Sunday 29 September 2024

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய தவறான விளக்கம் . ஐரோப்பியர்கள் பசிபிக் பெருங்கடலில் கடலில் பயணம் செய்து பல புதிய தீவுகளை கண்டுபிடித்து தங்கள் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடிய பொழுது, பல தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதுகுறித்து ஐரோப்பாவிற்கு திரும்ப வந்து கூறியதும் மக்கள் அதனை நம்ப மறுத்தனர். அதேபோன்று பசிபிக் பெருங்கடலில் பல ஆராய்ச்சியாளர்கள் பயணம் செய்து அங்கிருந்த தீவுகளில் இருந்த தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி தெரிவித்த விஷயங்களைக் குறித்து ஐரோப்பியர்கள் குழப்பமான ஆச்சரியத்தை அடைந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியவில் கங்காரு பற்றி கூறியதைக் கேட்ட மக்கள் அதனை நம்ப மறுத்தனர். அதே போன்று பிளாட்டிபஸ் என்ற விலங்கினத்தை பற்றி கூறியதையும் நம்ப மறுத்தனர். தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தவறான விளக்கம். இந்த நிலையில் 1835 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டத்தில் தரையில் வாழக்கூடிய ராட்சத ஆமைகள் மற்றும் இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள் இருப்பதைக் கண்டு எப்படி இந்த விலங்குகள் ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியை கடந்து இந்த தனிமை தீவிற்கு வந்திருக்க முடியும் என்று வியப்பு அடைந்தார். அதேபோன்று தீவுகளில் தரையில் வாழும் நத்தைகள் இருப்பதைக் கண்டும் வியந்தார். அப்பொழுது அவர் நத்தைகள் பறவைகளின் கால்களில் ஒட்டிக்கொண்டு தீவுகளுக்கு வந்தடைந்திருக்கலாம் என்று கருதினார் . இந்த விளக்கமானது ''தற்செயல் பரவல் முறை'' என்று அழைக்கப்படுகிறது . அதேபோன்று எரிமலை தீவுகளில் தவளைகள் இருக்காது என்று டார்வின் நம்பினார் ஆனால் அவரது நம்பிக்கைக்கு மாறாக செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும், தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும், டார்வின் வியப்பு அடைந்தார். ஏனென்றால் பொதுவாகக் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் தீவுகளில் காணப்படுவதற்கு கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி பல நாட்கள் அல்லது பல வாரங்கள் விலங்கினங்கள் தத்தளித்தபடி தற்செயலாக அந்த தீவுகளுக்கு வந்தடைந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் தவளைகள் தோலின் மூலம் சுவாசிக்கக் கூடியது. எனவே தவளைகளின் தோல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். எனவே பல நாட்கள் கடலில் மிதக்கும் தாவரங்களின் மேல் இருந்தால் காற்றில் தவளைகளின் தோல் உலர்ந்து விடும். அது மட்டுமல்லாது தவளைகளுக்கு கடலின் உப்பு நீரும் ஒத்துக் கொள்ளாது. எனவேதான் டார்வின் தகித்தி தீவில் தவளைகள் இருப்பதைக் கண்டு வியப்பு அடைந்தார் . மெல்லிய தோலைக் கொண்டிருக்கும் தவளையின் உடலில் இருந்து நீர் எளிதில் ஆவியாகி விடும். இதனால் தவளைகள் இறந்து விடும். இதனைத் தவிர்க்க தவளையின் உடல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்கும்.ஆனாலும் தவளை மலைக் காலத்திலேயே வெளிவரும்.அதிக வெயிலையும் காற்று வீசும் இடத்தையும் தவிர்த்து ஈரப்பாங்கான நிழல் பகுதியிலேயே வசிக்கும்.குறிப்பாக தவளை நீர் நிலைகளை விட்டு அதிக தொலைவிற்கு செல்லாது. இந்த நிலையில் கரீபியன் தீவுகளில் காணப்படும் தவளைகளில் மேற்கொண்ட மரபணு சோதனையில் அந்தத் தவளைகளின் மூதாதையானது தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்திருப்பதை பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் கண்டு பிடித்திருக்கிறார்.ஆனால் அந்த மூதாதை எப்படி தென் அமெரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகளுக்கு வந்திருக்கும் என்பதற்கு அவர் கூறும் விளக்கம் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அதாவது தென் அமெரிக்காவில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு அடித்து வரப் பட்ட கடலில் மிதக்கும் தாவரங்கள் மேல் அமர்ந்து வந்த தவளைகளுக்கு அந்தத் தாவரபி படுக்கையிலே உண்பதற்குப் பூச்சிகளும்,குடிப்பதற்குத் தூய நீரும் இருந்திருக்கலாம் என்று ஹெட்ஜெஸ் கூறுகிறார். ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் தனிமைத் தீவுகளில் காணப்படுவதற்கு தற்செயல் பரவல் முறை சரியான விளக்கம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது 00000000 எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன? லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும். அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன. மழைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்ற விளக்கம் மண்புழுக்களை பொருந்தாது.எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்ற விளக்கத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார். சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவத்திற்கு ஒட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது. பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது. தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது. கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும். எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார். இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் அரிய வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன. உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள். எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது. 