Saturday, 19 November 2011
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
நம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதற்கு மடகஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்களே சிறந்த ஆதாரம்.
குறிப்பாக மடகாஸ்கர் தீவில் காணப் படும் தனி வகை லெமூர் குரங்கு இனம் உட்பட போசா போன்ற விலங்கினங்கள் எப்படி அந்தத் தீவை வந்தடைந்தன என்பது நீண்ட நாள் கேள்வியாக இருந்து வருகிறது.
மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதுடன் இந்த இரண்டு நிலப் பகுதிகளும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியாலும் பிரிக்கப் பட்டு இருக்கிறது.
மடகாஸ்கர் தீவில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு அந்தத் தீவானது பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும் அதன் பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்ததால் தீவுடன் சில விலங்கினங்களும் வந்து விட்டது என்று நம்பப் பட்டது.
ஆனால் மரபணு சோதனையில் லெமூர் குரங்கினமானது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியிருப்பது தெரியவந்திருகிறது.அதாவது தீவு பிரிந்த பிறகு ஏழரை கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் லெமூர் குரங்கினம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றி இருப்பது எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
எனவே லெமூர் குரங்குகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்து சென்ற மரக்கிளைகள் போன்ற மிதவைத் தாவரங்கள் மூலம் ஒரு வார காலம் கடலில் மிதந்து தற்செயலாக அந்தத் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் எடுக்கப் பட்டு இருக்கின்றன.
குறிப்பாக மடகாஸ்கர் தீவு குள்ள வகை நீர் யானைகளானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சியடைந்த விளகினம் ஆகும்.
அத்துடன் அந்த குள்ள நீர்யானைகள் நானூறு கிலோ எடையுள்ள விலங்கினம் ஆகும்.
மேலும் குள்ள வகை நீர் யானைகளால் நீர்பரப்பின் மேல் மிதக்கவோ நீந்தவோ இயலாது.
முக்கியமாக குள்ள வகை நீர் யானைகள் நானூறு கிலோ எடையுள்ள விலங்குகள் என்பதால் குரங்குகளைப் போன்று கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மூலமும் மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்க சாத்தியம் இல்லை.
எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்
இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையே மடகஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எழுப்புப் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
அத்துடன் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்களே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
அத்துடன் குள்ள வகை நீர் யானைகளானது ஆறு குளம் போன்ற நீர் நிலைகளில் வாழும் விலங்கினம் என்பதால் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் நிலப் பகுதிகளுக்கு இடையே ஆறு மற்றும் குளம் குட்டை போன்ற நீர் நிலைகள் இருந்து இருப்பதும் நிரூபணமாகிறது.
எனவே இரண்டு கோடி ஆண்டுகளில் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆகிய நிலப் பகுதிகள் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும், இடைப பட்ட நிலப் பகுதியானது உயராமல் இருந்திருப்பதும் நிரூபணமாகிறது.
அத்துடன் கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் நிரூபணமாகிறது.இவ்வாறு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்களே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
இவ்வாறு நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment