பத்திரிக்கை செய்தி வெளியீடு.
விஞ்ஞானி.க.பொன்முடி,
சென்னை 600 034,
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.
பொருள்:நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படுவதற்கு , பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதே காரணம். ஆய்வில் கண்டு பிடிப்பு
நிலத்தில் வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளில் காணப் படுவதற்கு ஒன்றாக இருந்த கண்டங்கள் மற்றும் தீவுகள் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்ளும் பொழுதே நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே தரைவழித் தொடர்பு இருந்ததே விலங்கினங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு பரவியதற்கு காரணம்.
கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததற்கு மூன்று முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆதாரம்,1
நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கும் முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றிய விலங்கினம்.
நீர் யானைகளால் நீரில் நீந்த இயலாது.முக்கியமாக நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது.காரணம் நீர் யானைகள் மூவாயிரம் கிலோ எடையுள்ள விலங்குகள்.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டார் தொலைவில் இருக்கும் மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைபடிவங்கள் காணப் படுகின்றன.
எலும்புப் புதைபடிவங்களின் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த குள்ள வகை நீர் யானைகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவுக்கு வந்து சேர்ந்த பெரிய வகை நீர் யானைகளில் இருந்து தோன்றியது என விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.
முக்கியமாக ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் சைப்ரஸ், சிசிலி, மால்ட்டா,
மற்றும் கிரிட்டி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுகிறது.
ஆனால் சைப்ரஸ் தீவிற்கு நீர் யானைகள் எப்படி வந்தன என்பதை விஞ்ஞானிகளால் விளக்க இயலவில்லை.
நீரில் மிதக்கக் கூட இயலாத நீர் யானைகள் நிச்சயம் தரை வழியாகவே தீவு நிலப் பகுதிகளை அடைந்து இருக்க முடியும்.
எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததாலேயே தரை வழித் தொடர்பு வழியாகவே விலங்கினங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளுக்குப் பரவியிருப்பது, மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் உறுதியாகிறது.
ஆதாரம்,2
இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் படிவுகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே டைனோசர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும் கடலுக்கு அடியில் கிடைத்த
டைனோசரின் எலும்புகள் புதை படிவங்கள் மூலமும் உறுதியாகிறது.
ஆதாரம்,3
மேலும் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து எடுக்கப் பட்ட பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே விலங்கினங்கள் பல கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு முன்னொரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் சரியல்ல.
உண்மையில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு இடையே தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம்.
இந்த நிலையில் நிலப் பகுதிகளின் மத்தியப் பகுதியிலும் கூட... அதிலும் குறிப்பாக மலைகளின் மேலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
எனவே நிலப் பகுதிகள் யாவும் முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருந்திருகின்றன.தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயந்து இருக்கின்றன.
பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து, வெப்பமான வாயுக்கள் மற்றும் நீராவி எரிமலைகளின் வழியாக வெளியேறுகின்றன.
இதனால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால், பூமிக்கு அடியில் அடர்த்தி குறைவான புதிய பாறைத் தட்டுகள் உருவாகி மேல் நோக்கி உயருகின்றன.எனவே நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்கின்றன.
இவ்வாறு நிலப் பகுதிகள் ஆங்காங்கே மேல் நோக்கி உயரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையே ஏற்படும் உரசலால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது .
No comments:
Post a Comment