கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
தற்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைபடிவங்கள் அண்டார்க்டிகா ,ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
முதன் முதலில் இந்தக் கருத்தை முன்மொழிந்தவர் ஜெர்மன் நடைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர்.குறிப்பாக அவர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள,மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற விலங்கின் புதை படிவங்கள்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், அதன் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து பல கண்டங்களாக உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் அவரின் விளக்கத்தைப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.மாறாக கடல் பகுதிக்குத தற்செயலாக அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் தொற்றிய படி அந்த விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்று விளக்கம் கூறினார்கள்.
இந்த நிலையில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,அறுபது சத்தே வீதப் பகுதி பனியால் மூடப் பட்டு இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,பின்னர் அந்தத் தீவானது,வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.
வெக்னரின் இந்த விளக்கத்திற்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் மாற்று விளக்கத்தைக் கூற இயல வில்லை.
தொடர்ந்து வெக்னர்,ஒத்த கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்,
அதன் அடிப்படையில் அவர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,அந்தப் பருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பெருங்கண்டத்தைச் சுற்றி பாந்த லாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
குறிப்பாக அந்தப் பெருங் கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் விளக்கம் கூறினார்.
இந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியும் ஆசியக் கண்டத்தின் வட பகுதியான சைபீரியாவின் வட பகுதியும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டது.
இந்த நிலையில் அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,சைபீரியாவின் காக்க நாடு அற்றுப் பகுதியிலும் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு கடுக் குளிர் நிலவும் பனிப் பிரதேசத்தில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்கள் கூட்டம் எப்படி வாழ்ந்தது என்ற கேள்விக்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
ஒரு வேளை டைனோசர்கள் பனிச் சூழலில் வாழ்வதற்கு பழகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
ஆனால் ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை ஆனால் சைபீரியாவின் வட பகுதியில் உள்ள காக்க நாடு ஆற்றுப் பகுதியல் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,பூமியின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.மற்ற படி டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.
தற்பொழுது பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும் ,அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்ததால்,தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழ்ந்து இருக்க இயலாது.
ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது,வெப்ப நிலை மைனஸ் முப்பது டிகிரி முதல் மைனஸ் ஐம்பது டிகிரி வரை கீழே செல்கிறது.இது போன்ற குறைந்த வெப்ப நிலையில். மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரும் உறைந்து விடும். அதே போன்று தாவரங்களுக்கு உள்ளே இருக்கும் நீர் உறைந்து விடும்.எனவே தாவரங்களால் நீரை உறிஞ்ச இயலாது.எனவே தாவரங்களால் உயிருடன் இருந்திருக்க இயலாது.
இந்த நிலையில் துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
டைனோசர்கள் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரத்தை உண்ணக் கூடியது.எனவே துருவப் பகுதியில் டைனோசர் கூட்டத்துக்கு உணவளித்து இருக்கக் கூடிய அளவுக்கு அடர்ந்த காடுகள் இருந்திருக்க இயலாது.
எனவே டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளில்,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே பகலும் இரவும் மாறி மாறி ஏற்பட்டு இருக்கிறது.அதற்குக் காரணம் பூமியின் அச்சில் சாய்வு ஏற்படாமல் இருந்ததே காரணம்.
எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.
பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகில் சென்ற குருங்கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்க சாத்தியம் இருக்கிறது.
ஆனால் தற்பொழுது வெக்னர் கூறிய விளக்கதின் அடிப்படையிலேயே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்கின்றனர்.
குறிப்பாக பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டதுடன் இணைந்ததாகவும்,அதற்கு முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
தென் அமெரிக்கக் கண்டதைப் போலவே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று இந்தியக் கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக டைனோசர்கள் அழிந்த காலகட்டத்தில் ,இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தோல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர்.
குறிப்பாக பாலூட்டி விலங்கினங்களானது டைனோசர்கள் அழிந்த பிறகு வட பகுதிக் கண்டங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம் என்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்டையில் அசோக் சாகினி அவர்கள் நேச்சர் பத்திரிக்கைக்கு எழுதிய கடித்ததில்.ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அல்சிடெடோர் பிக்னியா என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக அந்த விலங்கின் இனவகைகளானது வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதண் அடிப்படையில் அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்று,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம் என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது அண்டார்க்டிகா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்ததே காரணம் என்பது,கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் பபுதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வலையைப் பகுதியில் அமைந்து இருக்கும் அலாஸ்காவின் வட பகுதியிலும் சைபீரியாவின் வட பகுதியிலும் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
-தொடரும்....
No comments:
Post a Comment