Wednesday, 6 September 2023
எனது ஐந்து கண்டு பிடிப்புகள்.விஞ்ஞானி.க.பொன்முடி.
ஐந்து முக்கிய புவியியல் நிகழ்வுகளுக்கு விடை கண்டு பிடித்து இருக்கிறேன்.
ஒன்று.
சுமத்ரா ,ஹைத்தி ,மற்றும் ஹோன்சூ தீவுகளில் சுனாமி களை உருவாக்கிய நில .அதிர்ச்சி களுக்கான காரணம்.
இரண்டு.
துருவப் பகுதிகளில் காணப் படும் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களுக்கான காரணம்.
மூன்று.
மத்திய தரைக் கடலுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவானதற்கு காரணம்.
நான்கு.
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு மற்றும் இரும்புப் படிவங்கள் கண்டங்களின் மேல் காணப் பாடுவதற்கான காரணம்.
ஐந்து
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதற்கான காரணம்.
00000000
ஒன்று.
சுமத்ரா ,ஹைத்தி ,மற்றும் ஹோன்சூ தீவுகளில் சுனாமி களை உருவாக்கிய நில .அதிர்ச்சி களுக்கான காரணம்.
0000000
தெற்காசிய சுனாமிக்கு காரணம் கண்டு பிடிப்பு.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் ஏன் உறுதி படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த ஆய்வுக்கு கட்டுரையின் நோக்கம்.
கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 01.10.2005 அன்று முதலில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது என்று டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். (The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together)
ஆனால் ,அதே நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பில் தெற்காசிய சுனாமியானது ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…)என்று முன்னுக்குப் பின் முரணாக இரண்டு உறுதி படுத்தப் படாத விளக்கங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும் கண்டத் தட்டு கொள்கையின் படி
கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் பெரிய பாறைத் தட்டுகளாக ( டெக்டானிக் பிளேட்ஸ் ) நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஒரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத் தட்டுக்கு அடியில் மற்றோரு கண்டத்தின் ஒரப் பகுதியானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்வதால் நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி அலைகள் உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
மேலும் இந்தக் கருத்தின் படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
அப்படி என்றால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.
அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இந்த நிலையில் அதே நாசா அமைப்பினர் கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை குறிப்பதாகக் கூறி ஒரு வரை படத்தையும் வெளியிட்டனர்.
அந்த வரை படத்திலும் கூட இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் நாசா ஆராய்ச்சியாளர்கள் தெற்காசிய சுனாமிக்கு முன்னுக்குப் பின் முரணாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் உறுதி படுத்தப் படாத இரண்டு விளக்கங்களை தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே கண்டத் தட்டுகள் நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருக்கிறது என்று அடிப்படை ஆதாரம் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் விளக்கம் தெரிவித்து இருக்கின்றார்கள்.
எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன?
குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம் சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே தெற்காசிய சுனாமிக்கும் காரணம் என்பது உறுதியாகிறது.
இவ்வாறு நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை தற்செயலானது என்று கருத இயலாது.
ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் 26.12.2004 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் உறுதி படுத்தப் பட்ட விளக்கத்தை கூற இயலாததை போலவே , வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் கூட கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் உறுதி படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை கூற இயல வில்லை.
இந்த நிலையில், அதே ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை கூறியது போன்றே, அமெரிக்க புவியியல் வல்லுநர்கள், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் முன்னுக்கு பின் முரணாக மூன்று விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ஏன் புவியியல் வல்லுநர்களால் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தைக் கூற இயல வில்லை ?
குறிப்பாக ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், வட அமெரிக்கக் கண்டத் தட்டு மற்றும் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் பாறைத் தட்டும் நகர்ந்ததால் இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலே காரணம் என்று விளக்கம் கூறும் புவியியல் வல்லுநர்களுக்கு உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது என்ற முக்கியமான கேள்விக்கு விடை தெரியாத நிலையில் மூன்று விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இதன் படி வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கியும் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கருத்து உண்மை வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உரசல் காரணமாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட '' உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகளும் பதிவாகி இருக்க வில்லை.
இதனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் எல்லையை வரையறை செய்ய முடிய வில்லை.எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது ''வரையறை செய்யாத எல்லை பகுதி'' என்றும் அழைக்கப் படுகிறது.
எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ஏன் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படவில்லை என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் மத்திய கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு வெளிவந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தள பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை ராண்டல் ரைட் என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில் பூமியானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன் கடல் தளமானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
மேலும் இந்தக் கருத்தின் படி வட அமரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கியும் அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கியும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கும் புவியியல் வல்லுநர்களுக்கு பதில் தெரிய வில்லை.
குறிப்பாக கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பெரிய இடை வெளி இருந்ததாகவும், அப்பொழுது பசிபிக் கடல் பகுதியில் குறிப்பாக தற்பொழுது காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில் எரிமலை செயல் பாட்டால் கரீபியன் தீவுக் கூட்ட மானது உருவான பிறகு ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு கருத்து முன் மொழியப் பட்டு இருக்கிறது.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது,
குறிப்பாக தற்பொழுது இரண்டு அமெரிக்கக் கண்டங்களையும் பாலம் போன்று இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது.