000000 இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கடல் மட்டமானது வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. நீர் யானையின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் அவைகளால் நீரின் மேற்பரப்பில் நீந்த இயலாது. குறிப்பாக அவைகளின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது. ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று nநம்பப் படுகிறது. குறைந்த பட்சம் ஒரு கர்ப்பிணி லெமூர் குரங்காவது தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.லெமூர் குரங்குகளின் புதை படிவங்கள் மூலம் சில ஆராய்ச்சியாளர்கள் லெமூர் குரங்கினம் இரண்டு முறை தற்செயளாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் நம்புகின்றனர். ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில் குள்ள வகை நீர் யானைகள் மூன்று முறை அல்லது குறைந்த பட்சம் இரண்டு முறை கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவ்வாறு மடகாஞ்ச்கர் தீவுக்கு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர் ஆகும்.கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும். அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது இருப்பது தெரிய வந்துள்ளது. பவளத் திட்டுகளின் தோற்றத்திற்கு டார்வின் கூறிய ''மூழ்கும் எரிமலை'' விளக்கம் ஒரு தவறான விளக்கம் . குறிப்பாக டார்வின் பீகிள் கப்பல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே ஒரு விஷயம் குறித்து அவர் மிகவும் யோசித்துக் கொண்டிருந்தார் அதாவது பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் பவளத் திட்டுகளால் ஆன தீவுகள் இருப்பது குறித்து ஐரோப்பிய மாலுமிகள் தெரிவித்து இருந்தனர் பொதுவாக பவளத் திட்டுகள் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலேயே காணப்படும். ஆனால் டார்வின் காலத்தில் அதற்கான காரணம் அறியப்படவில்லை. தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பவளங்கள் ஆல்கா எனப்படும் நுண் தாவரங்களை சார்ந்து வாழ்வது தெரியவந்துள்ளது. அந்த தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் சர்க்கரைச் சத்தை உற்பத்தி செய்கிறது. அதனை பவளங்கள் பயன்படுத்திக் கொள்கிறது. பதிலுக்கு பவளங்கள் அந்த தாவரங்கள் வாழ்வதற்கு தங்களின் உடலில் இடம் கொடுக்கிறது. இவ்வாறு பவளங்களும் ஆல்காக்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதால் பவளங்கள் சூரிய ஒளி புகக் கூடிய 15 முதல் 30 அடி ஆழத்திலேயே பவளங்கள் உயிர் வாழும். முக்கியமாக பவளங்கள் கடலில் உள்ள கால்சியம்,கார்பன் டாய் ஆக்சைட் ஆகியவற்றை கிரகித்துக் கொண்டு கால்சியம் கார்பனேட் என்று அழைக்கப் படும் கடினமான சுண்ணாம்பால் ஆன ஓட்டை சுரந்து தங்களின் மெல்லுடலை பாதுகாத்துக் கொள்கிறது. இவ்வாறு கடல் தரையில் அல்லது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பாறைகளின் மேல் வாழும் ஒரு தலைமுறை பவளங்கள் இறந்தவுடன் அவற்றின் உடலில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கடல் தரையிலோ அல்லது கடலுக்குள் இருக்கும் பாறைகளிலோ படிகின்றன. அதன் மேலே புதிய தலைமுறை பவளங்கள் வாழ்கின்றன. இவ்வாறு பல முறை நடைபெறுவதால் பவள திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்கின்றன. இவ்வாறு வளரும் பவளத் திட்டுகள் பல பத்தாண்டுகளுக்கு சில சென்டிமீட்டர் அளவுக்கு வளர்கிறது. இந்த நிலையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்தால் கடல் மட்டம் உயரும் வேகத்திற்கு இணையாக பவள திட்டுகள் வளரவில்லை என்றால் கடலில் மூழ்கி இறந்து விடும். இது போன்ற விவரங்கள் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. முக்கியமாகக் கடல் மட்ட உயர்வு குறித்தும் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. இந்த நிலையில் டார்வின் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகில் கடலில் பயணம் செய்த பொழுது பயங்கரமான நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கண்டத்தின் கரையோரப் பகுதியில் நிலமானது பல கிலோமீட்டர் தொலைவிற்கு பல பத்து அடிகள் உயர்ந்து இருந்தது. அதில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்கள், பாசிகள், சிப்பிகள்,மற்றும் இறந்த தாவரங்கள் இருந்தன. அதன் பிறகு அப்பகுதியில் இருந்த மலையின் மேல் ஏறி டார்வின் ஆய்வு செய்தார். அப்பொழுது அந்த மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் குறிப்பாக கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் இருப்பதை கண்டார் அதன் பிறகு டார்வின் கப்பலுக்குள் சென்று அங்கு அவர் வைத்திருந்த குறிப்பேடுகளை புத்தகங்களை படித்தார். அதில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப் பட்ட பவளத் திட்டு தீவுகள் குறித்த வரைபடங்களையும் கவனித்தார். அதன் அடிப்படையில் அவர் நிலப்பகுதிகள் உயரும் பொழுது, கடல் தரையானது சில இடங்களில் தாழ்வடைவதாகவும் நம்பினார். அதாவது கடலுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் ஒரு எரிமலை ஆனது கடல் தரையுடன் கீழே இறங்குவதாகவும், அப்பொழுது அந்த எரிமலையின் வாயைச் சுற்றிலும் ,எரிமலையின் சரிவுப் பகுதிகளிலும் பவள திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் யூகம் செய்தார்.