்கும் அதிகரித்ததற்கும் கடலுக்கு அடியில் இருக்கும் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து சுரக்கும் நீர் கடலில் கலப்பதே காரணம்.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
No comments:
Post a Comment