எனவே இந்த நிலப் பகுதியைக் கடந்து கரீபியன் பாறைத் தட்டு எப்படி பசிபிக் கடல் பகுதியில் இருந்து தற்பொழுது இருக்கும் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உருவாகி இருக்க வில்லை என்றும் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் பாறைத் தட்டு நுழைந்த பிறகு மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருக்கலாம் என்றும் புவியியல் வல்லுனர்கள் யூகித்தனர்.
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர்.
அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்பு புதை படிவங்களை தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும் கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும் அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன் அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்தானது நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
முக்கியமாக கியூபா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ,கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்த நீரால் உருவானது என்பதும் நிரூபணம் ஆகிறது.மேலும் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் தெளிவாகிறது.
இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் எரிமலை செயல் பாட்டால் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம் என்றும் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.இந்த விளக்கமானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய எரிமலைப் பிழம்பானது மறுபடியும் பூமிக்குள் மூழ்கி இருக்கலாம் என்று அந்த புவியியல் வல்லுநர்கள் யூகித்தனர்.
ஆனால் கரீபியன் தீவுகளில் உள்ள எரிமலைகளில் இன்றும் கூட எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது அட்லாண்டிக் கடல் மாதிரிக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.
இது போன்ற குழப்பங்களால் இன்னும் சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் மூன்றாவதாக ஒரு புதிய விளக்கத்தையும் முன் மொழிந்து இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்தது தற்பொழுது எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றே தெரியாத நிலையில்தான் அதாவது நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே கரிபியன் பாறைத் தட்டும் வட அமெரிக்கக் கண்டத் தட்டும் நகர்ந்தால், இந்த இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுநர்கள் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் உறுதி படுத்தப் படாத விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபண மாகியுள்ளது.
ரேடான் வாயு கசிவு - கூடுதல் ஆதாரம்
நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலை செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது
குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாற்றுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் லா அகுலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் இருந்து , ரேடான் என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு கசிந்து இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலை''களில் இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது 08.03.2011 அன்று வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருந்தது வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது குறித்து விளக்கம் தெரிவித்த நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும் ரேடான் வாயுவானது கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும் இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால் வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படங்கள் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
மேலும் கடந்த 06.02 2023 அன்று துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் கூட துருக்கியில் உள்ள எரிமலை வரிசைக்கு இணையாகவே ஏற்பட்டு இருக்கிறது. எனவே
பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை செயல்பாடுகள் காரணமாகவே துருக்கி நில அதிர்ச்சிகள்
ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது .
முதலில் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்ற முடிவுக்கு புவியியல் வல்லுநர்கள் எப்படி வந்தனர் என்ற கேள்வி எழுகிறது.
முதல் முதலில் இந்தக் கருத்தை வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று வெக்னர் விளக்கம் கூறினார்.
அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.
அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் புடைத்துக் கொண்டு உயர்ந்ததாக வெக்னர் கூறினார்.
ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.
இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள் முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்கள் பிளவு பட்டு பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால் இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் வெக்னர் கூறிய படி கடல் தரையை பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை.
எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று புவியியலாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது.
அப்பொழுது கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
ஆனால் அதன் அடிப்படையில் டாக்டர் ஹாரி ஹெஸ் என்பவர் வெக்னரின் விளக்கத்தை சிறிது மாற்றி அமைந்தார். அதாவது,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளிவந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது.
டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால் வெக்னரின் நகரும் கண்டங்கள் கருத்துக்கு அடிப்படை ஆதாரம் இல்லாததை போலவே டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை என்பது ,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதன் அடிப்படையில், ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதுடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதன் மூலம் நில அதிர்ச்சிகளுக்கு எரிமலை செயல்பாடே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
அது மட்டுமின்றி கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பது அந்தக் கண்டங்களானது புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் அந்தக் கண்டத்தை சுற்றி உள்ள தரை பகுதியும் சிறிது உயர்ந்ததால் புவித் தரையில் விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டதுடன் அதன் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வெளிவந்து எரிமலைகளாக உருவாகி இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
இதன் காரணமாகவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்திலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே போன்று கண்டங்களின் மேலும் கடல் தளத்தின் மேலும் ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது
குறிப்பாக கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக தற்பொழுது நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும், உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம்,கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் திசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தை சேர்ந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில், அருகருகே உருவாகி இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,பசிபிக் கடல் தளமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த கருது உண்மையென்றால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும், லைன் எரிமலைத் தொடரும் , ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி ,உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு, பசிபிக் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது இந்திய பெருங் கடல் பகுதியில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ''நாஸ்கல்'' என்ற கிராமத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை இந்திய தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். ஏற்கனவே இந்த விலங்கின் இன வகைகளின் புதை படிவங்களானது வட பகுதிக் கண்டங்களில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி,அவர்கள் ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறது என்றும் நேட்ச்சர் அறிவியல் பத்திரிக்கையில்,தெரிவித்து இருக்கிறார்.
அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதன் மூலம் இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
00000
இரண்டு.
துருவப் பகுதிகளில் காணப் படும் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களுக்கான காரணம்.
000000
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,புவியியலாளர்களால் நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் விளக்கம் கூற இயலாத நிலையில் ,ஆர்க்டிக் பகுதியில் ''ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு'' வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,தொல் விலங்கியல் வல்லுநர்களால் ,விளக்கம் கூற இயல வில்லை.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, வட அமெரிக்காவின் வட பகுதியான ''அலாஸ்கா'' மற்றும் ஆசியாவின் வட பகுதியான ''சைபீரியா'' பகுதிகளானது கடந்த ''பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே'' கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு நகர்ந்து வந்து விட்டது.