இந்த நிலையில் எரிமலை கீழ் நோக்கி இறங்கும் பொழுது கடல் மட்ட உயர்வுக்கு ஏற்ப பவளத் திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் கருதினார். குறிப்பாக அவர் பசிபிக் கடல் பகுதிக்கு பயணம் செல்வதற்கு முன்பே தென்னமெரிக்கக் கண்டப் பகுதியில் கடல் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதே இந்த விளக்கத்தைத் தனது குறிப்பேட்டில் எழுதினார். அப்பொழுது அவர் பவளத் திட்டுகளை நேரில் காணாமலேயே இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் கூறப்படும் விளக்கத்தை தனது நண்பரான லயல் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் சஞ்சலம் அடைந்தார் அதன் பிறகு டார்வின் பசிபிக் கடலில் பயணம் செய்து பல வளைய வடிவ பவளத் திட்டுத் தீவுகளைக் கண்டார். அதன் அடிப்படையில் அவர் தனது விளக்கம் சரிதான் என்று திருப்தி அடைந்தார். அதன் பிறகு ஐரோப்பா திரும்பியதும் டார்வின் கூறிய விளக்கத்தைக் கேட்ட டார்வின் நண்பரான லயல் டார்வினின் ''மூழ்கும் எரிமலை'' விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு இந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் வாசிக்கவும் டார்வினுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் டார்வின் வாசித்ததும் அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களும் டார்வினின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர் . ஆனால் பசிபிக் கடலில் பல பவளத் திட்டுத் தீவுகள் நீள் மூட்டை வடிவிலும், விமான ஓடுதளம் போன்ற நேர்கோட்டு பாதை வடிவிலும், முக்கோண வடிவிலும் உருவாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.எனவே டார்வினின் மூழ்கும் எரிமலை விளக்கம் சரியல்ல. இந்த நிலையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கடலுக்கு அடியிலும் பல்லாயிரம் அடி ஆழத்தில் பல பவளத் திட்டு தீவுகள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது .இதன் மூலம் பவளத் திட்டுத் தீவுகள் உருவானதற்கு கடல் மட்டம் உயர்வே காரணம் என்பது தெரிய வந்துள்ளது 000000000 பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும், பவளம் என்று அழைக்கப் படும், குண்டூசித் தலை அளவு உள்ள உயிரினமானது, ஒரு பூவின் வடிவில் இருக்கும். அதன் இதழ்கள் அசையும் பொழுது, அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு, பவளங்கள் உயிர் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளும் உயிர் வாழ்கின்றன. அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக் கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும்.அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது, கடல் தரையில் படிகின்றன. அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால், கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்வதால், அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன. பசிபிக் கடலில் உள்ள பல எரிமலைகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன.சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும், அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன. இதனால் பல பவளத் திட்டுத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன. இது போன்ற மூழ்கிய பவளத் திட்டுகள், ''குயாட்டுகள்'' என்று அழைக்கப் படுகின்றன. பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). ரிசல்யூசன் குயாட், பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின் குயாட் டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது. இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது. டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. ஆலிசன் குயாட். டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்திலும் அமைந்து இருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலேதீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் உச்சியில் மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ்ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது. எனிவீடாக் குயாட். வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது. இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அ தன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கேப் ஜான்சன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 அடி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஹாரிசன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்புத் திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது.. அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன. கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்புத் திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சுண்ணாம்பு படிவுகளில் மகரந்த துகள் களின் படிவுகள் காணப் பட்டது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள, பஹாமா சுண்ணாம்புத் திட்டானது, கடல் தரையில் இருந்து ''எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு'' வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டமானது, எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள். வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள, கிரேட் ஏரியை சுற்றிலும், சிலூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது. இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட, உப்புப் பாறைகள் காணப் படுகின்றன . அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்புப் படிவப் பாறைகளும் காணப் படுகின்றன. அதே போன்று, வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, குடாலூப் மலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. . அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது. ரூடிஸ்ட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் ட்ரைலோ பைட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு ஆழம் குறைந்த பகுதியில் வளரக் கூடிய பவளங்கள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதுடன்,பவளத் திட்டுகள் கண்டங்களின் மேலும் பரவலாக்க காணப் படுவதன் மூலம் கண்டம் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன்மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது . 0000000000000000 மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் எப்படி உருவாகின? மத்திய தரைக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு,ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு ராட்சத உப்புப் படிவங்கள் உருவானதற்கான காரணத்தை அறிய, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான ஒரு விளக்கத்தைக் கூற இயல வில்லை. பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம். இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும். ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள். அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட 'காட்' மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள். இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது, ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன . இது போன்று பல முறை கண்டங்களின் மேல் கடல் நீர் வந்து சென்றதால், நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன. அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும். மத்திய தரைக் கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி? இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் குழாய்களை செலுத்தி, துளையிட்ட பொழுது, மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு ராச்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது. சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும். ஒரு மீட்டர் உயரமுள்ள கடல் நீர் வற்றினால் ஒரு மில்லி மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாகும். அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும். ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான். தற்பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியில் பத்து லட்சம் கண கிலோ மீட்டர் உப்புப் படிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த அளவானது தற்பொழுது மத்திய தரைக் கடலில் இருக்கும் உப்பின் அளவை விட ஐம்பது மடங்கு அதிகம் ஆகும். தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர். பெரிய ஆவியாதல் விளக்கம். குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் மேற் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி மூன்று லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது அந்த ராட்சத உப்புப் படிவங்களானது ஏழு லட்சம் ஆண்டு கால கட்டத்தில் உருவாகி இருக்கின்றன. அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக் கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும். அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது.அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது. ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத வெப்ப உயர்வு நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. உண்மையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் நில மட்டமும் கடல் மட்டமும் மாறி மாறி உயர்ந்து இருப்பதுமே மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருப்பதற்கு காரணம் . கடல் மட்டமானது பல்லாயிரம் ஆதி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்பநிலையும் அதிகமாக இருந்திருக்கிறது அதன்பிறகு கடல் மட்டம் உயர உயர கடலின் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க வளிமண்டலத்தில் குளிர்ச்சி அதிகரித்து இருக்கிறது அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. அத்துடன் கடலில் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்து இருக்கிறது. அத்துடன் கடலின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது. இதனால் உப்பு படிவங்கள் உருவாகுவதும் நின்று விட்டது. ஆனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் உப்பு படிவங்கள் மூழ்கி இருக்கின்றன. தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பவள திட்டுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டதட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர் அதாவது ஆழமற்ற கடல் பகுதியில் உருவான எரிமலைகள் பின்னர் கடல் தரையானது ஆழமான பகுதியை நோக்கி நகர்வதாகவும் அதனால் எரிமலைகளின் உயரம் குறைவதாகவும் அதற்கு ஏற்ப எரிமலையை சுற்றி பவளங்கள் வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர் ஆனால் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டு மத்திய தரைக் கடலுக்கு அடியில் 2300 அடி ஆழத்தில் ஒரு ஒரு கடலடி திட்டு மூழ்கி இருக்கிறது பாஸ் சைப்ரஸ் தீவிற்கு தென் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த திட்டானது எரட்டோஸ்தென்னிஸ் கடல் மலை என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இந்தத் திட்டு சுண்ணாம்பு பாறை படிவுகளால் ஆன ஒரு கடலடித் திட்டு ஆகும்.இந்த சுண்ணாம்பு பாறைத் திட்டானது கடல் தரையில் இருந்து 6600 அடி உயரம் உடையது . குறிப்பாக மத்திய தரை கடலில் ராட்சத உப்பு படிவங்கள் உருவான காலத்தில் கடல் மட்டமானது 5000 அடி வரை தாழ்வாக இருந்த பொழுது எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டானது கடல் மட்டத்திற்கு மேலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர் . குறிப்பாக எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டின் மேல் ஆழமற்ற கடல் பகுதியில் உருவான சுண்ணாம்பு படிவுகளும் கடல் உயிரிகளின் புதை படிவங்களும் காணப்படுகின்றன இதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது அத்துடன் கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தினால் மத்திய தரை கடலில் ராட்சத உப்பு படிவங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது . விஞ்ஞானி.க.பொன்முடி.

No comments:

Post a Comment