பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
Friday, 11 October 2024
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது . youtube presentation-content
டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.
தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் .
ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது.
அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர்.
ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரிவதையும் கண்டபிறகு பூமி ஒரு கோளம் என்று ஆரியப் பட்டது.
இந்த நிலையில் மெகல்லன் என்ற ஐரோப்பிய மாலுமி,கப்பலில் உலகை வலம் வந்த பிறகே, பூமி ஒரு கோளம் என்பது உறுதிப் படுத்தப் பட்டது.
அதன் பிறகு ஐரோப்பியர்கள் பசிபிக் பெருங்கடலில் கடலில் பயணம் செய்து பல புதிய தீவுகளை கண்டுபிடித்து தங்கள் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடிய பொழுது, பல தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதுகுறித்து ஐரோப்பாவிற்கு திரும்ப வந்து கூறியதும் மக்கள் அதனை நம்ப மறுத்தனர்.
அதேபோன்று பசிபிக் பெருங்கடலில் பல ஆராய்ச்சியாளர்கள் பயணம் செய்து அங்கிருந்த தீவுகளில் இருந்த தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி தெரிவித்த விஷயங்களைக் குறித்து ஐரோப்பியர்கள் குழப்பமான ஆச்சரியத்தை அடைந்தனர்.
குறிப்பாக ஆஸ்திரேலியவில் கங்காரு விலங்கு பற்றி கூறியதைக் கேட்ட மக்கள் அதனை நம்ப மறுத்தனர். அதே போன்று பிளாட்டிபஸ் என்ற விலங்கு ஊர்வன வகை விலங்குகளை போல முட்டையிட்டு குஞ்சு பொறித்த பிறகு அதன் குஞ்சுகளுக்கு பாலூட்டி வகை விலங்கினங்களை போல் பாலூட்டுவதை பற்றி கூறியதையும் ஐரோப்பியர்கள் நம்ப மறுத்தனர்.
இந்த நிலையில் சில குடிகார மாலுமிகள் கடற்கன்னி கடல் அரக்கன் பற்றிய கதைகளும் உலா வந்தன.
ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ஆராய்ச்சி ஐரோப்பியர்கள் முதன் முதலில் கடலில் நெடுந் தொலைவுக் கடல் பயணங்களை மேற்கொண்ட பொழுது,பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும் விலங்கினங்கள் இருப்பதைக்;கண்டாலும்,அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. அவைகள் எல்லாம் இயற்கையில் ஆங்காங்கே படைக்கப் பட்டவைகள் என்று நம்பப் பட்டது. அந்தக் காலத்தில்,புதிய கண்டங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால்,அந்தக் கண்டங்களில் காணப் படும் புதிய விலங்கினங்கள்,தாவரங்கள் பற்றி அறிவதில் ஐரோப்பியர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள்,புத்தகங்கள் மட்டுமின்றி அருங் காட்சியகங்களும் உருவாகின.
அப்பொழுது, அருங் காட்சியகங்களுக்கு தேவையான மாதிரிகளைச் சேகரிப்பதற்காக ,சார்லஸ் டார்வினின் நண்பரும் இயற்க்கை ஆராய்ச்சியாளருமான, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ,ஒரு கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார். அப்பொபொழுது,ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,அதே போன்று,ஆசியா மற்றும் ஆசியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,வெவ்வேறாக இருப்பதைக் கவனித்தார். குறிப்பாக, ஆசியக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் குரங்கு,புலி,காண்டா மிருகம் போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,அவர் விலங்கினங்களானது, ஓரிடத்தில் தோன்றி மற்ற பகுதிகளுக்குப் பரவி இருப்பதைப் புரிந்து கொண்டார். அதன் அடிப்படையில் ,இந்தோனேசியாப் பகுதியில், முன் ஒரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பதையும்,அதனால் அந்தத் தீவுகளுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையும்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதையும், வாலஸ் யூகித்து அறிந்தார். ஆனால், ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,கோடிக் கணக்கான ஆண்டுகளாக,அந்தத் தீவுகள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருப்பதையும், வாலஸ் புரிந்து கொண்டார். வாலஸ் கவனித்த ,வெவ்வேறு வகை விலங்கினங்கள் காணப் படும் கடல் பகுதியானது ''வாலஸ் கோடு'' என்று அழைக்கப் படுகிறது.ஆனாலும்,இந்தத் தீவுகள் எல்லாம், அதிக பட்சம் நூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு தென் அமெரிக்கக் கண்டத்தின் கடற் கரையோரப் பகுதியை வரை படமாகத் தயாரிக்க பீகிள் என்ற கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்தது.அத்துடன் அதில் இயற்கை புதிர்கள் பற்றி அறிய இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின் என்ற இருபத்தி இரண்டு வயது இளைஞரையும் அனுப்பியது.
அப்பொழுது அந்தத் தீவுகளில் நகரும் ஆட்டாங் கல்லைப் போல ராட்சத ஆமைகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன அவற்றைக் கண்ட டார்வின் எப்படி இந்த விலங்குகள் இந்த தனிமை தீவிற்கு வந்திருக்கக் கூடும் என்று வியந்தார் . அப்பொழுது டார்வினை வரவேற்ற காலமாக தீவு கவர்னர் இந்த தீவுகளில் காணப்படும் ஆமைகளின் ஓடுகள் தீவிற்கு தீவு வேறுபட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார். அத்துடன் ஒரு ஆமையின் ஓட்டை மட்டும் வைத்துக்கொண்டு அந்த ஆமை எந்த தீவை சேர்ந்தது என்று கூறி விட முடியும் என்றும் தெரிவித்தார். அப்பொழுது டார்வின் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தார் பச்சை பசேல் என்று இருக்கும் தீவுகளில் தரையில் இருந்து சில அடி உயரத்திலேயே தாவரங்கள் இருக்கும் தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் குட்டையாக இருப்பதை கவனித்தார். அதேபோன்று வறண்ட தீவுகளில் அதாவது இலை தழைகள் சற்று உயரமாக இருக்கும் தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் நீளமாக இருப்பதை கவனித்தார். அத்துடன் அந்த ஆமைகள் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதையும் புரிந்து கொண்டார்.
பின்னர் அந்த ஆமைகள் வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைப்புகளை பெற்றதாக டார்வின் புரிந்து கொண்டார்.
அதே போன்று காலபாகஸ் தீவுகளில் இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள் இருப்பதையும் கவனித்தார். குறிப்பாக அந்தப் பேரோந்திகளில் சில கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழ்வதையும் கவனித்தார். அவ்வாறு கடலுக்குள் செல்லும் இகுவானாக்களின் கால் விரல் நகங்கள் நீளமாக பாறைகளை பற்றி கொள்ளும்படி இருந்தது. ஆனால் தரையில் இருக்கும் தாவரங்களை உண்டு வாழ்ந்த இகுவானாக்களின் கால் மற்றும் அவைகளின் விரல்கள் குட்டையாக இருந்தன .
அதன் அடிப்படையில் அந்த இகுவானாக்களும் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை டார்வின் புரிந்து கொண்டார்
அதே போன்று அந்த தீவுகளில் பலவகை சிட்டுக்கள் இருப்பதை கவனித்தார் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றின் அலகுகள் வேறுபட்டு இருப்பதை டார்வின் கவனித்தார். குறிப்பாக மரப்பட்டைகளுக்கு அடியில் இருக்கும் புழு பூச்சிகளை உண்ணும் சிட்டுகளின் அலகு நீளமாகவும் கூர்மையாகவும் இருப்பதை கவனித்தார். அதேபோன்று தானியங்களை உண்ணும் சிட்டுக்களின் அலகு குட்டையாக இருப்பதை கவனித்தார். அத்துடன் பழம் மற்றும் கொட்டைகளை உண்ணும் சிட்டுகளின் அலகு கிளிகளுக்கு இருப்பதைப் போன்று பருத்து இருப்பதை கவனித்தார்.அதன் பிறகு அந்த சிட்டுகள் எல்லாம் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை டார்லிங் புரிந்து கொண்டார். இவ்வாறு ஒரு இனத்திலிருந்து பல வேறுபட்ட இன வகைகள் தோன்றுவது அடாப்டிவ் ரேடியேசன் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பாக காலபாகஸ் எரிமலை தீவுக் கூட்டத்தில் தரையில் வாழக்கூடிய ராட்சத ஆமைகள், இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள், இருப்பதைக் கண்டு எப்படி இந்த விலங்குகள் ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியை கடந்து இந்த தனிமை தீவிற்கு வந்திருக்க முடியும் என்று வியப்பு அடைந்தார்.
அதேபோன்று தீவுகளில் தரையில் வாழும் நத்தைகள் இருப்பதைக் கண்டும் வியந்தார்.ஏனென்றால் தரையில் வாழும் நத்தைகளுக்கு கடலின் உப்பு நீர் ஒத்துக் கொள்ளாது. எனவே டார்வின் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக்கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று கருதினார் . இந்த விளக்கமானது தற்செயல் பரவல் முறை என்று அழைக்கப்படுகிறது .
அதே போன்று எரிமலைத் தீவுகளில் தவளைகள் இருக்காது என்று நம்பினார்
ஏனென்றால் பொதுவாகக் கடல் பகுதியை கடக்க இயலாத விலங்கினங்கள் தீவுகளில் காணப்படுவதற்கு கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி பல நாட்கள் வாரங்கள் விலங்கினங்கள் தத்தளித்தபடி தற்செயலாக அந்த தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது.
ஆனால் தவளைகள் தோலின் மூலம் சுவாசிக்கக் கூடியது. எனவே தவளைகளின் தோல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். எனவே பல நாட்கள் கடலில் மிதக்கும் தாவரங்களின் மேல் இருந்தால் காற்றில் தவளைகளின் தோல் உலர்ந்து விடும். அது மட்டுமல்லாது தவளைகளுக்கு கடலின் உப்பு நீர் ஒத்துக் கொள்ளாது.
மெல்லிய தோலைக் கொண்டிருக்கும் தவளையின் உடலில் இருந்து நீர் எளிதில் ஆவியாகி விடும். இதனால் தவளை இறந்து விடும். இதனைத் தவிர்க்க தவளையின் உடல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்கும்.ஆனாலும் தவளை மலைக் காலத்திலேயே வெளிவரும்.அதிக வெயிலையும் காற்று வீசும் இடத்தையும் தவிர்த்து ஈரப்பாங்கான நிழல் பகுதியிலேயே வசிக்கும்.குறிப்பாக தவளை நீர் நிலைகளை விட்டு அதிக தொலைவிற்கு செல்லாது.
எனவே தான் டார்வின் செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும் தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும் டார்வின் வியப்பு அடைந்தார்.
இந்நிலையில் கரீபியன் தீவுகளில் காணப்படும் தவளைகளில் மேற்கொண்ட மரபணு சோதனையில் அந்தத் தவளைகளின் மூதாதை தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்திருப்பதை பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் கண்டு பிடித்திருக்கிறார்.ஆனால் அந்த மூதாதை எப்படி தென் அமெரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகளுக்கு வந்திருக்கும் என்பதற்கு அவர் கூறும் விளக்கம் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.
அதாவது தென் அமெரிக்காவில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு அடித்து வரப் பட்ட கடலில் மிதக்கும் தாவரங்கள் மேல் அமர்ந்து வந்த தவளைகளுக்கு அந்தத் தாவரத்திலேயே உண்பதற்குப் பூச்சிகளும்,குடிப்பதற்குத் தூய நீரும் இருந்திருக்கலாம் என்று ஹெட்ஜெஸ் கூறுகிறார்.
ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி கடல் பகுதியை கடக்க இயலாத விலங்கினங்கள் தனிமைத் தீவுகளில் காணப்படுவதற்கு தற்செயல் பரவல் முறை சரியான விளக்கம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன?
லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும். அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன. மழைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்ற விளக்கம் மண்புழுக்களை பொருந்தாது.எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்ற விளக்கத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார். சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவத்திற்கு ஒட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது. பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது. தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது. கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும். எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் அரிய வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன. உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள். எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது.
000000
இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கடல் மட்டமானது வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நீர் யானையின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் அவைகளால் நீரின் மேற்பரப்பில் நீந்த இயலாது.
குறிப்பாக அவைகளின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது.
ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று nநம்பப் படுகிறது. குறைந்த பட்சம் ஒரு கர்ப்பிணி லெமூர் குரங்காவது தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.லெமூர் குரங்குகளின் புதை படிவங்கள் மூலம் சில ஆராய்ச்சியாளர்கள் லெமூர் குரங்கினம் இரண்டு முறை தற்செயளாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அதன் அடிப்படையில் குள்ள வகை நீர் யானைகள் மூன்று முறை அல்லது குறைந்த பட்சம் இரண்டு முறை கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர் ஆகும்.கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும். அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது கடலின் சாராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில், நார்வே நாட்டுக்கு கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவர உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரல் என்று அழைக்கப் படும் பனை மாற உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் கரைந்தது துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்துடன்,டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருந்த பொழுது , கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேலும்,குறிப்பாக மலைகளின் மேலும் பாலைவனங்களிலும் பரவலாக்க கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இவ்வாறு தரையில் வாலா கூடிய டைனோசர்களின் புதை படிவங்கள் காண்டலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமாகவும் அதே போன்று கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமாகவும் கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
பவளத் திட்டுகளின் தோற்றத்திற்கு டார்வின் கூறிய ''மூழ்கும் எரிமலை'' விளக்கம் ஒரு தவறான விளக்கம் .
குறிப்பாக டார்வின் பீகிள் கப்பல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே ஒரு விஷயம் குறித்து அவர் மிகவும் யோசித்துக் கொண்டிருந்தார். அதாவது பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் பவளத் திட்டுகளால் ஆன தீவுகள் இருப்பது குறித்து ஐரோப்பிய மாலுமிகள் தெரிவித்து இருந்தனர்.
பொதுவாக பவளத் திட்டுகள் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலேயே காணப்படும்.பவளங்களுக்கு எதோ ஒரு வகையில் சூரிய ஒளி தேவைப் படுகிறது என்று புரிந்து கொள்ளப் பட்டாலும் சரியான காரணம் அறியப் படாமல் இருந்தது.
தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பவளங்கள் ஆல்கா எனப்படும் நுண் தாவரங்களை சார்ந்து வாழ்வது தெரியவந்துள்ளது. அந்த தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் சர்க்கரைச் சத்தை உற்பத்தி செய்கிறது. அதனை பவளங்கள் பயன்படுத்திக் கொள்கிறது. பதிலுக்கு பவளங்கள் அந்த தாவரங்கள் வாழ்வதற்கு தங்களின் உடலில் இடம் கொடுக்கிறது. இவ்வாறு பவளங்களும் ஆல்காக்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதால் பவளங்கள் சூரிய ஒளி புகக் கூடிய 15 முதல் 30 அடி ஆழத்திலேயே பவளங்கள் உயிர் வாழும்.
முக்கியமாக பவளங்கள் கடலில் உள்ள கால்சியம்,கார்பன் டாய் ஆக்சைட் ஆகியவற்றை கிரகித்துக் கொண்டு கால்சியம் கார்பனேட் என்று அழைக்கப் படும் கடினமான சுண்ணாம்பால் ஆன ஓட்டை சுரந்து தங்களின் மெல்லுடலை பாதுகாத்துக் கொள்கிறது. இவ்வாறு கடல் தரையில் அல்லது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பாறைகளின் மேல் வாழும் ஒரு தலைமுறை பவளங்கள் இறந்தவுடன் அவற்றின் உடலில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கடல் தரையிலோ அல்லது கடலுக்குள் இருக்கும் பாறைகளிலோ படிகின்றன. அதன் மேலே புதிய தலைமுறை பவளங்கள் வாழ்கின்றன. இவ்வாறு பல முறை நடைபெறுவதால் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்கின்றன. இவ்வாறு வளரும் பவளத் திட்டுகள் பல பத்தாண்டுகளுக்கு சில சென்டிமீட்டர் அளவுக்கு வளர்கிறது.
இந்த நிலையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்தால் கடல் மட்டம் உயரும் வேகத்திற்கு இணையாக பவள திட்டுகள் வளரவில்லை என்றால் கடலில் மூழ்கி இறந்து விடும்.
இது போன்ற விவரங்கள் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. முக்கியமாகக் கடல் மட்ட உயர்வு குறித்தும் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை.