இந்த நிலையில் அலாஸ்கா மற்றும் சைபீரியா பகுதிகளில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர் கூட்டம் மற்றும் அந்த டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன வளர்ந்தன என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ அதனை பாது காக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.
சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் கால் பந்தை விட பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை .
ரன்வே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி புரிந்தன என்ற கேள்வியும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள்.
சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் டைனோசர் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக்கு காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இணப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் என்பது டிகிரி வெப்ப நிலையில் நீர் கூட உறைந்து பணிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில் டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? நீருக்கு தாவரங்கள் என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தீவுகளிலும் தீவுக் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு என்ன?அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களுக்கு காரணம் என்ன?
இந்த நிலையில்,நார்வே நாட்டு கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையை துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து மடிந்த பனை மர உயரமுள்ள ,''பிளேட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ''கெர்கூலியன்'' என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீட பூமி எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, அந்த பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதன் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனரான டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர்.
அத்துடன்,அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது என்றும் டாக்டர் மைக்கேல் காபின் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.
ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.
அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன.
தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் பனிப் படலங்கள் உருவாகின.
இதன் மூலம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால் கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுடன் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தின் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் ஆகும்.
'' பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.கண்டங்கள் நகர வில்லை வளர்கின்றன.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது ''
கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும் கடல் தரையின் உருவாகக் கூடிய தலையனைப் பாறைகள் மற்றும் பாம்புப் பாறைகள் காணப் படுவதுடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் டைனோசர் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமியின் அளவானது அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மத்திய தரைக்கு கடலில் அமையானது இருக்கும் மால்டா தீவானது இறந்து போன கடல் உயிரினங்களின் உடலில் இருந்த சுண்ணாம்புப் பொருளானது கடல் தரையின் மேல் படிந்ததால் உருவான பாறை அடுக்குகளால் ஆனது.இதன் மூலம் கடல் தரையும் மேல் நோக்கி உயர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் கண்டங்களின் ஒர பகுதிகளானது ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பதன் மூலம் கண்டங்களுடன் கடல் தளமும் விரிவடைந்ததால் தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதிகள் பிளவு பட்டு பிரிந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.ஆக மொத்தம் பூமியின் அளவானது அதிகரித்து இருப்பதும் நிரூபணமாகிறது.
ஆனால் தற்பொழுது புவியியல் வல்லுநர்கள் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாக நம்புகின்றனர்.
குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால் முடிவாக அந்தக் கடல் தளத்துக்கு என்ன நேர்கிறது என்ற கேள்வி எழுந்தது.
அதே போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தக் கேள்விக்கு புவியியல் வல்லுநர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர்.
அதாவது ஒரு இடத்தில் புதிய கடல் தளம் உருவாகுவதை போலவே இன்னொரு பகுதியில் அந்தக் கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அழிகிறது. அதனால் பூமியின் அளவானது அதிகரிக்காமல் இருக்கிறது என்று புவியியல் வல்லுநர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
அத்துடன் பூமிக்குள் செல்லும் கடல் தளமானது வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொன்டு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகளாக உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்கள் தென் துருவப் பகுதியில் இருந்து அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி தீவுக் கண்டங்களாக நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்புகின்றனர்.இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும் அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்ததற்கு அண்டார்க்டிக்காக் கண்டத்திற்கு அடியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததே காரணம் என்றும் நம்பப் படுகிறது.
இவ்வாறு இந்திய நிலப் பகுதியானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து ஆசியாக் கண்டத்தின் தென் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதியதால் இமய மலை புடைத்துக் கொண்டு உயர்ந்தது என்று கூறப் படுகிறது.அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு வடக்கு பகுதியில் முன்பு இருந்த கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் சென்று அழிந்த பிறகு மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தை பொத்துக் கொண்டு எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்றும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர் .
இவ்வாறு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களுக்கு வடக்கில் இருந்த கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து செல்வதால்தான் அந்தப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்திற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இருப்பினும் தற்பொழுது அண்டார்க்டிக்காக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
அப்படி என்றல் அண்டார்க்டிக்காக் கண்டமானது எந்தத் திசையை நோக்கியும் நகர இயலாது.அதே போன்று அண்டார்க்டிகாக் கண்டத்தை சுற்றிலும் கடல் தரையில் அகழிகளும் இல்லை.அதே போன்று அண்டார்க்டிகாக் கண்டத்தை சுற்றிலும் எரிமலைகளும் இல்லை.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது. அப்படி என்றால் ஆப்பிரிக்கக் கண்டமும் எந்தத் திசையை நோக்கியும் நகர இயலாது.அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடல் தரையில் அகழிகளும் இல்லை.அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் எரிமலைகளும் இல்லை.
ஆனால் இந்த இரண்டு கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொன்மை குறைந்த பாறைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு உலக அளவிலான வரை படத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.இதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாகிறது.
பசிபிக் நெருப்பு வளையம் -
குறிப்பாக பசிபிக் கடலை சுற்றிலும் கடல் தரையில் அகழிகள் என்று அழைக்கப் படும் பிளவுகள் இருக்கின்றன.அத்துடன் பசிபிக் கடலை சுற்றிலும் எரிமலைகளும் அதிக அளவில் இருப்பதுடன் அந்தப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன இந்த எரிமலை வளையப் பகுதியானது நெருப்பு வளையம் என்றும் அழைக்கப் படுகிறது.
