மடகஸ்கார் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது நம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
நீர் யானை இனமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சியடைந்த விலங்கினம்.
எனவே மடகாஸ்கர் தீவில் வாழ்ந்து மடிந்த நீர் யானைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவிற்கு வந்திருகின்றன.
ஆனால் மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டார் தொலைவில் அமைந்திருப்பதுடன் ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியல் பிரிக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் நீர் யானைகள் பெரும்பாலான நேரம் நீரில் ஆழமற்ற பகுதிகளில் கழித்தாலும் கூட நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்த இயலாது.
காரணம் நீர் யானைகளின் உடல் எடை ஆயிரத்தி நானூறு கிலோ முதல் மூவாயிரம் கிலோ வரை எடை உடையது.
எனவே நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது.
எனவே நீர் யானைகள் எப்பொழுதும் ஆழம் குறைவான நீர் நிலைப் பகுதிகளிலேயே காணப் படும்.மிகவும் அரிதாகவே ஆழமான பகுதிக்கு வரும்.
ஆனால் நீர் யானைகளால் அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் சுவாசிக்காமல் இருக்க முடியும்.
அதன் பிறகு நீர் யானைகள் சுவாசிப்பதற்கு நிச்சயம் நீர்ப் பரப்பிற்கு மேலே வந்தாகவேண்டும்.
நீர் யானைகளால் மிதக்க இயலாது என்பதால் நீர் பரப்பிற்கு மேலே வருவதற்கு நீர் யானைகள் தண்ணீருக்கு அடியில் தரையில் பின்னங் கால்களைக் கொண்டு உந்தி உந்திதான் நீரின் மேற்பரப்புக்கு வர இயலும் ஆனாலும் இருபது அடி ஆழம் வரையில் உயர்ந்து நீர்பரப்பிற்கு மேலே இயலும்.
மற்றபடி ஐம்பது அடி ஆழமுள்ள பகுதிகளில் நீர் யானைகள் ஒரு முறை மூழ்கி விட்டால் மறுபடி அதனால் நீர்ப் பரப்பிற்கு மேலே வர இயலாது.
ஆனால் நீர் யானைகளால் நீருக்கு அடியில் மணிக்கு ஐந்து எட்டு கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கவும் ஓடவும் இயலும்.
குறிப்பாக நீர் யானைகளால் அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரையிலும் சுவாசிக்காமல் இருக்கு முடியும் என்பதால் ஆழமான நீர் நிலையில் நீர் யானைகளால் அதிக பட்சம் நீருக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் வரை மட்டுமே செல்ல இயலும்.
மற்றபடி மணிக் கணக்கில் எல்லாம் நீர் யானைகளால் நீருக்கு அடியில் இருக்க இயலாது.
ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவு நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதுடன் ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கிறது.
எனவே தரைவழித் தொடர்பு இருந்திருந்தால் மட்டுமே நீர் யானைகளால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவிற்கு வந்திருக்க இயலும்.
குறிப்பாக மடகாஸ்கர் தீவில் காணப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்களின் அடிப் படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரியவந்திருகிறது.
எனவே மடகாஸ்கர் தீவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் நீந்தவோ மிதக்கவோ இயலாத குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதனால் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவிற்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதையுமே எடுத்துக் காட்டுகிறது.
-விஞ்ஞானி.க.பொன்முடி
No comments:
Post a Comment