இந்த நிலையில் டார்வின் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகில் கடலில் பயணம் செய்த பொழுது பயங்கரமான நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கண்டத்தின் கரையோரப் பகுதியில் நிலமானது பல கிலோமீட்டர் தொலைவிற்கு பல பத்து அடிகள் உயர்ந்து இருந்தது. அதில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்கள், பாசிகள், சிப்பிகள்,மற்றும் இறந்த தாவரங்கள் இருந்தன. அதன் பிறகு அப்பகுதியில் இருந்த மலையின் மேல் ஏறி டார்வின் ஆய்வு செய்தார். அப்பொழுது அந்த மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் குறிப்பாக கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் இருப்பதை கண்டார்
அதன் பிறகு டார்வின் கப்பலுக்குள் சென்று அங்கு அவர் வைத்திருந்த குறிப்பேடுகளை புத்தகங்களை படித்தார். அதில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப் பட்ட பவளத் திட்டு தீவுகள் குறித்த வரைபடங்களையும் கவனித்தார். அதன் அடிப்படையில் அவர் நிலப்பகுதிகள் உயரும் பொழுது, கடல் தரையானது சில இடங்களில் தாழ்வடைவதாகவும் நம்பினார். அதாவது கடலுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் ஒரு எரிமலை ஆனது கடல் தரையுடன் கீழே இறங்குவதாகவும், அப்பொழுது அந்த எரிமலையின் வாயைச் சுற்றிலும் ,எரிமலையின் சரிவுப் பகுதிகளிலும் பவள திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் யூகம் செய்தார்.இந்த நிலையில் எரிமலை கீழ் நோக்கி இறங்கும் பொழுது கடல் மட்ட உயர்வுக்கு ஏற்ப பவளத் திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் கருதினார்.
குறிப்பாக அவர் பசிபிக் கடல் பகுதிக்கு பயணம் செல்வதற்கு முன்பே தென்னமெரிக்கக் கண்டப் பகுதியில் கடல் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதே இந்த விளக்கத்தைத் தனது குறிப்பேட்டில் எழுதினார். அப்பொழுது அவர் பவளத் திட்டுகளை நேரில் காணாமலேயே இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் கூறப்படும் விளக்கத்தை தனது நண்பரான லயல் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் சஞ்சலம் அடைந்தார்
அதன் பிறகு டார்வின் பசிபிக் கடலில் பயணம் செய்து பல வளைய வடிவ பவளத் திட்டுத் தீவுகளைக் கண்டார். அதன் அடிப்படையில் அவர் தனது விளக்கம் சரிதான் என்று திருப்தி அடைந்தார்.
அதன் பிறகு ஐரோப்பா திரும்பியதும் டார்வின் கூறிய விளக்கத்தைக் கேட்ட டார்வின் நண்பரான லயல் டார்வினின் ''மூழ்கும் எரிமலை'' விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு இந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் வாசிக்கவும் டார்வினுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் டார்வின் வாசித்ததும் அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களும் டார்வினின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.ஆனால் எல்லா ஆராய்ச்சியாளர்களும் டார்வினின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை.
குறிப்பாக பசிபிக் கடலில் பல பவளத் திட்டுத் தீவுகள் நீள் மூட்டை வடிவிலும், விமான ஓடுதளம் போன்ற நேர்கோட்டு பாதை வடிவிலும், முக்கோண வடிவிலும் உருவாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.எனவே டார்வினின் மூழ்கும் எரிமலை விளக்கம் சரியல்ல. இந்த நிலையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கடலுக்கு அடியிலும் பல்லாயிரம் அடி ஆழத்தில் பல பவளத் திட்டு தீவுகள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது .இதன் மூலம் பவளத் திட்டுத் தீவுகள் உருவானதற்கு கடல் மட்டம் உயர்வே காரணம் என்பது தெரிய வந்துள்ளது
000000000
பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும், பவளம் என்று அழைக்கப் படும், குண்டூசித் தலை அளவு உள்ள உயிரினமானது, ஒரு பூவின் வடிவில் இருக்கும். அதன் இதழ்கள் அசையும் பொழுது, அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு, பவளங்கள் உயிர் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளும் உயிர் வாழ்கின்றன. அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக் கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும்.அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது, கடல் தரையில் படிகின்றன. அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால், கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்வதால், அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன. பசிபிக் கடலில் உள்ள பல எரிமலைகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன.சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும், அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன. இதனால் பல பவளத் திட்டுத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன. இது போன்ற மூழ்கிய பவளத் திட்டுகள், ''குயாட்டுகள்'' என்று அழைக்கப் படுகின்றன. பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). ரிசல்யூசன் குயாட், பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின் குயாட் டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது. இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது. டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. ஆலிசன் குயாட். டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்திலும் அமைந்து இருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலேதீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் உச்சியில் மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ்ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது. எனிவீடாக் குயாட். வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது. இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அதன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கேப் ஜான்சன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 அடி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஹாரிசன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்புத் திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது.. அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன. கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்புத் திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சுண்ணாம்பு படிவுகளில் மகரந்த துகள்களின் படிவுகள் காணப் பட்டது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள, பஹாமா சுண்ணாம்புத் திட்டானது, கடல் தரையில் இருந்து ''எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு'' வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டமானது, எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள். வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள, கிரேட் ஏரியை சுற்றிலும், சிலூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது. இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட, உப்புப் பாறைகள் காணப் படுகின்றன . அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்புப் படிவப் பாறைகளும் காணப் படுகின்றன. அதே போன்று, வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, குடாலூப் மலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. . அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது. ரூடிஸ்ட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் ட்ரைலோ பைட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இவ்வாறு ஆழம் குறைந்த பகுதியில் வளரக் கூடிய பவளங்கள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதுடன்,பவளத் திட்டுகள் கண்டங்களின் மேலும் பரவலாக்க காணப் படுவதன் மூலம் கண்டம் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன்மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது .
0000000000000000
மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் எப்படி உருவாகின?
மத்திய தரைக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு,ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு ராட்சத உப்புப் படிவங்கள் உருவானதற்கான காரணத்தை அறிய, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான ஒரு விளக்கத்தைக் கூற இயல வில்லை.
பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம். இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும். ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள். அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட 'காட்' மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள். இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது, ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன . இது போன்று பல முறை கண்டங்களின் மேல் கடல் நீர் வந்து சென்றதால், நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன. அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும்.
மத்திய தரைக் கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி?
இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் குழாய்களை செலுத்தி, துளையிட்ட பொழுது, மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு ராச்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது. சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.
ஒரு மீட்டர் உயரமுள்ள கடல் நீர் வற்றினால் ஒரு மில்லி மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாகும்.
அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும். ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான்.
தற்பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியில் பத்து லட்சம் கண கிலோ மீட்டர் உப்புப் படிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த அளவானது தற்பொழுது மத்திய தரைக் கடலில் இருக்கும் உப்பின் அளவை விட ஐம்பது மடங்கு அதிகம் ஆகும்.
தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர். பெரிய ஆவியாதல் விளக்கம். குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் மேற் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி மூன்று லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது அந்த ராட்சத உப்புப் படிவங்களானது ஏழு லட்சம் ஆண்டு கால கட்டத்தில் உருவாகி இருக்கின்றன. அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக் கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும். அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது.அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது. ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத வெப்ப உயர்வு நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
உண்மையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் நில மட்டமும் கடல் மட்டமும் மாறி மாறி உயர்ந்து இருப்பதுமே மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருப்பதற்கு காரணம் .
இதே போன்ற ராட்சத உப்பு படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியிலும் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பாக தென்னமெரிக்க கடற்கரை பகுதியிலும் அதேபோன்று ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியிலும் 2000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இரண்டு கிலோமீட்டர் தடிமன் உடைய ராட்சத உப்பு படிவங்கள் உருவாகிஇருக்கின்றன . இதன்மூலம் அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது .
கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்பநிலையும் அதிகமாக இருந்திருக்கிறது அதன்பிறகு கடல் மட்டம் உயர உயர கடலின் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க வளிமண்டலத்தில் குளிர்ச்சி அதிகரித்து இருக்கிறது அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. அத்துடன் கடலில் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்து இருக்கிறது. அத்துடன் கடலின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது. இதனால் உப்பு படிவங்கள் உருவாகுவதும் நின்று விட்டது. ஆனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் உப்பு படிவங்கள் மூழ்கி இருக்கின்றன.