இதன் அடிப்படையில் புவியியல் வல்லுநர்கள் ,அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிதாக கடல் தளம் உருவாகி விலகி நகரும் அதே வேளையில் பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் கடல் தளமானது பசிபிக் கடலை சுற்றிலும் அமைந்து இருக்கும் கண்டங்களின் ஒரப் பகுதிகளுக்கு அருகில் மறுபடியும் பூமிக்குள் சென்று அழிகிறது.அவ்வாறு அழிந்த பிறகு பாறைக் குழம்பாக மாறி மேல் நோக்கி உயர்ந்து மறுபடியும் கடல் தளத்தை பொத்துக் கொண்டு கடல் தளத்துக்கு மேலாக எரிமலைகளாக உருவாகின்றன.
அதனால்தான் பூமியின் அளவானது அதிகரிக்காமல் இருக்கிறது என்று புவியியல் வல்லுநர்கள் தவறான விளக்கம் கூறுகின்றனர்.அத்துடன் பசிபிக் கடலை சுற்றிலும் கடல் தளமானது பூமிக்குள் உரசியபடி செல்வதால்தான் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்று புவியியல் வல்லுநர்கள் தவறான விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் உண்மை என்றால் பசிபிக் பெருங் கடலை சுற்றிலும் தொடர்ச்சியாக அகழிகள் மற்றும் எரிமலைகள் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் உண்மையில் பசிபிக் பெருங் கடலை சுற்றிலும் அகழிகள் மற்றும் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருக்க வில்லை.இதன் மூலம் பசிபிக் கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் அடியில் நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் அதன் பிறகு கடல் தரை அழிந்து பாறைக் குழம்பாக உருவாகி மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொண்டு கடல் தளத்தின் மேலும் கண்டங்களை மேலும் எரிமலைகளாக உருவாகுவதாக கூறப் படும் விளக்கம் தவறு என்பதுடன், நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளும் கடல் தளமானது கண்டங்களுக்கு அடியில் செல்வதால்தான் ஏற்படுகிறது என்ற விளக்கமும் தவறு என்பதும் தெளிவாகிறது.
கடல் தரையில் அகழிகள் எப்படி உருவாகுகின்றன?
உண்மையில் கண்டங்களும் தீவுகளும் கடல் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் கடல் தரையில் ஏற்பட்ட பள்ளங்களே அகழிகளாக உருவாகி இருக்கின்றன.
அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகுகிறதா? பூகோள ரீதியில் சாத்தியமற்ற விளக்கம்.
அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதைப் போலவே, அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றியும், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம்,தென் துருவப் பகுதியில் இருந்து, வட பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அண்டார்க்டிக்காக் கண்டமானது தென் துருவப் பகுதியில் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் அமைந்து இருக்கிறது.
எனவே அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தளத்தால், எப்படி அதிக சுற்று வட்டப் பகுதியான , வட பகுதியை நோக்கி நகர்ந்து, அதிக சுற்று வட்டப் பகுதியை நிரப்ப இயலும்? என்ற கேள்வி எழுகிறது.
பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை என்பதே இந்தக் கேள்விக்கு பதில் ஆகும்.
அதே போன்று அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும், பெரிய சுற்று வட்டப் பகுதியில், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகிக் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் அமைந்து இருக்கும், அண்டார்க்டிக்காக் கண்டத்தை நோக்கிக் கடல் தளம் நகர்ந்தால், பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி உடைந்து விடும்.
எனவே அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி, நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம், பூகோள ரீதியில் சாத்தியம் இல்லாத விளக்கம் ஆகும்.
குறிப்பாகப் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் பூமியின் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றி ஒன்றுடன் ஒன்று இணைந்து, கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டமாக இருந்தது என்று நம்பப் படுகிறது.
அதன் பிறகு அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றி பிளவுகள் உருவாகி,அந்தப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடமேற்கு திசையை நோக்கியும், வட கிழக்கு திசையை நோக்கியும் விலகி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன் தென் அமெரிக்காகண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும்,அதே போன்று வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன் ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு அண்டார்க்டிகாக் கண்டத்தை சுற்றிலும் வட கிழக்கு மற்றும் வட கிழக்கு என இரு வேறு திசைகளை நோக்கி கடல் தளம் உருவாகி விலகி நகரவும் சாத்தியம் இல்லை.
ஆனால், தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள பன்டா ஏரினா வுக்கும், ஆப்பிரிக்காவின் தென் முனைப் பகுதியான கேப் டவுனும், 7024 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
அதே போன்று கேப் டவுனும், ஆஸ்திரேலியாவின் தென்பகுதித் தீவான டாஸ்மேனியாவும், 10,122 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
அதே போன்று டாஸ்மேனியாவும், தென் அமெரிக்காவின் பன்டா ஏரினாவும், 8916 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
இந்த மூன்று இடங்களுக்கு இடையேயான, தூரத்த்தின் கூட்டுத் தொகையானது, 20,066 கிலோமீட்டர்.
அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனைப் பகுதியில் இருந்து கிழக்கு திசையை நோக்கி புறப்பட்டு பூமியை வலம் வந்து மறுபடியும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனைப் பகுதியை அடைய வேண்டும் என்றால்,அதற்கு 20,066 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால்,அண்டார்க்டிக் கண்டமானது அறுபத்தி ஆறரை அட்ச ரேகைப் பகுதியில்,குறிப்பாக அண்டார்க்டிக் வளையத்திற்குள் அமைந்து இருக்கிறது.இந்த அட்ச ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவானது, 17,662 கிலோ மீட்டர்.
எனவே 17,662 கிலோ மீட்டர் சுற்றளவில் உருவான புதிய கடல் தளத்தால், எப்படி வடபகுதியை நோக்கி நகர்ந்து, 20,066 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை நிரப்பியது? என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயம் பூமியின் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவான கடல் தளத்தால், அதிக சுற்றுவட்டப் பகுதியில் இருக்கும் நிலப் பகுதியை நிரப்ப இயலாது.
எனவே பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்கள் யாவும், தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், அதன் பின்னர், தென் பகுதியில் உருவான கடல் தளத்தின் மேல் இருந்தபடி, வடபகுதியை நோக்கி நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக கூறப் படும், விளக்கமானது பூகோள ரீதியில் முற்றிலும் தவறு என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமும் பூகோள ரீதியில் சாத்தியமற்ற விளக்கம் ஆகும்.
முக்கியமாக பூமியின் தென் துருவப் பகுதியில் குறைந்த வட்டப் பகுதியில் அமையானது இருக்கும் அண்டார்க்டிக்காக் கண்டத்தை சுற்றிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகரும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும் அதே நேரத்தில், அண்டார்க்டிக்காக் கண்டத்தை சுற்றிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி நகரும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி என இரு வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.
அதே போன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கூட இரு வேறு திசைகளை நோக்கி கடல் தளங்களுடன் தனித்த தனியாக விலகி நகர்ந்து கொண்டு இருக்கவும் பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.
குறிப்பாக பூமியானது நில நடுக் கோட்டுப் பகுதியில் சற்று புடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் அதன் தென் பகுதியானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் அந்த கண்டமானது ஒரு தனிப் பாறைத் தட்டாக உடைந்து சிதறாமல் நில நடுக்க கோட்டுப் பகுதியை கடந்து வர சாத்தியம் இல்லை என்பதை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் அரேபியப் பீட பூமிப் பகுதிக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் இடையில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.இந்த விளக்கம் முற்றிலும் முரணான விளக்கம் ஆகும்.குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஏற்கனவே கூறப் பட்ட விளக்கத்திற்கு முற்றிலும் முரணான விளக்கம் ஆகும்.
உண்மையில் அரேபிய பீட பூமியின் பகுதியின் ஒர பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒர பகுதிக்கும் ஆசியாவின் ஈரான் நிலப் பகுதியின் ஒர பகுதிக்கும் இணையாக இருப்பதன் மூலம் முன் ஒரு காலத்தில் அரேபிய நிலப் பகுதியானது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களின் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன் நிலப் பகுதியானது உயர்ந்ததால் இன்னும் சொல்லப் போனால் பூமியானது விரிவடைந்ததால் தனியாகப் பிரிந்து இருப்பதும் புலனாகிறது.
அதாவது கடல் தளத்துடன் உயர்ந்து இருப்பதும் பிளவு பட்டு பிரிந்து இருப்பதும் தெளிவாக வெளிப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கண்டங்களின் ஒர பகுதியானது ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதற்கு பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்று நிரூபணமாகிறது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதாலும் விரிவடைந்து கொண்டு இருப்பதாலும் வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டு அதனால் பாஜா கலிபோர்னியா தீப கர்ப்பம் உருவாகி இருக்கிறது.
அத்துடன் வட அமெரிக்கக் கண்டத்தின் உயர்வால் கலிபோர்னியா பகுதியில் சான் ஆண்டிரஸ் பகுதியில் நிலத்தில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளவு ஏற்பட்டு இருக்கிறது.
இதே போன்று கலிபோர்னியா மாகாணத்திலும் பல இடங்களில் நில முறிவுகள் ஏற்பட்டு இருப்பதுடன் அந்தப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது.குறிப்பாக கலிபோர்னியா மாகாணமானது ''உலகின் நில அதிர்ச்சி தலை நகரம்'' என்றும் அழைக்கப் படுவது குறிப்பித் தக்கது .
இதே போன்று வட அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கு,தென் இந்தியாவில் உள்ள டெக்கான் ட்ராப்ஸ் என்று அழைக்கப் படும் தக்காணப் பீட பூமி அடுக்குப் பாறைப் பள்ளத் தாக்கு உள்பட மற்ற கண்டங்களில் காணப் படும் பிளவுப் பள்ளத் தாக்குகள் எல்லாம் அந்தக் கண்டங்கள் உயர்ந்ததால் பிளவு பட்டு உருவானவைகள் ஆகும்.அதே போன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப் படும் பிளவுப் பள்ளத் தாக்கும் அந்த கண்டம் உயர்ந்ததால் பிளவு பட்டு உருவானது.
இந்த நிலையில் கலிபோர்னியா பல்கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணரான டேனியல் புரோஸ்ட் பூமியின் மையக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு பூமியின் மையக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாலேயே கண்டங்கள் உயர்ந்து கொண்டு இருப்பதுடன் ஒன்றில் இருந்து ஒன்று பிளவு பட்டு விலகி நகர்ந்து இருப்பதும் தெளிவாகிறது.
இதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெளிவாகிறது.
தற்பொழுது கடல் மட்டம் உயந்து கொண்டு இருப்பதற்கு தவறான காரணம் கூறப் படுகிறது.
எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.
ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர். அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை.அத்துடன் வரலாற்றுக்கு காலத்திலேயே கடல் மட்டமானது இருப்பது அடி வரை உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
ஆனால், தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறான கருத்து நிலவுகிறது.
குறிப்பாக வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது. இந்த நிலப் பகுதியானது ''பெர்மா புரோஸ்ட்'' என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள், மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு ''எகிப்து மம்மிகளைப் போன்று'' காணப் படுகின்றன.
அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது. குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர்.
''உறைபனி நிலத்தில் கண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள்''
சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிமண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது.
ரஸ்யாவின் ''உகுதியா'' பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் ''டி என் ஏ'' குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது.
சைபீரியாவில் 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக் குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி வயிற்றில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக கனடா பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மாமத் என்று அழைக்கப் படும் பனி யானை இனம் ஏன் அழிந்தது என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக, ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர்.
அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள ''பூக்கும் தாவரங்கள்'' இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் ''சத்து குறைந்த புற்கள்'' மட்டுமே எஞ்சியதாகவும், அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்களின் இருப்பிடத்தை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்கு மூழ்கிய மரங்கள் இருக்கும் கடலடிக் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
கார்பன் காலக் கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப் பட்டது.
இதே போன்று ஐரோப்பாவில் ''நார் போல்க்'' நகரத்தில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர்.
குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மற்றும் மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் ''டோகர் லேன்ட்'' என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது.
அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கற்கால கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது ''பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு'' முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு அடி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ''ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது'' ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
மாறாக பூமிக்குள் சுரக்கும் நீரானது புவியப் பரப்புக்கு மேலே தொடர்ந்து வருவதால்,கடல் மட்டம் உயர்வதால் கடலின் பரப்பளவு அதிகரிப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்து அதன் காரணமாக குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் இருந்த காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்து இருப்பதும் தெளிவாகிறது.
காஸ்பியன் கடல் எப்படி உருவானது ?
ஈரானுக்கு வட பகுதியில் உள்ள, உள் நாட்டுக் கடலான, காஸ்பியன் கடல் உருவானதற்கும், புவியியல் வல்லுனர்கள் கண்டது தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும், அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில் 'டெதிஸ்' என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது, இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே, காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் உண்மை என்றால் காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது மற்ற பெருங் கடலில் உள்ளதை போலவே இருக்க வேண்டும்.
ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது, பெருங் கடலில் இருப்பதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும், காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை.
காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது, ஆவியாகி இருக்கிறது.
குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது.எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல், காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது, மற்ற கடல் நீரைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.
எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது, மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம், காஸ்பியன் கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது.அத்துடன் காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்டங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால், இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியாகக் காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம்.
லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.
ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.
குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது .
இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது
இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும்.
அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம்
பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கண்டங்கள் மற்றும் தீவுகளின் பரவலாகக் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மூலம் கடந்த காலத்தில் பூமியானது ஒரு நீர்க் கிரகமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது பூமியின் துருவப் பகுதிகளில் கூட வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கடந்த காலத்தில் பூமியின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்து இருப்பதும் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் வாழ்ந்த தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
0000
மூன்று.
மத்திய தரைக் கடலுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவானதற்கு காரணம்.
0000000
தற்பொழுது அறிவியல் உலகில் விடுவிக்கப் பபடாத நிலையில் இருக்கும் ''மத்திய தரைக் கடலடி ராட்சத உப்புப் படிவ பிரச்சினை'' மற்றும் '''பசிபிக் கடலடி ராச்சத சுண்ணாம்புத் திட்டுப் படிவப் புதிர்களுக்கு'' விளக்கம் கூறுகிறேன்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்து, அந்த உப்புப் படிவங்கள் எப்படி உருவாகி இருக்க முடியும் என்ற புதிரை விடுவிக்க, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.
ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம்.
இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும்.
ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள்.
அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைந்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள்.
இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன .
இது போன்று பல முறை நிகழ்ந்ததால் நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன.
அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும்.
இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராச்சத குழாய்களை செலுத்தி கடல் தரையை துளையிட்ட பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது.
சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை.
கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும்.ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான்.
தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர்.
பெரிய ஆவியாதல் விளக்கம்
குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது.
மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் மேல் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது.
குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது.
அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக்கு கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும் அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது .அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது.
ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று பல முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு பல முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கதைக் கூற இயல வில்லை.
முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும் பல முறை முழுவதும் ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையம் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும்.
அப்படி ஒரு அதீத நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
மத்திய தரைக் கடல் மற்றும் காஸ்பியன் கடல் உருவானது எப்படி?
