Tuesday, 23 December 2014

காணாமல் போன விமானங்கள்.

greenlandflight.jpggreenlandflight.jpg



உலகம் வெப்பமடைந்து கொண்டு இருக்கிறது.இதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி அடுக்குகள் உருகிக் கடலில் கலப்பதால்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று பரவலாகப் பிரச்சாரம் செய்யப் படுகிறது.
இதனால் கிரீன்லாந்து தீவில் உள்ள பனிப் பாறைகள் உடைந்து விழுகின்றன என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கிரீன்லாந்து தீவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு படிந்த பனிக் கட்டிகளை எடுத்து இருப்பதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் இது சாத்தியம் அல்ல என்பது ஒரு உண்மைச் சம்பவம் மூலம் தெரிய வந்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டு இருந்த பொழுது,அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்தும் போரில் குதித்தது.அப்பொழுது அமெரிக்க விமானப் படைக்கு உதவி செய்வதற்காக ஆயிரக் கணக்கில், B 38 ரக விமானங்கள் தயாரிக்கப் பட்டது.அதில் முதல் கட்டமாக ஆறு விமானங்கள்,மக்களின் பெருத்த ஆரவாரத்துக்கு இடையில்,போரில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டன.ஐரோப்பாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ,அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை அடைவதாகத் திட்டம்.ஆனால் கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக விமானத்தை பனிரெண்டாயிரம் அடி உயரத்துக்கு கொண்டு செல்ல விமானிகள் முடிவெடுத்தனர்.மிகவும் உயரத்தில் விமானங்கள் பறந்ததால் விமானங்கள் திசை மாறி சரியான பாதைக்கு வருவதற்கு சற்று நேரமாகி விட்டது.காலை மணி 7.15,எதிரில் என்ன இருக்கிறது என்றே தெரியாத அளவுக்குப் பனி மூட்டம்.பனி ஓரளவுக்கு விலகிய பொழுது,விமானங்கள் கிரீன்லாந்து தீவுக்கு மேலே பறந்து கொண்டு இருப்பது தெரிந்தது. 
அருகில் இருக்கும் விமான நிலையத்தை அடைய இரண்டரை மணி நேரமாகும்.
ஆனால் இருபது நிமிடம் பறப்பதற்கு மட்டுமே விமானத்தில்  எரி பொருள் இருந்தது.
வேறு வழியில்லாமல் கிரீன்லாந்து தீவின் பனித் தரையில் இறங்கி விடலாம் என விமானிகள் முடிவெடுத்தனர்.ஆனால் கீழே அந்தப் பனித் தரை விமானத்தை தாங்கும் அளவுக்கு உறுதியாக இருக்குமா? அல்லது விமானம் பனிக்குள்புதைந்து விடுமா? என்று உறுதியாகத் தெரியாத நிலையில் ,மெக் மானஸ் என்ற விமானி துணிச்சலாக விமானத்தை இறக்கினார்.அதிர்ஷ்ட வசமாக அந்தப் பனித் தரை விமானத்தை தாங்கும் அளவுக்கு உறுதியாக இருந்தது.உடனே மற்ற ஐந்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தரை  இறங்கின.உடனடியாக அங்கிருந்து கட்டுப் பாட்டு நிலையத்துக்கு செய்தி அனுப்பினார்கள்.
உதவி விமானம் ஒன்று பாரா சூட் மூலம் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவு,உடை மற்றும் மருந்துப் பொருட்களை இறக்கி விட்டுச் சென்றது.அத்துடன் அவர்களை மீட்டுச் செல்ல உதவிக் கப்பல் ஒன்று வந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கடற் கரைக்கு வந்து சேரும் படியும் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.
பதினோரு நாட்கள் கடும் பனிப் புயலுக்கு இடையே, பதினான்கு மைல் பயணம் செய்து, கடற்கரையில் காத்திருந்த உதவிக் கப்பலில் ஏறிய பிறகே அவர்களுக்கு மீண்டும் உயிர் வந்தது.
இதற்கிடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்ததால் உடனடியாக விமானங்களை மீட்க முடிய வில்லை.மாதங்கள் ஆண்டுகளாகி,ஆண்டுகள் கடந்து சென்று பத்து ஆண்டுகள் ஆகி விட்டது.போர் ஓய்ந்த பிறகே மறுபடியும் விமானங்களை மீட்பதற்கான பேச்சு தொடங்கியது.ஆனால் முடிவு எடுப்பதற்கு நாற்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகி விட்டது.
பாப் கார்டின் என்பவர் தலைமயிலான ஒரு மீட்புக் குழு,கிரீன்லாந்து தீவில் இறங்கி விமானனங்களைத்  தேடும் பணியில் ஈடு பட்டது.ஆனால் அங்குலம் அங்குலமாகத் தேடியும் விமானனங்கள் தட்டுப் பட வில்லை.ஒரு வேளை பனிப் பொழிவால் விமானங்கள் பனியில் புதைந்து இருக்கலாம் என்று காந்த மானிகள் மூலம் விமானங்களைத் தேடும் பணி தொடங்கப் பட்டது.அதிலும் தோல்வி கிட்டவே,அதி நுட்பமான ரேடார் கருவிகள் மூலம் தேடியதில்,தரையில் இருந்து இருநூற்றி அறுபது அடி ஆழத்தில் விமானம் புதைந்து இருப்பது தெரிய வந்தது.அதுவும் அந்த இடமானது விமானங்கள் தரை இறக்கப் பட்ட இடத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது.
ராட்சத பாய்லர்கள் மூலமாக வெந்நீரை ஊற்றி பனித் தரையில் துளையிட்டு,விமானம் பல பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு மேலே கொண்டுவரப் பட்டது.இந்த விமானங்களை உருவாக்க ஒரு லட்சத்தி முப்பத்தி நாலாயிரம் டாலர்களே செலவு ஆனது.ஆனால் மீட்பதற்கு,எண்பது லட்சம் டாலர்கள் செலவு ஆனது.தற்பொழுது இந்த விமானாங்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் கிரீன்லாந்து தீவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பனிப் பொழிவு ஏற்பட்டுக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.எனவே கிரீன்லாந்து தீவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிப் படிவுகள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருப்பது சாத்தியம் இல்லை என்று கருதப் படுகிறது.
மேற்கண்ட நிகழ்வு மூலம் ஐம்பது ஆண்டுகளில் பத்தாயிரத்தி நூற்றி இருபத்தி ஒரு அடி உயரத்துக்குப் பனி அடுக்குகள் உருவாகி இருக்கின்றன.உண்மை இவ்வாறு இருக்க,எப்படி ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு படிந்த பனிக் கட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்து இருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்தது.மேலும் கிரீன்லாந்து தீவின் ஓரப் பகுதியில் இருந்து சரிந்து கடலில் விழும் பனி பற்றி மட்டுமே சிந்திக்கப் படுகிறது.அனால் கிரீன்லாந்து தீவின் மத்தியப் பகுதியில் ஏற்படும் பனிப் பொழிவு மூலம் பனிப் படிவுகள் உருவாகுவது ஏன் ? என்று சிந்திக்கப் படுவதில்லை.எனவே உலகம் வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவது ஒரு மிகைப் படுத்தப் பட்ட பாரபட்சமான பார்வையே ஆகும்.
-விஞ்ஞானி.க.பொன்முடி எழுதிய பூமிப் பந்தின் புதிர்கள் புத்தகத்தில் இருந்து. 

No comments:

Post a Comment