நகரும் எரிமலைகள்.
தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பவள திட்டுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர் அதாவது ஆழமற்ற கடல் பகுதியில் உருவான எரிமலைகள் பின்னர் கடல் தரையானது ஆழமான பகுதியை நோக்கி நகர்வதாகவும் அதனால் எரிமலைகளின் உயரம் குறைவதாகவும் அதற்கு ஏற்ப எரிமலையை சுற்றி பவளங்கள் வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர் ஆனால் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டு
மத்திய தரைக் கடலுக்கு அடியில் 2300 அடி ஆழத்தில் ஒரு ஒரு கடலடித் திட்டு மூழ்கி இருக்கிறது. சைப்ரஸ் தீவிற்கு தென் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த திட்டானது எரட்டோஸ்தென்னிஸ் கடல் மலை என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இந்தத் திட்டு சுண்ணாம்பு பாறை படிவுகளால் ஆன ஒரு கடலடித் திட்டு ஆகும்.இந்த சுண்ணாம்பு பாறைத் திட்டானது கடல் தரையில் இருந்து 6600 அடி உயரம் உடையது .
குறிப்பாக மத்திய தரைக் கடலில் ராட்சத உப்பு படிவங்கள் உருவான காலத்தில் கடல் மட்டமானது 5000 அடி வரை தாழ்வாக இருந்த பொழுது எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டானது கடல் மட்டத்திற்கு மேலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .
குறிப்பாக எரட்டோஸ்தென்னிஸ் கடலடித் திட்டின் மேல் ஆழமற்ற கடல் பகுதியில் உருவான சுண்ணாம்பு படிவுகளும் கடல் உயிரிகளின் புதை படிவங்களும் காணப்படுகின்றன
இதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது அத்துடன் கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தினால் மத்திய தரை கடலில் ராட்சத உப்பு படிவங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது .
ராட்சத உப்பு படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியிலும் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பாக தென்னமெரிக்கக் கடற்கரை பகுதியிலும் அதேபோன்று ஆப்பிரிக்காவின் கடற்கரைப் பகுதியிலும் 2000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இரண்டு கிலோமீட்டர் தடிமன் உடைய ராட்சத உப்பு படிவங்கள் உருவாகிஇருக்கின்றன . இதன்மூலம் அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது .
கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் பல எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வர பட்ட மறக்க கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி பல நாட்கள் வாரங்கள் மாதங்கள் கடலில் தத்தளித்தபடி விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளுக்கு தற்செயலாக வந்திருக்கலாம் என்று தவறாந விளக்கத்தைக் கூறுவதை போன்றே தற்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது தீவுக் கண்டங்களான ஆஸ்திரேலியா அண்டார்க்டிகா போன்ற கண்டங்களில் காணப் படுவதற்கும் ஒரு தவறான விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
கண்டங்கள் நகர்ந்த கதை
கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் பல எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வர பட்ட மறக்க கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி பல நாட்கள் வாரங்கள் மாதங்கள் கடலில் தத்தளித்தபடி விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளுக்கு தற்செயலாக வந்திருக்கலாம் என்று தவறாந விளக்கத்தைக் கூறுவதை போன்றே தற்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது தீவுக் கண்டங்களான ஆஸ்திரேலியா அண்டார்க்டிகா போன்ற கண்டங்களில் காணப் படுவதற்கும் ஒரு தவறான விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
மேட்சிங் கோஸ்ட் லைனும் ஐடென்டிக்கள் பாசில்ஸ்களும் .
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு திருத்தமான உலக வரைபடம் தயாரிக்கப் பட்ட பொழுது அதில் ஒரு வினோதமான விஷயம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.
அதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்ற வடிவில் அமைந்து இருந்தது புதிராக இருந்தது.
குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு ஒர பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு ஒர பகுதிக்கு இணையான வடிவில் இருந்தது.இது மேட்சிங் கோஸ்ட் லைன் என்று அழைக்கப் படுகிறது.இந்த நிலையில் அந்த வரை படத்தை தயாரித்த ஆபிரகாம் ஆர்டெல்லியஸ் அந்தக் கண்டங்களானது இடம் பெயர்ந்து நகர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது
என்று கூறினார்.
இது குறித்த விவாதங்களானது படிப்பு படியாக பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது.
அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது.
அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும் அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள்.
குறிப்பாக டார்வின் பீகிள் கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பொழுது கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.அதன் பிறகு அந்தக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலம் பல பத்தடிகள் உயர்ந்து இருப்பதுடன் அதன் மேல் கடல் பாசிகள் தாவரங்கள் இருப்பதைக் கண்டார்.அதன் அடிப்படையில் கண்டங்கலின் பகுதிகள் உயர்ந்து இருப்பது குறித்து சிந்தித்தார். பின்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்த ஆண்டிஸ் மலையின் மேல் கடல் சிப்பிகள் புதை படிவங்களையும் கண்டார். அந்த மலையும் உயர்ந்து இருப்பது குறித்து யோசனையாக இருந்தார்.அதன் பிறகு கண்டங்களின் சில பகுதிகள் உயரும் பொழுது கடல் தரையானது தாழ்வடைவதாகவும் அதனால் எரிமலைகள் மூழ்குவதாகவும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.இவ்வாறு கடல் தளம் தாழ்வடைவதால் அதில் இருக்கும் எரிமலைகள் மூழ்குவதாகவும் அப்பொழுது அந்த எரிமலையை சுற்றிலும் பவளங்கள் வளர்வதால் பசிபிக் கடலில் வளையவடிவில் பவளத் திட்டுகள் உருவாகி இருப்பதாகவும் டார்வின் நம்பினார்.
இந்த நிலையில் 1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு டெதிஸ் என்றும் பெயரை சூட்டினார்.
அதன் பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் பாகங்களானது தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கண்டத்திற்கு இடைப் பட்ட நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.அந்தத் தென் பெருங் கண்டத்திற்கு கோண்டுவானா என்றும் பெயர் சூட்டினார்.
ஐடென்டிக்கள் பாசில்ஸ்.
இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார்.
மாறாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித் தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்களின் ஒர பகுதிகள் காட்சிதமாகப் பொருந்த வில்லை.ஆனால் முப்பது சதவீத சிறிய குளோப்பில் கண்டங்களின் ஒர பகுதிகள் நன்றாகப் பொருந்தின.அதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஹோபார்ட் முதலில் நகரும் கண்டங்கள் கருத்தை ஆதரித்து பின்னர் கண்டத் தட்டு நகர்ச்சி கருது குறித்து ஆராய்ச்சி செய்தபொழுது விரிவடையும் பூமி கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாமுவேல் வாரேன் காரி என்ற புவியியல் பேராசிரியர் முதலில் வெக்னரின் நகரும் கண்டங்கள் கொள்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.பின்னர் கண்டது தட்டு நகர்ச்சி கருத்துக்கு ஆதரவாக இருந்தார்.ஆனால் கண்டது தட்டு நகர்ச்சி கருத்தின் படி கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அளிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார்.அதன் பிறகு விரிவடையும் பூமி குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் ஏன் விரிவடைகிறது என்று அவர் தெரிவிக்க வில்லை.ஆனால் பிற்காலத்தில் ஒரு கண்டு பிடிப்பு விரிவடையும் பூமி கருத்திற்கு ஆதரவாக அமையும் என்று கூறினார்.
இந்த நிலையில் தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணர் ,நில அதிர்ச்சி அலைகள் பூமிக்குள் பரவுவதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூமியின் உட்கருக்கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர் பூமிக்குள் படிகங்கள் உருவாகுவதால் பூமியின் உட்கருக்க கோளம் விரிவடைகிறதாகவும் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இந்த விரிவானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும் இந்தோனேசியாவுக்கு அடியில் வேகமாகவும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது.
குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர்.
மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பனி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே த்ராப் அந்த வரைபடத்தை தயாரித்தார்
அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் எரிமலைத் தொடர் இருப்பதுடன் அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும் வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார்.
அதன் அடிப்படையில் மேரி த்ராப் வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால் புரூஸ் ஹீசின் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார்.
இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படதையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார்.
அந்த நில அதிர்ச்சி வரை படத்தை ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரைபடத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது.
குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம் ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது.
அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது.
இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்கள்.
தற்பொழுது அறிவியல் உலகில் ஒரு விஷயம் ஆராய்ச்சியாளர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அதாவது ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
தற்பொழுது பனிப் படலங்களால் மூடப் பட்டு இருக்கும் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.
சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
பூமியின் சுருக்கமான வ்சரலாறு.
இதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது கடலின் சாராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில், நார்வே நாட்டுக்கு கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவர உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரல் என்று அழைக்கப் படும் பனை மாற உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் கரைந்தது துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்துடன்,டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருந்த பொழுது , கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின்
வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
எரிமலை வெடிப்பே ...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் உண்மையான காரணம். அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் ஏன் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை? சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. அதே போன்று ஹைத்தி தீவானது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 26.12.2004 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது சுமத்ரா தீவுப் பகுதியில் உருவானது. அதே போன்று கடந்த 10.01.2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது ஹைத்தி தீவில் உருவானது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமான நாசா மற்றும் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான காரணத்தைக் கூற இயல வில்லை. ஏனென்றால் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அறிவியல் உலகில் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத்தின் கடல் தளமானது உரசியபடி நகர்ந்து செல்வதாகவும், அப்பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' தனித்த தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே அந்த நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாகஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருந்து, தனித் தனியாகப் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன்,இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது . எனவே, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உண்மையில் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கணடங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால் இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. ஆக, தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன? குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுக்கு அருகில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதனால் அந்தத் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரையும் உருவாகி இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் அது வரை கடலுக்குள் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன. அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவு நான்கு அடி வரை உயர்ந்ததற்கும்,சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது,தீவில் உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் 12.10,2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது சோனார் கருவி ஆய்வு மூலம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் தென் பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி முறையே வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும்,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த கருத்து உண்மை என்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அந்த எரிமலைத் தொடருக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் அந்த ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகுவதை போன்று ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே இரண்டரை லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது செயற்கைக் கோள் பட ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு ஆராய்ச்சியாளர்களால் ஏன் விளக்கம் கூற இயல வில்லை? குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக எரிமலைகள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அத்துடன் வட அட்லான்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. அதே போன்று தெற்கு அட்லான்டிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. இந்த நிலையில் கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் குறிப்பாக இந்த இரண்டு கடல் தள பகுதிக்கும் இடைப் பட்ட கடல் தள பகுதியில் அமைந்து இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் தள பகுதியில் உருவாகி இருந்தால் அந்த எரிமலைத் தீவுக்கு கூட்டமானது நேர் கொட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ கவிழ்த்துப் போட்ட 'ட ' வடிவில் உருவாகி இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் எரிமலைத் தீவுக்கு கூட்டமானது ஒழுங்கற்ற வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக காலபாகஸ் தீவுகள் இருக்கும் இடத்திலேயே உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த கருத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி இந்த நிலப் பகுதியை கடந்து கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து உயர்ந்து இருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறினார்கள். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்து இருப்பது நிரூபணம் ஆகிறது. எனவே பசிபிக் கடல் மாதிரி விளக்கம் ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கம். எனவே வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த விளக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கியதாக்க கூறப் படும் எரிமலைப் பிழம்பு எதுவும் காணப் பட வில்லை. அது மட்டுமின்றி கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து படி, கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால் , கடல் தளத்தின் மேல் வரிசையாக எரிமலைத் தீவுகள் உருவாக வேண்டும். ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது வரிசையாக உருவாகாமல் கவிழ்ந்துப் போட்ட ''ட '' வடிவில் உருவாகி இருக்கிறது.இதன் மூலமாகவும் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம்,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்து இருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரிபியன் தீவுக் கூட்டமானது தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்து இருந்திருப்பதும் அதன் வழியாக டைனோசர்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அந்த தீவில் ஏற்பட்ட சுனாமிக்கு நில அதிர்ச்சிக்கும் விளக்கம் கூற வேண்டிய இக்கட்டான நிலைமை, அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ப்பட்டு விட்டது. இந்த நிலையில்,அந்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால் பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக,அந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு, கரீபியன் தீவுக் கூட்டமானது குறிப்பாக எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது . எனவே கரீபியன் பாறைத்த தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தை பொருந்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.என்று '' மையமாக '' ஒரு விளக்கத்தைக் கூறி மிகவும் சாமர்த்தியமாக இக்கட்டில் இருந்து தப்பித்து விட்டனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் இந்த விளக்கமானது சரியான விளக்கம் அல்ல. உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று விளக்கமாகக் கூறினால் மட்டுமே அந்த விளக்கமானது சரியான விளக்கம் ஆகும். அதாவது கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாததால் USGS ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயலா வில்லை. ஆக தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயலாததைப் போலவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் , அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தைக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயல வில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
சிசிடிவி கண்காணிப்புக் காமிரா மூலம் இந்தியாவைத்த தாக்க வரும் சுனாமியை ஒரு மணி நேரம் முன்னதாகவே அறியலாம். கடந்த2004 ஆம் ஆண்டு ,இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது,இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையத் தாக்கியது. இதே போன்று நூற்றி முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு,அதாவது, கடந்த ஆம் 1883 ஆண்டு, இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது, இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையைத் தாக்கியது. கடந்த காலத்தில் இரண்டு முறை நடைபெற்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறவும் சாத்தியம் இருக்கிறது.எனவே இது போன்ற நிகழ்வு, எதிர் காலத்தில் நடை பெறும் பொழுது அதனை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிய வேண்டும் என்றால்,அதற்கு,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையில் அமைந்து இருக்கும்,கலங்கரை விளக்கத்தில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி,நேரலை செய்து இணையம் மூலம் கண்காணிக்கும் பொழுது,(குறிப்பாக சுமத்ரா தீவுக்கு அருகில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது) கிரேட் நிகோபார் தீவுக் கடற் கரையில்,சுனாமி அலைகள் வருவதைக்க கண்டு, உடனே,சுனாமி குறித்த எச்சரிக்கையை,இந்தியக் கடலோர மக்களுக்கு,ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளச் செய்வதன் மூலம்,பெரும் உயிர் மற்றும் பொருட் சேதத்தைத் தவிர்க்கலாம்.
வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானது எப்படி? வரிப் பட்டை இரும்பு படிவுகள் சுண்ணாம்பை போலவே, நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம், ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த, கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு, இன்று உலகில் பல பகுதிகளில், பல நூறு அடி உயரத்திற்கு இரும்பு படிவுகளாக காணப் படுகிறது. குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது. இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது, கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது. இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது, வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது, மூவாயிரம் அடி உயரத்துடன், மலையை போன்று உருவாகி இருக்கிறது. தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது. அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால், கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால், வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால், இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. எனது விளக்கம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு படிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது, கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது, மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது, ஆழம் அதிகமாக இருந்த கடலில் கலந்ததால், மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன. பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணைந்ததால் கடல் உருவானது. அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில், பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறிய அளவிலும், சம தளத்துடனும் இருந்தது. பூமியானது சிறிய அளவில் இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில் சூரிய ஒளி விழுந்தது.அதனால் துருவங்களில் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்தன. பூமியின் அளவு பெரிதாகியதால் துருவங்களில் விழும் சூரிய ஒளியின் அளவும் குறைந்தது.அதனாலும் துருவங்களில் பனிப் படலங்கள் உருவானது.
எப்படி உருவானது கல் மரப் பூங்கா?