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது. அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் அதை சூழ்ந்து பாந்தலாசா என்ற ஆழமற்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியா கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்நம்பப் படுகிறது.இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில் டெதிஸ் என்ற கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு லாரேசியாக் கண்டமும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்க கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும், யுரேசியாக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்ததாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று,கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையில் நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாக நம்பப் படுகிறது. அதே போன்று கோண்டுவானாவில் இருந்து பிரிந்த ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையில் நகர்ந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் டெதிஸ் கடல் மூடப் பட்டதாவும் நம்பப் படுகிறது.இவ்வாறான கண்டங்களின் நகர்ச்சியால் ஐரோப்பா,ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களுக்கு இடையில் சிராய்ப்பு பட்ட டெதிஸ் கடலே மத்திய தரைக் கடலாக உருவானதாகவும் நம்பப் படுகிறது.இதே போன்றுதான் நிலப் பகுதியால் சூழப் பட்ட காஸ்ப்பியன் கடலும் உருவானதாகவும் நம்பப் படுகிறது.இந்த விளக்கம் உண்மை என்றால் காஸ்பியன் கடலில் இருக்கும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும்.
ஆனால் காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது மற்ற கடலில் காணப் படும் உப்பை விட மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலில் காணப் படும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதைக் காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது.
ஆப்பிரிக்கக் கண்டமானது ஐரோப்பா கண்டத்த்தை நெருக்கியதால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக நம்பப் படுகிறது. அதனாலேயே ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதாக விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் அண்டார்க்டிகாவில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது.
எனது விளக்கம்
டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கிறது என்று புதை படிவ ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் கூறி இருந்தேன்.
அதன் அடிப்படையில் கடலானது பூமிக்குள் இருந்து மேற்பரப்பிற்கு சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிவந்த நீரால் உருவானது என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அதே போன்று கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதையும் ஆதாரபூர்வமாக விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்து இருக்கிறது.அப்பொழுது அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.மறுபடியும் கடல் மட்டம் உயர்ந்ததால் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. மறுபடியும் கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.இது போன்று பல முறை கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்ததால் மத்திய தரைக் கடல் தரையின் மேல் ஒன்றரை அடி உயரத்திற்கும் மூன்று அடி உயரத்திற்கும் ராட்சத உப்புப் படிவங்கள் உருவானது.
இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்ததால் உப்பு படியும் வேகமும் குறைந்தது அதனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து ஏற்கனவே படிந்த உப்புப் படிவமானது கடலில் மூழ்கியது.
முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பதை போலவே அட்லான்டிக் கடலுக்கு அடியிலும் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது மத்திய தரைக் கடலைப் போலவே அட்லான்டிக் கடலின் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.
குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் பகுதியிலும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் எரடோஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப் படும் சுண்ணாம்பு மலை உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இந்த சுண்ணாம்பானது ஆழமற்ற கடல் பகுதியில் வாந்தி நண்டு நத்தை சிப்பி கிளிஞ்சாப் போன்ற கடல் உயிரினங்கள் இறந்த பிறகு அதன் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள் கடல் தரையில் படித்ததால் உருவான மலை ஆகும்.இதன் மூலம் மத்திய தரைக் கடலானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
நான்கு.
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு மற்றும் இரும்புப் படிவங்கள் கண்டங்களின் மேல் காணப் பாடுவதற்கான காரணம்.
00000
ஐந்து
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதற்கான காரணம்.
000000
பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). விக்கி பீடியாவில் உள்ள விபரங்கள்
ரிசல்யூசன் குயாட்
பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டுஉள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின் குயாட்
டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது.
டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
ஆலிசன் குயாட்.
டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் அமைந்து இருக்கிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலே.தீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் மேல் உள்ள
ரிசல்யூசன் குயாட்
பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு.அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டுஉள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின் குயாட்
டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் கடல் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது.
டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
ஆலிசன் குயாட்.
டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் அமைந்து இருக்கிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலே. மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ் ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது.
லோ என் குயாட்.
உயரம் கடல் தரையில் இருந்து 14900 ஆதி.உட்சிப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி ஆழத்தில் உள்ளது.
துளையிட்டு ஆய்வு செய்த பொழுது ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உருவாக்கப் பட்ட உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
எனிவீடாக் குயாட்.
வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது.இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அ தன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கேப் ஜான்சன் குயாட்..
கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 ஆதி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஹாரிசன் குயாட்..
கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்பு திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது..
அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன.
கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்பு திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த சுண்ணாம்பு படி வுகளில் மகரந்த துகள் களின் படிவுகள் காணப் பட்டது.
இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுகே கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் களளதை சேர்ந்த டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கு சுண்ணாம்பு பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள பஹாமா சுண்ணாம்பு திட்டானது கடல் தரையில் இருந்து எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து இருக்கிறது இதன் மூலம் கடல் பட்டமானது எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள்
வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள கிரேட் ஏரியை சுற்றிலும் சில்லூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட உப்புப் பாறைகள் காணப் படுகின்றன .
அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன் ஆழமற்ற கடல் பகுதியில் உருவான சுண்ணாம்பு பாறைகளும் காணப் படுகின்றன.
அதே போன்று வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள குடாலூப் பாமாலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியிவாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டும் காணப் படுகிறது.
.அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது.
இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பனியால் மூடப் பட்டு இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஏனென்றால் நாம் பயன் படுத்தும் சுண்ணாம்பு பொருளானது தொண்ணூறு முதல் தொண்ணூற்றி ஐந்து சதவீதம் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்டது ஆகும்.இவ்வாறு உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவங்களானது உலகெங்கும் பல பகுதிகளில் காணப் படுகிறது.
