முதலைகள் வெப்ப மண்டலப் பகுதியில் வாழக் கூடிய விலங்கினம்.
ஆனால் வட துருவப் பகுதியில் அமைந்திருக்கும் எல்ஸ்மர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகளின் எலும்புப் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்து இருகின்றனர்.
மேலும் வட துருவப் பகுதியில் அமைந்திருக்கும் கிரீன்லாந்து தீவில் வண்ணத்துப் பூசிகள் பறந்த காடுகள் இருந்ததிற்கு ஆதாரமாக பைன் ஈவ் போன்ற மரங்களின் புதை படிவங்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.
மேலும் வடக்கு மற்றும் தென் துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் காடுகள் இருந்திருப்பதற்கு ஆதாரமாக டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.
எனவே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் பூமி அதிக வெப்பமாக இருந்திருப்பது விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
எனவே நம் பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக பத்தாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டிருக்கும் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்கள் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவது கடல் மட்டம் பத்தாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதையும் நிரூபிக்கிறது.
எனவே பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதற்கு கடல் பரப்பு அதிகரித்ததே காரணம்.
கடல் மட்டம் உயர்த்ததற்கும் அதிகரித்ததற்கும் கடலுக்கு அடியில் இருக்கும் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து சுரக்கும் நீர் கடலில் கலப்பதே காரணம்.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Sunday, 26 September 2010
Sunday, 12 September 2010
பூமி தன் அச்சில் சாய்ந்திருப்பது ஏன்?
பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் பூமியின் வடக்கு மற்றும் தென் துருவப் பகுதிகளில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கிறது.
ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருந்திருக்கின்றன.
அத்துடன் பகல் வாழ்க்கை வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்களும் வட துருவம் மற்றும் தென் துருவப் பகுதிகளில் காணப் படுகிறது.
சூரிய ஒளியின்றி நிச்சயம் ஆறுமாத கால இரவுக் காலத்தில் அடர்ந்த காடுகளும் டைனோசர்களும் உயிர் வாழ்ந்திருக்க இயலாது.
எனவே இந்த காலக் கட்டத்தில் பூமி தன் அச்சில் சாய்ந்திருக்காமல் இருந்திருந்தால்தான் துருவப் பகுதிகளில் ஒளி நேரடியாகப் பட்டு டைனோசர்கள் கூட்டதுடன் வாழ்ந்த அடர்ந்த காடுகள் இருந்திருக்க இயலும்.
எனவே ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமி தற்பொழுது இருப்பதைப் போன்று தன் அச்சில் இருபத்தி மூன்று பாகை சாய்ந்திருக்கிறது.
இவ்வாறு பூமி தன் அச்சில் சாய்ந்ததற்கு, சூரியனால் ஈர்க்கப் பட்ட ஒரு
கிரகம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் குறுக்கிட்டிருக்க வேண்டும்.
அது நிலவாகவும் இருக்கலாம்.
அல்லது வெள்ளி கிரகமாகவும் இருக்கலாம்.
காரணம் சூரியனால் ஈர்க்கப் பட்டு பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படும் அளவுக்கு அருகில் வந்த கிரகம் மறுபடியும் சூரியனின் ஈர்ப்பு விசையை விட்டு விலகிச் செல்வது கடினம்.

Subscribe to:
Posts (Atom)