காஸ்பியன் கடல் எப்படி உருவானது ? அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.என்பதும் ,கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையிலேயே காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது, அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது.அதே போன்று இன்னொரு பிரச்சினைக்கும் தீர்வு. எப்படி உருவானது கல் மரப் பூங்கா? டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன. இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன.ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படும், சதுப்பு நிலக் காடாக,ஆறுகளுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனவே சதுப்பு நிலக் காடானது, வறண்ட பாலை வனமாக மாறியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்குத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூறுகின்றனர். அதாவது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே,இருந்ததாகவும்,அதனால் ,அரிசோனா பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும்,அதன் பிறகு,வட அமெரிக்கக் கண்டமானது,வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,அரிசோனா பகுதியானது,மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அத்துடன்,காட்டாறு வெள்ளத்தால்,மரங்கள் வேருடன் பிடுங்கப் பட்டு அடித்துக் கொண்டு வரப் பட்டதாகவும்,அந்த நீரில் ,அந்தப் பகுதியில் சீறிய எரிமலைகளின் சாம்பல் இருந்ததாகவும்,அந்த சாம்பலில் இருந்த சிலிக்கன் டை ஆக்சைடு, நீரில் கரைந்த நிலையில்,மண்ணுக்குள் புதைந்து கிடந்த மரங்களுக்குள் இறங்கியதால்,காலப் போக்கில் கல் மரங்களாகி விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாகக் கல்மரப் பூங்காவானது,கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்து இருக்கிறது.அதன் அடிப்படையில்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அப்பொழுது உயர்ந்த நிலப் பகுதியானது, அதிக அளவில் அரிக்கப் பட்டதாகவும்,அதனால் கல் மரங்கள் வெளிப் பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது அரிசோனா பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,அரிசோனா பகுதியில்,மித வெப்பக் கால நிலையாக மாறி இருக்கிறது. இந்தப் பகுதியில் தற்பொழுது,குளிர் காலத்தில்,பனிப் பொழிவும் ஏற்படுகிறது.குறிப்பாகக் கல் மரப் பூங்காப் பகுதியில் அதிக அளவில்,அடுக்குப் பாறைகளால் ஆன மலைகளும் குன்றுகளும் காணப் படுகின்றன.எனவே ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட, நில அதிர்ச்சியின் காரணமாக,அந்த மரங்கள் சாய்ந்து,மண்ணில் புதையுண்ட பிறகு,மழை நீர் கரைத்த மண்ணானது, மரங்களுக்குள் இறங்கியதால்,அந்த மரங்களானது,கல் மரங்களாகக் காலப் போக்கில் மாறி இருக்கிறது.
Sunday, 6 October 2024
மத்திய தரைக் கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி?
மத்திய தரைக் கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி?
ராட்சத உப்புப் படிவப் புதிர்.
பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம். இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும். ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள். அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள்.
ஒரு லிட்டர் கடல் நீரில் மூன்றரை கிராம் உப்பு இருக்கிறது.ஒரு மீட்டர் உயர கடல் நீர் ஆவியாக்கினால் ஒரு மில்லி மீட்டர் அளவுக்கே உப்புப் படிவுகள் உருவாகும்.
இந்த நிலையில் மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு,ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் உள்ள அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும்.
கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும். ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான்.
இந்தப் புதிருக்கு விடை காண மத்திய தரைக் கடலுக்கு அடியில் அதிர்ச்சி அலைகள் செலுத்தி ஆராய்ச்சி செய்யப் பட்டது.அப்பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியிலும் ராட்சத படிவுகள் இருப்பது தெரிய வந்தது.அதன் பிறகு குழாய்களை செலுத்தி அந்த படிவுகளைத் துளையிட்டு மாதிரிகளை சேகரித்த பொழுது, மத்திய தரைக் கடலுக்கு பல லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உப்புப் படிவுகள் இருப்பது தெரிய வந்தது.அத்துடன் சில இடங்களில் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் சில இடங்களில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும் உப்புப் படிவுகள் உருவாக்கி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை.
தற்பொழுது இந்தப் புதிருக்கு ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர்.
பெரிய ஆவியாதல் விளக்கம்.
குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் மேல் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது. அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக் கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருந்திருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும் அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது .
அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும்.
அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது.
ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை என்பதால் இன்று வரை மத்திய தரைக் கடல் ராட்சத உப்புப் படிவுகள் புரிந்து கொள்ளப் படாத புதிராகவே இருக்கிறது.
முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத வெப்ப நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
தற்பொழுது கடலின் சராசரி ஆழம் நான்கு கிலோமீட்டர் ஆக இருக்கிறது பூமி தோன்றியதில் இருந்து எப்பொழுதும் இதே உயரத்தில் கடல் நீர்மட்டம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தவறாக நம்புவதால் தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு அந்த விலங்கினங்கள் ஆனது கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி பல நாட்கள் பல வாரங்கள் தத்தளித்தபடி தற்செயலாக தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது ஆனால் கடல் பகுதியை கடக்க இயலாத குள்ளவகை நீர் யானைகளின் புதை படிவங்களானது மத்திய தரைக் கடலில் அமைந்திருக்கும் கிரிட்டி ,சைப்ரஸ் ,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோமீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது கடல் மட்டமானது இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது அதன் வழியாக விலங்கினங்கள் இடம்பெயர்ந்து இருக்கின்றன .
இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உன்னி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் அதன் பிறகு பல பகுதிகளாக பிரிந்து நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தவறாக நம்பப்படுகிறது.
எப்படி இந்தக் கருத்து உருவானது ?
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு திருத்தமான உலக வரைபடம் தயாரிக்கப் பட்ட பொழுது அதில் ஒரு வினோதமான விஷயம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.
அதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்ற வடிவில் அமைந்து இருந்தது புதிராக இருந்தது.
குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு ஒர பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு ஒர பகுதிக்கு இணையான வடிவில் இருந்தது.இது மேட்சிங் கோஷ்ட் லைன் என்று அழைக்கப் படுகிறது.இந்த நிலையில் அந்த வரை படத்தை தயாரித்த ஆபிரகாம் ஆர்டெல்லியஸ் அந்தக் கண்டங்களானது இடம் பெயர்ந்து நகர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது
என்று கூறினார்.
இது குறித்த விவாதங்களானது படிப்பு படியாக பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது.
அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது.
அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும் அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள்.
குறிப்பாக டார்வின் பீகிள் கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட பொழுது தென் அமெரிக்கக் கண்டதை அடைந்த பொழுது கடும் நிலா அதிர்ச்சி ஏற்பட்டது.அதன் பிறகு அந்தக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலம் பல பத்தடிகள் உயர்ந்து இருப்பதுடன் அதன் மேல் கடல் பாசிகள் தாவரங்கள் இருப்பதைக் கண்டார்.அதன் அடிப்படையில் கண்டங்கள் உயர்ந்து இருப்பது குறித்து சிந்தித்தார் பின்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்த ஆண்டிஸ் மலையின் மேல் கடல் சிப்பிகள் புதை படிவங்களையும் கண்டார். அந்த மலையும் உயர்ந்து இருப்பது குறித்து யோசனையாக இருந்தார்.அதன் பிறகு கண்டங்களின் சில பகுதிகள் உயரும் பொழுது கடல் தரையானது தாழ்வடைவதாகவும் அதனால் எரிமலைகள் மூழ்குவதாகவும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில் 1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு டெதிஸ் என்றும் பெயரை சூட்டினார்.
அதன் பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் பாகங்களானது தென் பகுதிக்கு கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும் பின்னர் இதைப் பட்ட நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.அந்தத் தென் பெருங் கண்டத்திற்கு கோண்டுவானா என்றும் பெயர் சூட்டினார்.
இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார். மாற்றாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித்த தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது.
குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர்.
மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பனி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே த்ராப் அந்த வரைபடத்தை தயாரித்தார்
அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் எரிமலைத் தொடர் இருப்பதுடன் அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும் வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார்.
அதன் அடிப்படையில் மேரி த்ராப் வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால் புரூஸ் ஹீசின் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார்.
இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படதையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார்.
அந்த நில அதிர்ச்சி வரை படத்தை ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரைபடத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது.
குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம் ஒரு புதைக்க விளக்கம் முன்மொழியப் பட்டது.
அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் நிலா அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. அதே போன்று ஹைத்தி தீவானது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 26.12.2004 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது சுமத்ரா தீவுப் பகுதியில் உருவானது. அதே போன்று கடந்த 10.01.2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது ஹைத்தி தீவில் உருவானது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமான நாசா மற்றும் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான காரணத்தைக் கூற இயல வில்லை. ஏனென்றால் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அறிவியல் உலகில் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத்தின் கடல் தளமானது உரசியபடி நகர்ந்து செல்வதாகவும், அப்பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' தனித்த தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே அந்த நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாகஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருந்து, தனித் தனியாகப் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன்,இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது . எனவே, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உண்மையில் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கணடங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால் இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. ஆக, தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன? குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுக்கு அருகில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதனால் அந்தத் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரையும் உருவாகி இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் அது வரை கடலுக்குள் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன. அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவு நான்கு அடி வரை உயர்ந்ததற்கும்,சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது,தீவில் உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் 12.10,2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது சோனார் கருவி ஆய்வு மூலம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் தென் பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி முறையே வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும்,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த கருத்து உண்மை என்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அந்த எரிமலைத் தொடருக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் அந்த ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகுவதை போன்று ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே இரண்டரை லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது செயற்கைக் கோள் பட ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு ஆராய்ச்சியாளர்களால் ஏன் விளக்கம் கூற இயல வில்லை? குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக எரிமலைகள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அத்துடன் வட அட்லான்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. அதே போன்று தெற்கு அட்லான்டிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. இந்த நிலையில் கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் குறிப்பாக இந்த இரண்டு கடல் தள பகுதிக்கும் இடைப் பட்ட கடல் தள பகுதியில் அமைந்து இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் தள பகுதியில் உருவாகி இருந்தால் அந்த எரிமலைத் தீவுக்கு கூட்டமானது நேர் கொட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ கவிழ்த்துப் போட்ட 'ட ' வடிவில் உருவாகி இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் எரிமலைத் தீவுக்கு கூட்டமானது ஒழுங்கற்ற வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக காலபாகஸ் தீவுகள் இருக்கும் இடத்திலேயே உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த கருத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி இந்த நிலப் பகுதியை கடந்து கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து உயர்ந்து இருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறினார்கள். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்து இருப்பது நிரூபணம் ஆகிறது. எனவே பசிபிக் கடல் மாதிரி விளக்கம் ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கம். எனவே வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த விளக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கியதாக்க கூறப் படும் எரிமலைப் பிழம்பு எதுவும் காணப் பட வில்லை. அது மட்டுமின்றி கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து படி, கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால் , கடல் தளத்தின் மேல் வரிசையாக எரிமலைத் தீவுகள் உருவாக வேண்டும். ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது வரிசையாக உருவாகாமல் கவிழ்ந்துப் போட்ட ''ட '' வடிவில் உருவாகி இருக்கிறது.இதன் மூலமாகவும் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம்,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்து இருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரிபியன் தீவுக் கூட்டமானது தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்து இருந்திருப்பதும் அதன் வழியாக டைனோசர்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அந்த தீவில் ஏற்பட்ட சுனாமிக்கு நில அதிர்ச்சிக்கும் விளக்கம் கூற வேண்டிய இக்கட்டான நிலைமை, அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ப்பட்டு விட்டது. இந்த நிலையில்,அந்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால் பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக,அந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு, கரீபியன் தீவுக் கூட்டமானது குறிப்பாக எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது . எனவே கரீபியன் பாறைத்த தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தை பொருந்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.என்று '' மையமாக '' ஒரு விளக்கத்தைக் கூறி மிகவும் சாமர்த்தியமாக இக்கட்டில் இருந்து தப்பித்து விட்டனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் இந்த விளக்கமானது சரியான விளக்கம் அல்ல. உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று விளக்கமாகக் கூறினால் மட்டுமே அந்த விளக்கமானது சரியான விளக்கம் ஆகும். அதாவது கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாததால் USGS ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயலா வில்லை. ஆக தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயலாததைப் போலவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் , அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தைக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயல வில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
இதே போன்று கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும் ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
தற்பொழுது பனிப் படலங்களால் மூடப் பட்டு இருக்கும் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.
சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
ஆர்க்டிக் டைனோசர் புதை படிவப் புதிருக்கு விடை
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தாவர உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.அதே போன்று மரங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளிலேயே அதிக வெப்பம் நிலவி இருப்பதன் மூலம் பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிக மாக இருந்திருப்பதுடன், கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்து இருப்பதும், அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்து இருப்பதுடன், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்து இருப்பதும் அதனால்,துருவங்களில் பனிப்படலங்கள் உருவாகி, பசுமைக் காடுகள் அழிந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன் மூலம் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின்
வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுடன் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
மத்திய தரைக் கடல் ராட்சத உப்புப் படிவங்கள் எப்படி உருவாகின?
உண்மையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் நில மட்டமும் கடல் மட்டமும் மாறி மாறி உயர்ந்து இருப்பதுமே மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருப்பதற்கு காரணம் .
இதே போன்ற ராட்சத உப்பு படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியிலும் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பாக தென்னமெரிக்க கடற்கரை பகுதியிலும் அதேபோன்று ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியிலும் 2000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இரண்டு கிலோமீட்டர் தடிமன் உடைய ராட்சத உப்பு படிவங்கள் உருவாகிஇருக்கின்றன . இதன்மூலம் அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது .
கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்பநிலையும் அதிகமாக இருந்திருக்கிறது அதன்பிறகு கடல் மட்டம் உயர உயர கடலின் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க வளிமண்டலத்தில் குளிர்ச்சி அதிகரித்து இருக்கிறது அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. அத்துடன் கடலில் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்து இருக்கிறது. அத்துடன் கடலின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது. இதனால் உப்பு படிவங்கள் உருவாகுவதும் நின்று விட்டது. ஆனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் உப்பு படிவங்கள் மூழ்கி இருக்கின்றன.
தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பவள திட்டுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டதட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர் அதாவது ஆழமற்ற கடல் பகுதியில் உருவான எரிமலைகள் பின்னர் கடல் தரையானது ஆழமான பகுதியை நோக்கி நகர்வதாகவும் அதனால் எரிமலைகளின் உயரம் குறைவதாகவும் அதற்கு ஏற்ப எரிமலையை சுற்றி பவளங்கள் வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர் ஆனால் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டு
மத்திய தரைக் கடலுக்கு அடியில் 2300 அடி ஆழத்தில் ஒரு ஒரு கடலடி திட்டு மூழ்கி இருக்கிறது பாஸ் சைப்ரஸ் தீவிற்கு தென் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த திட்டானது எரட்டோஸ்தென்னிஸ் கடல் மலை என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இந்தத் திட்டு சுண்ணாம்பு பாறை படிவுகளால் ஆன ஒரு கடலடித் திட்டு ஆகும்.இந்த சுண்ணாம்பு பாறைத் திட்டானது கடல் தரையில் இருந்து 6600 அடி உயரம் உடையது .
குறிப்பாக மத்திய தரை கடலில் ராட்சத உப்பு படிவங்கள் உருவான காலத்தில் கடல் மட்டமானது 5000 அடி வரை தாழ்வாக இருந்த பொழுது எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டானது கடல் மட்டத்திற்கு மேலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .
குறிப்பாக எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டின் மேல் ஆழமற்ற கடல் பகுதியில் உருவான சுண்ணாம்பு படிவுகளும் கடல் உயிரிகளின் புதை படிவங்களும் காணப்படுகின்றன
இதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது அத்துடன் கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தினால் மத்திய தரை கடலில் ராட்சத உப்பு படிவங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது .
ராட்சத உப்பு படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியிலும் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பாக தென்னமெரிக்க கடற்கரை பகுதியிலும் அதேபோன்று ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியிலும் 2000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இரண்டு கிலோமீட்டர் தடிமன் உடைய ராட்சத உப்பு படிவங்கள் உருவாகிஇருக்கின்றன . இதன்மூலம் அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது .
முக்கியமாக கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பாட்டுக்கு இருப்பதன் மூலம் கண்டங்கள் எல்லா ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானது எப்படி? வரிப் பட்டை இரும்பு படிவுகள் சுண்ணாம்பை போலவே, நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம், ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த, கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு, இன்று உலகில் பல பகுதிகளில், பல நூறு அடி உயரத்திற்கு இரும்பு படிவுகளாக காணப் படுகிறது. குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது. இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது, கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது. இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது, வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது, மூவாயிரம் அடி உயரத்துடன், மலையை போன்று உருவாகி இருக்கிறது. தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது. அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால், கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால், வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால், இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. எனது விளக்கம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு படிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது, கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது, மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது, ஆழம் அதிகமாக இருந்த கடலில் கலந்ததால், மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன. பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணைந்ததால் கடல் உருவானது. அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில், பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறிய அளவிலும், சம தளத்துடனும் இருந்தது. பூமியானது சிறிய அளவில் இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில் சூரிய ஒளி விழுந்தது.அதனால் துருவங்களில் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்தன. பூமியின் அளவு பெரிதாகியதால் துருவங்களில் விழும் சூரிய ஒளியின் அளவும் குறைந்தது.அதனாலும் துருவங்களில் பனிப் படலங்கள் உருவானது. ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மெல்லுடலிகளின் புதை படிவங்கள் முதன் முதலில் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள எடியாக்காரா மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே வகை உயிரினங்களின் புதை படிவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்தப் புதை படிவங்கள் எல்லாம் எடியாக்காரா புதை படிவங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. எடியாக்காரா காலத்தில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவான இனவகை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. அதன் அடிப்படையில் நான், கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து, கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன். அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில், டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாகவும் விளக்கம் கூறினேன். ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்களின் மேல் உருவான ,இரும்புப் படிவுகளுக்கு பனிப் பந்து பூமி விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதல் பனிப் பந்து பூமி முதலில் எடியாக்காரா காலத்தில்தான் மெல்லுடலிகள் கடினமான ஓடுகளைச் சுரந்து உடலைப் பாதுகாத்தால் அதன் புதை படிவங்கள் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனாலும் பூமியில் உயிரினங்கள் முன்னூறு கோடி ஆண்டிகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எடியாக்காரா காலத்திற்கு முன்பு, அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் கிலோ மீட்டர் உயரத்திற்கு, பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது. இந்தக் கால பூமியானது பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது. பனிப் பந்து பூமி பல முறை ஏற்பட்டு இருக்கிறது?! வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் 250 கோடி முதல் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் படிய வைக்கப் பட்ட படிவுகள் காணப் படுவதற்கும் அந்த காலத்தில் பூமியெங்கும் பனிப் படிவுகளால் மூடப் பட்டு இருந்ததாகவும் பின்னர் உருகி பனியாறுகள் நகர்ந்தாள் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது திடீரென்று உயர்ந்து கண்டங்களின் மேலே வந்து சென்ற பொழுது ஆழமற்ற கடலால் படியவைக்கப் பட்டதாகவும் நம்பப் படுகிறது. அதாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதாக நம்புகின்றனர். அதனால்தான் கண்டங்களின் மேல் காணப் படும் படிவுகளுக்கு, கடல் நீர் கண்டங்களின் மேல் வந்ததற்கு, பனிப் பந்து பூமி கற்பனை விளக்கத்தைக் கூறுகின்றனர். உண்மையில் கண்டங்களும் கடல் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.அப்பொழுது கடல் மட்டம் உயரும் பொழுது, கண்டங்களின் மேலே கடல் வருகிறது. அப்பொழுது கடல் உயிரினங்களால் படிவுகள் உருவாகுகின்றன. அதன் பிறகு கண்டங்கள் உயரும் பொழுது, படிவுகள் இறுகிப் படிவுப் பாறைகளாக உருவாக்குகின்றன. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்வதால், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.இவ்வாறு பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதால், பூமியின் மேற்பரப்பானது உயர்கிறது. அதே போன்று பிளவு பட்டுப் பிரிந்து விரிவடைகிறது.அதனால் கிராண்ட் கன்யன் போன்ற பிளவுப் பள்ளத் தாக்குகள் உருவாகுகின்றன. சுண்ணாம்பு மலை உருவானது எப்படி குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் பகுதியிலும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் எரடோஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப் படும் ஒரு ''சுண்ணாம்பு மலை'' உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சுண்ணாம்பானது ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த நண்டு, நத்தை, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உயிரினங்கள் இறந்த பிறகு, அதன் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள், கடல் தரையில் படித்ததால் உருவான மலை ஆகும்.இதன் மூலம் மத்திய தரைக் கடலானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
எப்படி உருவானது கல் மரப் பூங்கா?
காஸ்பியன் கடல் எப்படி உருவானது ? அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.என்பதும் ,கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையிலேயே காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது, அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது.அதே போன்று இன்னொரு பிரச்சினைக்கும் தீர்வு. எப்படி உருவானது கல் மரப் பூங்கா? டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன. இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன.ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படும், சதுப்பு நிலக் காடாக,ஆறுகளுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனவே சதுப்பு நிலக் காடானது, வறண்ட பாலை வனமாக மாறியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்குத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூறுகின்றனர். அதாவது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே,இருந்ததாகவும்,அதனால் ,அரிசோனா பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும்,அதன் பிறகு,வட அமெரிக்கக் கண்டமானது,வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,அரிசோனா பகுதியானது,மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அத்துடன்,காட்டாறு வெள்ளத்தால்,மரங்கள் வேருடன் பிடுங்கப் பட்டு அடித்துக் கொண்டு வரப் பட்டதாகவும்,அந்த நீரில் ,அந்தப் பகுதியில் சீறிய எரிமலைகளின் சாம்பல் இருந்ததாகவும்,அந்த சாம்பலில் இருந்த சிலிக்கன் டை ஆக்சைடு, நீரில் கரைந்த நிலையில்,மண்ணுக்குள் புதைந்து கிடந்த மரங்களுக்குள் இறங்கியதால்,காலப் போக்கில் கல் மரங்களாகி விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாகக் கல்மரப் பூங்காவானது,கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்து இருக்கிறது.அதன் அடிப்படையில்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அப்பொழுது உயர்ந்த நிலப் பகுதியானது, அதிக அளவில் அரிக்கப் பட்டதாகவும்,அதனால் கல் மரங்கள் வெளிப் பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது அரிசோனா பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,அரிசோனா பகுதியில்,மித வெப்பக் கால நிலையாக மாறி இருக்கிறது. இந்தப் பகுதியில் தற்பொழுது,குளிர் காலத்தில்,பனிப் பொழிவும் ஏற்படுகிறது.குறிப்பாகக் கல் மரப் பூங்காப் பகுதியில் அதிக அளவில்,அடுக்குப் பாறைகளால் ஆன மலைகளும் குன்றுகளும் காணப் படுகின்றன.எனவே ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட, நில அதிர்ச்சியின் காரணமாக,அந்த மரங்கள் சாய்ந்து,மண்ணில் புதையுண்ட பிறகு,மழை நீர் கரைத்த மண்ணானது, மரங்களுக்குள் இறங்கியதால்,அந்த மரங்களானது,கல் மரங்களாகக் காலப் போக்கில் மாறி இருக்கிறது.
பூமி விரிவடைந்ததால் தீவுகள் பிரிந்து இருக்கின்றன.அதனால் அந்தத் தீவில் வாழ்ந்த விலங்கினங்களும் பிரிந்து புதிய இனவகைகளாக உருவாக்கி இருக்கின்றன.
பூமி விரிவடைந்ததால் கண்டங்களுக்கு இடையில் இடைவெளிகள் அதிகரித்ததை போலவே பூமி விரிவடைந்ததால் சில தீவுகளும் பிரிந்து இருக்கிறது.
உதாரணமாக கரீபியன் தீவுகளான கியூபா,ஹிஸ்பானொலியா ,போர்டோ ரிக்கோ மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது பூமி விரிவாடைந்ததால் அந்தத் தீவுகளுக்கு இடையில் இடைவெளி அதிகரித்து இருக்கிறது அதனால் அந்தத் தீவில் வாழ்ந்த விலங்கினங்களும் பிரிந்து விலகிய தீவுகளுடன் சென்று புதிய இனவகைகளாக உருவாக்கி இருக்கின்றன.
அதே போன்று பிலிப்பைன்ஸ் தீவுகளில் காணப் படும் எறும்புத் திண்ணிகளின் இனவாகிகளும் வகைகளும் கூட பூமியின் விரிவால் பிரிந்த பிலிப்பைன்ஸ் தீவுகளின் பிரிவுக்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.
இதே போன்று பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் இந்தோனேசிய தீவுக்கு கூட்டங்களும் பூமி விரிவடைந்ததால் பிரிந்த தீவுகள் ஆகும்.
விஞ்ஞானி.க.பொன்முடி.
Subscribe to:
Posts (Atom)