எனவே ஆழமற்ற கடல் பகுதியில் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவங்கள் கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.
ஏற்கனவே நான் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து பின்னர் தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அத்துடன் கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் காணப் படும் ராட்சத உப்புப் படிவங்கள் அடிப்படையில் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான சுண்ணாம்புப் படிவங்கள் காணப் படுவதற்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.
அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் அதே போன்று எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் பூமி முழுவதும் பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்புகின்றனர்.
அதன் பிறகு பல எரிமலைகளில் இருந்து வெளிவந்த கரிய மில வாயு வளி மண்டலத்தில் திரண்டதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும் ஆதனால் பூமியின் மேல் இருந்த பணிப் படலங்களானது உருகி பனிப் பாறைகளாக நகர்ந்து சென்று கடலில் கலந்ததாகவும் அப்பொழுது கடல் நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததால் கடல் நீரானது கண்டங்களின் மேல் வந்த பொழுது அதில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கண்டங்களின் மேல் படிந்ததாகவும் நம்புகின்றனர்.
மேலும் வளி மண்டலத்தில் இருந்த அதிகப் படியான கரிய மிலா, வாயு கடலில் கலந்து வந்ததும் காரணம் என்று நம்பப் படுகிறது,
ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பனிப் பந்து பூமி கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை ஏனென்றால் பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பனியால் மூடப் பட்டு இருந்தால் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி உதவியுடன் வாழ்ந்து வந்த பலவகை நுண்ணுயிரிகளும் பாசிகளை முற்றிலும் அழிந்திருக்கும்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை .பல லட்சம் ஆண்டு காலமாக பூமியின் மேல் பனிப் படலங்கள் நகர்ந்து சென்று இருந்தால் , பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்ட படிவுகளும் அழிந்து இருக்கும். அதுவும் நடக்க வில்லை.
எனவே பனிப் பந்து பூமி கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை.
வரிப் பட்டை இரும்பு படிவுகள்
சுண்ணாம்பை போலவே நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு இன்று உலகில் பல பகுதிகளில் பல நூறு அடி உயரத்திற்கு படிவுகளாக காணப் படுகிறது.
குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீள பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது.இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது.
இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது.ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது மூவாயிரத்தி அடி உயரத்துடன் மலையை போன்று உருவாகி இருக்கிறது.
தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.
370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது.எனவே 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது.
அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால் கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால் வளி மண்டலத்தில் இஇஇருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால் இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
எனது விளக்கம்
கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிவந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு பைடிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின.
அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது பெரும் அளவில் இருந்த கடலில் கலந்ததால் மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணையந்ததால் கடல் உருவானது அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில் பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறியதாக சம தளத்துடன் இருந்தது.
ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மெல்லுடலிகளின் புதை படிவங்கள் முதன் முதலில் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள எடியாக் காரா மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே வகை உயிரினங்களின் புதை படிவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அந்தப் புதை படிவங்கள் எல்லாம் எடியாக் காரா புதை படிவங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.
எடியாக் காரா காலத்தில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவான இனவகை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
முதல் பனிப் பந்து பூமி
முதலில் எடியாக் காரா காலத்தில்தான் மெல்லுடலிகள் கனினமான ஓடுகளை சுரந்து உடலைப் பாதுகாத்தால் அதன் புதை படிவங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.ஆனாலும் பூமியில் உயிரினங்கள் முன்னூறு கோடி ஆண்டிகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எடியாக் காரா காலத்திற்கு முன்பு அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் கிலோ மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது.இந்தக் கால பூமியானது பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது.
பல முறை ஏற்பட்ட பனிப் பந்து பூமி
வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் 250 கோடி முதல் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் படிய வைக்கப் பட்ட படிவுகள் காணப் படுவதற்கும் அந்த காலத்தில் பூமியெங்கும் பனிப் பதிவுகளால் மூடப் பட்டு இருந்ததாகவும் பின்னர் உருகி பணியாறுகள் நகர்ந்தாள் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது திடீரெட்னரு உயர்ந்து கண்டங்களின்ப மேலே வந்து சென்ற பொழுது ஆழமற்ற கடலால் பாடியவைக்கப் பட்டதாகவும் நம்பப் படுகிறது.
அதாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதாக நம்புகின்றனர்.
அதனால்தான் கண்டங்களின் மேல் காணப் படும் பதிவுகளுக்கு கடல் நீர் கண்டங்களின் மேல் வந்ததற்கு பனிப் பந்து பூமி கற்பனை விளக்கத்தைக் கூறுகின்றனர்.
உண்மையில் கண்டங்களும் கடல் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.அப்பொழுது கடல் மட்டம் உயரும் பொழுது கண்டங்களின் மேலே கடல் வருகிறது.அப்பொழுது கடல் உயிரினங்களால் படிவுகள் உருவாக்குகின்றன. அதன் பிறகு கண்டங்கள் உயரும் பொழுது படிவுகள் இறுகிப் படிவுப் பாறைகளாக உருவாக்குகின்றன.
இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்வதால் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமியின் மைய பகுதி பெருக்கமடைவதால் பூமியின் மேற்பரப்பானது உயர்கிறது அதே போன்று பிளவு பட்டுப் பிரிந்து விரிவடைகிறது.
விஞ்ஞானி.க.பொன்முடி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment